கடவுளும் மதமும்

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு கடவுளை விட, கடவுளின் பெயரால் செய்யப்பட்ட மூடநம்பிக்கைகளும், பார்ப்பன ஆதிக்கமுமே என்பது எவருக்கும்தெரியாததல்ல. திராவிட அரசியலின் அடிநாதமே இந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதும்தான்.

ஆனால் சமீப காலமாக ஒரு புது மாதிரியான கடவுள் மறுப்புவாதிகளை பார்க்கிறேன். பெரும்பாலும்பார்ப்பனர்களைக் கொண்ட இந்த வகை கடவுள் மறுப்புவாதிகளை முதலில் வெளியிலிருந்து பார்த்த போது, ஒருவேளை இவர்களெல்லாம்நாம் எதிர்பார்த்த சமநிலையான புதிய சமூகத்தின் முன்னோர்களோ என நினைக்கத் தோன்றியது. அவர்களிடம் இந்து மதத்தினைப் பற்றி பேசும் வரை.

இவர்களை பொருத்தவரை, இந்து மதம் என்பது வாழும் வழிமுறையாம். கடவுள் மறுப்புக்கும் இந்து மத நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். ஆனால் அதே சமயம் கிருத்துவ, இஸ்லாமிய சமயங்களை பின்பற்றுவது முட்டாள்தனமாம். இதைக் கேட்டவுடன் புதிய சமூகத்தின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் தளர்ந்தது எனக்கு.

இவர்களுக்கும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தொண்டர்களுக்கும் பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்கள் படித்த ஆதிக்கவாதிகள் அவ்வளவுதான். இவர்களைப் போன்ற ஆட்களிடமிருந்து உண்மையான பகுத்தறிவாளிகளை இனம் காண்பது சற்றே கடினம்தான்.

கடவுளை ஒழித்தால் சாதிகளை அழித்துவிடலாம் எனத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையை கையிலெடுத்தார் பெரியார். ஆனால் இப்போதோ கடவுளைக் கூட ஒழித்துவிடலாம் ஆனால் சாதியையும் அதன் காரணியாக விளங்கும் மதத்தையும் ஒழிக்க முடியாது போல.

Advertisements
கடவுளும் மதமும்

வணக்கம் மக்களே!!

அது ஒன்னும் இல்ல.. Hello World post – அ தமிழ்ப்படுத்தி  இருக்கேன் அவ்வளோதான்.. :).. அப்புறம் என்னங்க தமிழ்ல எழுதறதுன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் மொத போஸ்டே இங்கிலிஷா never ..

வணக்கம் மக்களே!!