எனதருமை வாக்காளப் பெருமக்களே!!

தேர்தல் ஜுரம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல பரவும் நிலையில் இந்த கோஷங்களை இனி நிறையக் கேட்கப் போகிறோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தலைப் பற்றிய எனது கருத்துக்களை பகிர ஒரு பதிவு.

ஒருபக்கம் திமுக. குடும்ப அரசியலில் மூழ்கிப்போன இவர்களின் குடும்ப ஆதிக்கம் இந்த முறை மிகத்தெளிவாக தெரிந்தது. சினிமா மூலம், சாதாரண மக்களுக்கும் இவர்களது ஆதிக்கம் தெளிவாகத் தெரிய இவர்களே காரணமாகிவிட்டனர். மேலும் இந்த காலேஜை கனிமொழி வாங்கிட்டாங்க, இந்த காலேஜை ஸ்டாலின் வாங்கிட்டார் என ஏகப்பட்ட வதந்திகள்(?) தமிழகமெங்கும். இதுமட்டுமில்லாமல் 2G ஊழல்வேறு. 2G ஊழல் கிராம மக்களுக்குப் புரியாது என திமுக நினைப்பதாக சமீபத்தில் ஒரு செய்திதாளில் படித்தேன். ‘ஏன் சார், 1,75,0000 கோடி ஊழல் எனச் சொன்னால் நம்ம மக்களுக்குப் புரியாதா என்ன? எப்படி நடந்துச்சுன்னு எல்லாம் யாரும் யோசிக்க மாட்டாங்க.’ இதெல்லாம் போக காங்கிரஸ். எனக்கு தெரிந்தவரை இவ்வளவு பிரச்சினைக்குப் பிறகும் காங்கிரஸின் பேச்சுக்கெல்லாம் திமுக தலையாட்டுவதற்கு 2G ஊழலைத் தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குள்ள சந்தேகமெல்லாம், 63 தொகுதியில் போட்டியிட காங்கிரஸிடம் தலைவருங்க இருக்காங்களா?

அதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக என பலகட்சி கூட்டணி. சீமான் ஆதரவு என அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசம் எனப்பலரும் எண்ணும் வகையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் ஜெயலலிதாவின் வழக்கமான நடவடிக்கைகள் அனைத்து சாதகங்களையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.  திமுகவின் ஊழல்களைப் பிரதானப்படுத்தி பிரச்சாரம் பண்ண அதிமுக ஒண்ணும் யோக்கியமானக் கட்சியில்லை. ‘இரண்டு பேருமே கொள்ளையடிக்கறவங்கதான். திமுக வந்தாலாவது கொஞ்சமாவது செய்வாங்க, இந்த அம்மா எதுவும் செய்யாது.’ என சொல்லுபவர்கள் நிறய பேரைப் பார்த்திருக்கிறேன். தேமுதிகவுக்கு கிடைத்த 8% வாக்குகளும், திமுக, அதிமுக இரண்டையும் பிடிக்காதவர்கள் போட்டதே தவிர, விஜயகாந்தை பிடித்தவர்கள் போட்ட வாக்குகள் இல்லை என்பதை ஏன் பலபேர் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்களென்று தெரியவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஜெயலலிதா காட்டிய அக்கறை தேர்தலுக்கானது என்பதை காங்கிரஸுடன் கூட்டுசேர முயன்றதிலேயே புரிந்துகொள்ள முடிந்தது

என்னைப் பொறுத்தவரை இரண்டு பேருமே உருப்படியில்லை. இரண்டுமே ஊழல் நிறைந்த கட்சிகள்தான். இரண்டும் தமிழர்களுக்காக எதுவும் செய்ததில்லை. இரண்டுக் கட்சிகளையும் பார்த்துப் பார்த்து சலிச்சுபோச்சு. மூன்றாவது அணி வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டவங்களில் நானும் ஒருவன். கடைசியா வைகோவாவது தனியா நிப்பாருன்னு நம்பினேன். மதிமுக தனித்து நின்று சீமான், நெடுமாறன் உள்ளிட்டவர்கள் ஆதரித்தால் ஓரளவு வாக்குகளைப் பெறுவார் என நினைத்தேன். அது நடக்காமல் போய்விட்டது.  ‘இரண்டு திருடர்களில், எவன் உன் வீட்டை கொள்ளையடிப்பது எனத் தேர்ந்தெடுக்க சொல்லும் தேர்தல்தான் இது‘ என்பது என் கருத்து.

இப்படி ஒரு நிலையில் கட்டாயம் வாக்களித்தே ஆகவேண்டுமா என்ன?  மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் கூட வாக்களிக்கவில்லையென்றால் அந்த வாக்குப்பதிவே செல்லாது என சட்டம் இருக்கின்றது. எனவே, யாருமே வாக்களிக்காமல் புறக்கணித்தால் இந்தக் கட்சிகளுக்கு மக்களின் மனநிலையை புரியவைக்க முடியும். ஆனால் நம் மக்கள் செய்வார்களா? சந்தேகம்தான்.

49(O) இருக்கிறதே என சொல்லுபவர்களுக்கு ஒரு விஷயம். உங்க எலெக்ஷன் பூத்துக்கு போய் எல்லாக் கட்சிக்காரங்க முன்னாடியும் போய், எனக்கு 49(O) ஃபார்ம் கொடுங்கன்னு கேட்டுப் பாருங்க. எப்படியும் ஒரு கட்சிக்காரன் ஜெயிக்கத்தான் போறான். அவன் மூலமாக வரும் தொல்லைகளுக்கு பயந்துதான் பலரும் 49(O) போட நினைத்து வீட்டிலேயே இருந்துவிடுகிறார்கள். 49(O) வையும், வாக்கு இயந்திரத்தில் ஒரு பட்டனாக வைத்துப் பார்க்கட்டும். அப்புறம் தெரியும் இந்தக் கட்சிகளைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் உண்மையான எண்ணங்கள்.

Advertisements
எனதருமை வாக்காளப் பெருமக்களே!!

5 thoughts on “எனதருமை வாக்காளப் பெருமக்களே!!

 1. adhiyamaan சொல்கிறார்:

  மாமா தி.மு.க. நினைப்பது சரி தான் .கிராமத்து மக்களுக்கு எதோ ஒரு சிலருக்கு தான் இந்த செய்தி தெரிஞ்சிருக்கு ………, என்னுடைய நண்பர்களிடம் இதபத்தி கேட்டா ….கருணாநிதி எல்லாம் நல்லவருதன்னு சொல்றானுங்க ……..அப்டீன்னா அவங்க வீட்டிலையும் இதே கருத்து தான் நிலவுது …

  1. Anbu சொல்கிறார்:

   எல்லோரும் அப்படி கிடையாது. செய்தித்தாள் பார்க்கிற அத்தனை பேருக்கும் இதுபற்றி தெரிந்துதான் இருக்கும். எனக்குள்ள பயமெல்லாம், கடந்த தேர்தலைப் போலவே இலவசங்களைக் காட்டி இவர்கள் வெற்றிபெற்றுவிடுவார்களோ என்றுதான்..

 2. kanagu சொல்கிறார்:

  கடைசி வார்த்தைகள் உண்மை… அத ஏன் வாக்கு இயந்திரத்துல கொண்டு வர மாட்டேன்ங்குறாங்க-னு தெரியல… ஏதேதோ மாற்றம் எல்லாம் தேர்தல் ஆணையம் பண்றாங்க. இது மட்டும் முடியலையா???

  1. Anbu சொல்கிறார்:

   பரவில்லை விடுங்க. இப்ப பக்கத்தில கேரளாவிலதான இருக்கீங்க, இனிமேல் சரியான நேரத்துக்கு வந்து அட்டென்டன்ஸ் போடுங்க… 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s