வலை விரிப்பவர்களுக்காக வலையுலகின் ஒரு போராட்டம் #TNFISHERMAN

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவனுக்கு பிரச்சினையா, உடனே ஓடுகிறார் நம் வெளியுறவு அமைச்சர். இனி எந்த மாணவனுக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என உறுதியாக எச்சரிக்கை விடுப்பதோடு அதை நடைமுறைப் படுத்த தேவையான அனைத்தையும் செய்கிறார். இந்திய மீடியாவில் ஒரு மாதத்திற்கு இதுதான் செய்தி. எங்கெங்கும் போராட்டம், இந்தியாவே கிளர்ச்சியடைவதாய் காட்டப்படும் செய்திகள்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்ட பலகலைக்கழகத்தில் படிக்க சென்றிருந்த மாணவர்களை வேறு கல்லூரியில் சேரும்வரை எந்த தவறுகளிலும் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் வகையில் ஒரு கருவியை மாட்டியது அவர்கள் அரசு. உடனே இந்தியர்களுக்கே அவமானம், இந்தியாவுக்கே அவமானம். இந்தியர்கள் கொதித்தெழுகிறார்கள் என செய்தி ஒளிபரப்பும் மீடியாக்கள், இந்திய அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுத்தவுடன்தான் அமைதியாகின்றன.

பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு பிரச்சினை எனும்போதும், ஃபிரான்ஸில் அவர்கள் நாட்டுக் குடிமகனாக வாழும் சீக்கியர்கள் டர்பன் அணியக்கூடாது என தடை அறிவிப்பு யோசனை வந்த போதிலும், நமது பிரதமர் உடனே குரல் கொடுக்கிறார்.

ஆனால் இங்கே இந்தியாவில் வாழும் ஏழை இந்தியக் குடிமகனான மீனவனை நமது நட்பு நாடு, நல்லுறவு நாடு என சொல்லப்படும் இலங்கை கடற்படையினர் கொன்று குவிக்கின்றனர், கேட்பதற்கு இந்த அரசுக்கு திராணியில்லை. தமிழினத் தலைவர் என சொல்லிக்கொல்லும் நமது முதல்வரோ, ஒரு கடிதம் அனுப்பிவிட்டு, இழப்பீட்டுத் தொகை அதிகரித்து வழங்கிவிட்டால் பிரச்சினை முடிந்ததாக இருந்து கொள்கிறார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் கட்சிக்கார ராசாவை காப்பாற்றவும், தேர்தல் சீட்டுப் பிரிப்பு சம்பந்தமாகவும் எத்தனை முறை வேண்டுமானால் டெல்லி செல்லமுடியும் இவரால். ஆனால் தமிழர் பிரச்சினையில், கடிதமோ தந்தியோ போதும். அதில் கூட இவர் கெஞ்சிதான் கேட்டுக்கொள்வார். அடித்துக் கேட்டால், இவர் கட்சிக்காரர்கள் அடித்ததையெல்லாம் காப்பாற்றமுடியாதே என்ற பயம் காரணம் என நினைக்கிறேன்.

எதிர்க்கட்சி மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இது போன்ற விஷயங்கள் நடந்து கொண்டுதானிருந்தன. அவர் ஆட்சியிலிருந்தால், இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணமே பிரபாகரனும், விடுதலை புலிகளும்தான் என இப்போதும் கூறுவார்.

தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை இந்திய அரசாங்கமும், சிங்கள கப்பற்படையினரும் தாண்டிவிட்டனர். இனியும் இந்த அரசாங்கம் எதுவும் செய்யும் என நம்பி பயனில்லை என உணர்ந்த நாம், அரசுக்கும் இதை உணர வைக்க வேண்டியது அவசியம்.

வட இந்தியர்களுக்கு வெளி நாடுகளில் சிறு பிரச்சினை என்றாலும் அதை நாள் முழுக்க ஒளிபரப்பி அரசின் கவனத்தை ஈர்க்க வைக்கும் இந்திய ஊடகங்கள் எதுவும் மீனவர் பிரச்சினையை பல நேரங்களில் ஒரு நிமிட செய்தியாகக் கூட சொல்லவில்லை.

எனவே இந்த பிரச்சினையின் தீவிரத்தை இனியும் உணரவைக்காமல் இருப்பது தவறென உணர்ந்த நண்பர்கள் சிலரின் முயற்சிதான் இந்த டிவிட்டர் மற்றும் வலையுலக பிரச்சாரம். #TNFISHERMAN என்ற குறிசொல்லுடன் உங்களின் கருத்துக்களை டிவிட்டரில் சொல்லுங்கள். இந்த முயற்சிக்கு ஏற்கனவே சற்று பலன் கிடைத்திருக்கிறது. வட இந்திய ஊடகங்கள் பலவற்றில் இந்த பிரச்சினை பற்றிய செய்தியை காணமுடிகிறது இப்போது. இதுவரை இதை செய்யாதவர்கள் உடனடியாக உங்கள் எதிர்ப்புக‌ளை #TNFISHERMAN குறிச்சொல்லுடன் டிவிட்டரில் பதியுங்கள்.

ஒரு காஷ்மீரி கொல்லப்பட்டாலும், ஊரே திரண்டு போராடும் அவர்களின் கோபத்தில் ஒரு பகுதியாவது நமக்கு இருக்க வேண்டும். அவர்களைப்போல உடனடியாக வன்முறையில் இறங்கத் தேவையில்லை. முதலில் அறவழியில் பிரச்சினையின் முக்கியத்துவத்தை அரசுக்கும், மற்றவர்களுக்கும் உணர்த்தும் முயற்சிதான் இது. உங்களால் ஆனதை செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு: http://www.savetnfisherman.org/

                                                        http://savetnfisherman.blogspot.com/

Advertisements
வலை விரிப்பவர்களுக்காக வலையுலகின் ஒரு போராட்டம் #TNFISHERMAN

10 thoughts on “வலை விரிப்பவர்களுக்காக வலையுலகின் ஒரு போராட்டம் #TNFISHERMAN

  1. Anbu சொல்கிறார்:

   முகுந்தன் இவையெல்லாம் நமக்கு இன்னும் இருக்கிறது என உணர்த்தத்தான் இந்த போராட்டம். அனைவரும் கலந்துகொள்வார்கள் என நம்புவோம்.. வருகைக்கு நன்றி.. 🙂

 1. […] This post was mentioned on Twitter by tnfman, Anbazhagan Raju. Anbazhagan Raju said: வலை விரிப்பவர்களுக்காக வலையுலகின் ஒரு போராட்டம் #TNFISHERMAN http://wp.me/p12Itx-9o […]

 2. adhiyamaan சொல்கிறார்:

  அன்பு மாமா நீங்கள் தமிழர் தானே ?அப்போது என் முதல் இரண்டு பத்திகளில் ஊடகங்கள் என்பதை மீடியா என்னும் ஆங்கில வார்தையில் எழுதியுள்ளீர் .ஐந்தாவது பத்தியில் ஸ்பெக்ட்ரம் என்றும் ஆறாவது பத்தியில் விஷயம் என்றும் கூறியுள்ளீர் .விஷயம் என்ற சொல்லுக்கு செய்தி என்றே கூறியிருக்கலாமே .இனிமேலாவது இந்தமாதிரி தமிழரா இருந்துகிட்டு தமிழ் எழுதரதுள்ள தப்பு பண்ணாதிங்க .

 3. கடலே கொதித்து எழுந்து, இவர்களை ஒரு வழி செய்தல் மட்டுமே எதாவது நடக்கும்.

  நம் ஆட்சியாளர்களை நம்பி பத்து பைசாவிற்கு உபயோகம் இல்லை.

  1. Anbu சொல்கிறார்:

   அதற்காக நம் எதிர்ப்பை நாம் பதிவு செய்யாமல் இருந்தால் நம்மை முதுகெலும்பில்லாதவர்கள் என நினைத்து இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்ப்பார்கள். நாம் அனைவரும் கொதித்தெழுந்தால், நியாயமான முறையில் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தினால், அதை சரி செய்வதைத் தவிர ஆட்சியாளர்களுக்கு வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

 4. adhiyamaan சொல்கிறார்:

  அன்பு மாமா! நீங்க திருத்தி கொள்கிறேன்னு சொல்லிட்டு மறுபடியும் சார்ன்னு ,சொல்லியிருக்கிறீங்களே ஐய்யா என்று சொல்லியிருக்கலாமே !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s