கோ – ஒரு பார்வை

முதலில் உலகக் கோப்பை, அதற்கு பிறகு தேர்தல் என பல காரணங்களால் தள்ளிவைக்கப் பட்ட பெரிய படங்களில் ‘கோ’ வும் ஒன்று. இந்த கோடை விடுமுறைக்கு வரப்போகும் நல்ல படங்களுக்கான ஆரம்பம் என்றால் நிச்சயம் வரவேற்புக்குரியதுதான்.

சினிமாவில் பத்திரிக்கை, ஹீரோ பத்திரிக்கையாளன், வில்லன்கள் அரசியல்வாதிகள் என நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றனதான். எனவே கதை ஒன்றும் புதிதில்லை. ஆனால் சொன்ன விதம் புதிது.

முதல் காட்சியில் பத்திரிக்கை புகைப்படக் கலைஞராக வரும் ஜீவா பறந்து பறந்து படமெடுப்பதைப் பார்த்தவுடனே இன்னொரு ஹீரோயிசப் படமோ என பயந்து போனேன். நல்லவேளையா கேவி ஆனந்த் அந்த மாதிரி எதுவும் சொதப்பவில்லை.

ஹீரோ ஜீவா. பஞ்ச் டயலாக், பாய்ந்து பாய்ந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் இல்லாத ஒரு கமர்சியல் படத்தில் நடித்ததற்காக முதலில் அவரைப் பாராட்ட வேண்டும். மற்றபடி சவாலான ரோல் எல்லாம் இல்லை. கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்.

ஹீரோயின்கள் கார்த்திகா, பியா. கதையைப் பொருத்தவரை கார்த்திகாவுக்குத்தான் முக்கியமான ரோல் என்றாலும் சொதப்பலான நடிப்புதான். சில காட்சிகளில் முகத்தில் எந்தவிதமான பாவனைகளுமில்லாமல் நிற்கும் காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார். பியாவைப் பொருத்தவரை பரவாயில்லை. அரசியல், பத்திரிக்கை என பரபரப்பாக செல்லும் படத்தின் மென்மையான சிலக் காட்சிகள் இவர் வருமிடங்கள் மட்டுமே.

பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாசராவ் போன்றவர்கள் சிஎம், எதிர்கட்சித் தலைவர் என்ற கேரக்டர்களின் முக்கியத்துவத்துக்காக மட்டுமே நடித்திருக்கின்றனர் என நினைக்கிறேன். படத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையுமில்லை. அஜ்மலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம். நிறைவாக செய்திருக்கிறார்.

தமிழ் பத்திரிக்கை அலுவலகம் இவ்வளவு மாடர்னாக இருக்குமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்லவேண்டும். இன்றைய அரசியலின் அவல நிலையை படம்பிடித்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது ஆச்சரியம்தான். படத்தை வாங்கி, தேர்தல் முடியும் வரை கிடப்பில் போட்டதுகூட ராஜதந்திரமோ?

இறுதியில் வரும் திருப்பங்கள் என்னதான் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டினாலும், சொல்லவந்த விஷயத்தை சரியாக சொல்லமுடியாமல் ஆக்கிவிடுகிறது. இளைஞர்கள் கையில் நாடு செல்லவேண்டுமென சொல்ல நினைத்திருந்தால், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் படத்தை முடித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அதில் ஒருத்தன் தவறானவன் அது இது என இழுத்திருப்பது எதற்காக எனத் தெரியவில்லை.

ஹாரிஸ் வருசத்துக்கு ஒரு மெலடி போட்டுடறார். இந்த வருஷத்துக்கு ‘என்னவோ ஏதோ’. அயன் படத்தில் சம்பந்தமில்லாத இடத்தில் வரும் நெஞ்சே நெஞ்சே பாடல் போல இதிலும் தேவையில்லாத இடத்தில் ஒரு பாடல் வருகிறது. என்னதான் பாடல்கள் ஹிட்டானாலும், கட்டாயம் எல்லா பாட்டையும் படத்தில் வைக்கவேண்டுமா என்ன?

‘கோ’ பொழுதுபோக்கிற்கான ஒரு படம். வேறு ஒரு நல்ல படம் வரும்வரை தாராளமாக கோ‍ பார்க்கலாம்.

Advertisements
கோ – ஒரு பார்வை

4 thoughts on “கோ – ஒரு பார்வை

  1. ரிஷி சொல்கிறார்:

    //இளைஞர்கள் கையில் நாடு செல்லவேண்டுமென சொல்ல நினைத்திருந்தால், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் படத்தை முடித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அதில் ஒருத்தன் தவறானவன் அது இது என இழுத்திருப்பது எதற்காக எனத் தெரியவில்லை.//

    தெரியவில்லையா?? தெரிந்துகொள்ளுங்கள். படத்தைத் தயாரித்திருப்பது மு.க.ஸ்டாலின் மகன். இளையசக்தி அரசியலில் திரண்டெழுவதை பழைய திராவிட திமிங்கலங்கள் விரும்பவில்லை. அப்படி இளையசக்தி திரண்டெழுகிறதென்றால் அதற்கு சுயநலமே காரணமாகும்.. அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்யவே இந்தப்படம். இதன்மூலம் மக்களின் சிந்தனையை நீர்த்துப் போகச்செய்தால் அது உதயநிதிக்குக் கிடைத்த வெற்றியாகும்!!

    1. Anbu சொல்கிறார்:

      படம் எடுத்து முடிச்சதுக்கப்புரம்தான் உதயநிதி படத்தை வாங்கியதாக கேள்விப்பட்டேன். கதையில் ஒரு திருப்பம் வேணுமென்பதற்காக தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட காட்சி எனத்தான் நினைக்கிறேன். இதில் கூடஅரசியல் உள்நோக்கம் இருக்குமென எனக்கு தோணவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s