எதற்காக பந்த்?

புத்தாண்டு யாருக்கு எப்படியோ என் வலைப்பதிவுக்கு சரியானதாக இல்லை. இந்த ஆண்டின் முதல் இடுகையே இதுதான்.

கடந்த சனிக்கிழமை, இங்கே பெங்களூரில் வேலை நிறுத்தம். ஆளுங்கட்சியின் பந்த் என்பதால் அரசு பேருந்துகளும் ஓடவில்லை. நான் கேள்விப்பட்டவரை வேலைநிறுத்தம் என்பது அரசு அல்லது அதிகார வர்க்கத்தினரின் செயலை எதிர்த்து பொது மக்கள் நடத்தும் ஒரு போராட்டம். ஆனால் இப்போதெல்லாம் அரசே இந்த போராட்டத்தை நடத்துவது கேலிக்கூத்து.

அதுவும் ஏதாவது நியாமான காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியிருந்தால் கூட பரவாயில்லை. அதுவுமில்லை. எடியூரப்பாவின் ஊழலை விசாரிக்க ஆளுனர் அனுமதி கொடுத்ததில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

போராட்டத்தின் போது ஒரு பாஜக நிர்வாகி சொல்லுகிறார், ‘இப்படியே போனால், நாளை ஒரு சாதாரண ஆள் கூட முதலமைச்சர் மீது வழக்கு போட முடியும். இது நடக்க கூடாது’.

முதலமைச்சர் என்றால் அவர் இப்படிப்பட்ட விசாரணைக்கெல்லாம் அப்பாற்பட்டவரா? அந்த சாதாரண மனிதனின் ஓட்டுக்கள்தானே இவரை முதல்வர் ஆக்கியது.

இந்திய அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாத செயல்களை, பாஜக இந்த விவகாரம் மூலம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம், ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றில் அமைச்சர்கள் மேல் விசாரணை கோரும் இவர்கள், இங்கே விசாரணை என்றால் மட்டும், பந்த் என்ற பெயரில் வன்முறையை அரங்கேற்றுகின்றனர்.

இந்த இலட்சணத்தில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் இவர்கள்தான் வெற்றியடைந்துள்ளனர். இது போன்ற கட்சிகளின் உண்மை முகத்தை எப்போதுதான் மக்கள் புரிந்துகொள்ள போகின்றனரோ, தெரியவில்லை.

கன்னட நண்பர் ஒருவர் சொன்னார், ‘இவர்களை புரிந்துகொண்டு மட்டும் என்ன ஆகப் போகிறது. இவர்களுக்கு மாற்று என இருப்பவர்கள் இவர்களை விட மோசமானவர்களாகத்தானே இருக்கிறார்கள்’ என்று. உண்மைதான். காங்கிரஸும், மஜதவும் பாஜகவிற்கு துளியும் சளைத்தவர்கள் இல்லை. வாழ்க ஜனநாயகம்.

Advertisements
எதற்காக பந்த்?

4 thoughts on “எதற்காக பந்த்?

 1. Premkumar Masilamani சொல்கிறார்:

  முழுதும் உண்மை. இன்னொரு கேலிகூத்து, தமிழ்நாட்டில் இருந்து வரும்/செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

 2. kanagu சொல்கிறார்:

  இரு கட்சிகளுமே யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல பணத்தை சுருட்டுவதில்… 😦 இவங்கள தேர்ந்தெடுக்குறதுக்கு நாமளே நம்மள பாத்து சிரிச்சுக்க வேண்டியது தான்..

  1. Anbu சொல்கிறார்:

   //இவங்கள தேர்ந்தெடுக்குறதுக்கு நாமளே நம்மள பாத்து சிரிச்சுக்க வேண்டியது தான்..//

   வேற என்ன பண்ணறது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s