என்னக் கொடுமை சார் இது?

கொஞ்ச நாளைக்கு முன்னால் நம்ம ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச ‘நாயகன்’ படம் கலைஞர் டிவியில பார்த்தேன். (மொக்கைப் படத்த பார்த்துட்டு வந்து அதைப் பத்தி பதிவு வேற‌யா?) படம் எதிர்பார்த்ததைவிட நல்லாவே இருந்தது. எந்த ஹாலிவுட் படத்தோட காப்பின்னு தெரியல. Cellular ஹாலிவுட் படத்தின் காப்பிதான். (பின்னூட்டத்தில் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.)

படத்தில சங்கீதாவை வில்லன் கும்பல் கடத்திட்டு போயிடுவாங்க. அங்க இருக்கிற ஒரு உடைந்த ஃபோனை வைத்து கால் செய்யும் போது அது ரமணாவின் செல்போனுக்கு செல்ல, அவரிடம் நிலைமையை சொல்லி உதவி கேட்பதாக படம் போகும். நல்லா விறுவிறுப்பா, இடையிடையே இருக்கும் நம்ம ரித்தீஷின் ஹீரோயிஸத்தை தவிர படம் நல்லா பார்க்கிற மாதிரிதான் இருந்தது.

ஆனா விஷயம் அது இல்லை. போன வாரம் கே டிவியில் எஸ்.வீ.சேகர் பையன் அஷ்வின் நடிச்ச ‘வேகம்’ படம் போட்டு இருந்தாங்க (உன்னை யார்றா இந்த மாதிரி படமெல்லாம் பாக்க சொல்லறது?). நான் உடனே சேனலை மாத்த போனேன். ஆனா இதில் குஷ்பூ அதே மாதிரி உடைஞ்ச ஃபோனை வச்சிக்கிட்டு ஹீரோக்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. என்னடா அதே ஐடியாவை காப்பி அடிச்சிருக்காங்க போலன்னு நினைச்சு படத்தை பார்த்தால், படம் முழுக்க காட்சிக்கு காட்சி அப்படியே நாயகன் படமும் இதுவும் ஒண்ணேதான்.

ரமணாவுக்கு பதிலா அஷ்வின், சங்கீதா கேரக்டரில் குஷ்பூ, ரித்தீஷ் கேரக்டரில நம்ம பிரபு, நாயகன் சென்னையில நடக்கிற கதைன்னா, வேகம் சிங்கப்பூரில நடக்கிற கதை. இவ்வளவுதான் வித்தியாசம். நாயகன் படத்தில் காமடிக்காக, மயில்சாமியோட வண்டிகளை ஒவ்வொருதடவையும் ரமணா தூக்கிட்டு போவார். வேகம் படத்தில் எஸ்.வீ.சேகர் வண்டியை ஹீரோ தூக்கிட்டு போவார்.

வேகம்தான் முதலில் வந்துச்சுன்னு நினைக்கிறேன். அந்த படத்தை யாருமே பாக்காமதான் ஃப்ளாப் ஆச்சு அதனால தைரியமா(?) அந்தப் படத்தை அப்படியே எடுக்கலாம்ன்னு நாயகன் டைரக்டர் நினைச்சாரா, இல்லை ஏற்கனவே காப்பி அடிச்சது தெரியாம, மறுபடியும் அதே ஹாலிவுட் படத்தை இன்னொரு தடவை காப்பி அடிச்சிட்டாரான்னு தெரியல.

அது எப்படீங்க ஒரு சீன் கூட மாறாம காமெடியில இருந்து எல்லாத்தையும் அப்படியே வச்சு ஒரு ரெண்டு வருஷ கேப்பில ரெண்டு படம் எடுத்திருக்காங்க. படத்து கதையை கேட்டவங்க கூடவா சொல்லியிருக்க மாட்டாங்க, இந்த படத்தை ஏற்கனவே ஒருத்தர் தமிழில் காப்பி அடிச்சாச்சுன்னு?  இவங்க மாதிரி ஆளுங்கக்கிட்ட இருந்து தமிழ் சினிமாவை யாரு காப்பாத்தறது?

Pictures: sulekha.com, oneindia.in

Advertisements
என்னக் கொடுமை சார் இது?

6 thoughts on “என்னக் கொடுமை சார் இது?

  1. kanagu சொல்கிறார்:

    சார்.. நீங்க வெட்டியா இருக்கீங்க-னு ஒத்துகுறேன்… அதுக்காக போடுற மொக்க படம் ஒண்ணு கூட விடாம பாக்குறது கொஞ்சம் கூட சரி இல்ல… 🙂

    1. Anbu சொல்கிறார்:

      என்ன பண்ணறது கனகு. எப்ப பார்த்தாலும் மொக்கை படமா போடறாங்களே டிவிக்காரங்க அவங்களை நிறுத்த சொல், நானும் நிறுத்தறேன்.. இந்த மாதிரி பதிவு போடறத.. :‍)

  2. adhiyamaan சொல்கிறார்:

    நானும் எந்த படத்தையெல்லாம் எங்கிருந்து காப்பியடிக்கிராங்கன்னு சொல்ற குரூப்இல்ல சேரலாம்ன்னா எந்தப் படம் எதோட காப்பிய்யுன்னே தெரியுள்ள .நீ ஒரு படத்தக் கண்டு புடிச்சு அந்த குரூப் இல்ல சேந்துட்ட ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s