நடிகர்களும் அரசியலும்

சமீபத்திய செய்திகளிலும், வலையுலகிலும் பெரிதும் பேசப்படும் செய்திகளில் ஒன்று, விஜய் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதும், அரசியல் இயக்கம் ஆரம்பிக்க முடிவு செய்திருப்பதும்தான்.

எனக்குத் தெரிந்து தமிழகத்தைப் போல, நடிப்புத் தொழிலின் அடுத்த நிலையே அரசியலும், ஆட்சியும்தான் என்பதை வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நமது நிருபர்களும், ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தவுடனே அந்த நடிகனிடம் ‘அடுத்து அரசியல்தானா?’ எனக் கேட்டுக் கேட்டு அந்த ஆசை இல்லாதவர்களுக்குக் கூட அதை உண்டுபண்ணிவிடுகிறார்கள்.

எந்த அரசியல் கட்சியின் சாயலும் இல்லாத நடிகர்கள் மிகமிக குறைவு. நகைச்சுவை நடிகர், வில்லன் நடிகர் என எந்த பேதமும் இல்லாமல் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துகொண்டு பதவிகளை பெறுவதில்தான் அனைத்து பெரும்பாலான நடிகர்கள் குறியாக இருக்கின்றனர். ஒரு நடிகனோ நடிகையோ கட்சிக்குள் வந்தவுடன் அவர்களுக்கு பதவி, பொறுப்பு எனக் கொடுக்கும் அரசியல் கட்சிகள் (திராவிடக் கட்சிகள் என்பதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்) தங்கள் கட்சியில் பல ஆண்டு காலம் உழைத்த தொண்டர்களை கண்டுகொள்வதே இல்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் அரசியல் வெற்றிதான் இதுபோன்ற  நிகழ்வுகளுக்கு காரணம் என்றாலும், அது நடந்து ஒரு தலைமுறையே மாறிவிட்டது என்பதை ஏன் இந்த நடைகர்கள் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.

இதற்கு முழுமையாக நடிகர்களை மட்டுமே காரணம் என்று ஒதுக்கிவிட முடியாது. நான் கேள்விப்பட்டவரை நடிகர்களை பெரும்பாலும் அரசியலுக்குள் இழுத்துவிட முயற்சிப்பவர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள்தான். ஒரு நடிகனின் இரண்டு மூன்று படங்கள் வெற்றியடைந்துவிட்டால் போதும், உடனே ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கிவிடுகின்றன. அப்போதிருந்தே, இதன் நிர்வாகிகள் அந்த நடிகனின் அரசியல் பிரவேசத்தையும் அதன் மூலம் தனக்கு கிடைக்கும் கட்சிப் பதவியையும் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறான்.

சில நடிகர்கள், தங்களது ஒவ்வொரு பட வெளியீட்டுக்கு முன்னும் இது போல பரபரப்பான விஷயங்களைப் பரப்பி அதன் மூலம் தனது படத்திற்கான வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தவும் செய்கிறார்கள்.

பல நடிகர்களுக்கு அரசியல் என்பதோ கொள்கை என்பதோ எதற்கு என்பது கூடத் தெரிவதில்லை. தேமுதிக என தனது கட்சியின் பெயரையே ஜோதிடரை வைத்து தீர்மானித்த விஜயகாந்துக்கு ‘திராவிடர் கழகம்’ என்ற பெரியார் அமைப்பின் பெயரை வைக்க என்ன தகுதியிருக்கிறது எனத் தெரியவில்லை.

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எந்த நடிகரும் மக்கள் பிரச்சினையை சொல்லை கட்சி ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. எம்ஜிஆர் தனக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதற்காக கட்சி ஆரம்பித்தார், விஜயகாந்த் தனது ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும், தனது எதிர்காலத்துக்காகவும் கட்சி ஆரம்பித்தார், இப்போது விஜய், தனது படங்களை தியேட்டர்காரர்கள் வெளியிட மறுத்ததால் அரசியலுக்கு வருகிறார்.

இவரது படங்கள் வெளியிடப்படாதது என்ன மக்கள் பிரச்சினையா? இதைக் காரணமாகச் சொல்லி கட்சி ஆரம்பிப்பவர், எதைக் கட்சிக் கொள்கையாக வைப்பார்? அனைவருக்கும் சம தியேட்டர் உரிமையையா?

நடிகர்கள் என்பவர்கள் திரையில் மட்டுமே வழிகாட்டிகளாக பார்க்கப்பட வேண்டியவர்கள் என்பதை பெரும்பாலோனோர் புரிந்து கொண்டுவிட்டனர். ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்து நடிகர்களின் அரசியல் ஆசையை கிளரிவிடும் சிலரும் இதை புரிந்துகொண்டால், திரப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு விஷயம் என்பதையும், தாங்கல் கலைஞர்கள், கடவுள்கள் அல்ல என்பதையும் நடிகர்கள் புரிந்துகொள்வார்கள். அது நடக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்த நடிகர்களின் சமீபத்திய அரசியல் தோல்விகள் புரியவைக்கின்றன.

Advertisements
நடிகர்களும் அரசியலும்

10 thoughts on “நடிகர்களும் அரசியலும்

 1. . எம்ஜிஆர் தனக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதற்காக கட்சி ஆரம்பித்தார்……..மிக மிக தவறான செய்தியை எழுதியுள்ளீர்கள்… எம்.ஜி.ஆர் கருணாநிதியிடம் கட்சி கணக்கை கேட்டார்.. கருணாநிதி எந்த பதிலையும் சொல்லாமல் அவரை வெளியேற்றினார்.. உண்மையில் எம்.ஜி.ஆருக்கு கட்சி ஆரம்பிக்க தைரியம் இல்லை என்று தான் சொல்வேன்.. தொண்டர்கள் அவருக்கு மிகுந்த தைரியம் கொடுத்து கட்சியை ஆரம்பிக்க சொன்னார்கள். மற்றவைகள் வரலாறு…. கருணாநிதியும் சினிமாக்காரர்தான்.. எல்லாவற்றிற்கும் காரணம் தமிழில் வெளிவரும் அல்லக்கை பத்திரிகைகள் தான் வேறு ஒன்றுமில்லை.. விஜய் பற்றிய செய்திகள் வரவேயில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.. என்னாகியிருக்கும் யோசித்து பாருங்கள்..

  1. Anbu சொல்கிறார்:

   // மிக மிக தவறான செய்தியை எழுதியுள்ளீர்கள்… //
   தனக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்ட பிறகுதான் எம்ஜிஆர் கட்சி கணக்கை கேட்டு பிரச்சினையை கிளப்பினார் என்றுதான் படித்திருக்கிறேன். எது சரியான விஷயம் என்று அப்போரதைய விஷயங்கள் நஙு தெரிந்தவர் விளக்கினால் நன்றாக இருக்கும்.

   // விஜய் பற்றிய செய்திகள் வரவேயில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.. என்னாகியிருக்கும் யோசித்து பாருங்கள் //
   விஜய் பற்றிய செய்திகள் வெளியிடுபவர்களை நான் குறை சொல்லவில்லை. இதைக் காரணமாக வைத்து கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என வரும் செய்திகளைத்தான் குற்றம் சொல்கிறேன்.

   வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் நன்றி நண்பரே!!

 2. // நடிப்புத் தொழிலின் அடுத்த நிலையே அரசியலும், ஆட்சியும்தான் என்பதை வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நமது நிருபர்களும், ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தவுடனே அந்த நடிகனிடம் ‘அடுத்து அரசியல்தானா?’ எனக் கேட்டுக் கேட்டு அந்த ஆசை இல்லாதவர்களுக்குக் கூட அதை உண்டுபண்ணிவிடுகிறார்கள்//

  என்ன அன்பு நீங்க.. அரசியல்வாதியா ஆகணும்ன்னா முதல் தகுதியே அவங்க நல்ல நடிக்க தெரிந்திருக்கணும். அதனால நம்ம தமிழர்கள் நல்ல நடிக்க தெரிந்தவர்களை அரசியல்வாதியா தேர்ந்தெடுக்கிறார்கள். அதுல என்ன தப்பு?

  ஆனா விஜையை எதுக்கு அரசியல்ல இழுக்கிறாங்க்ன்னு தான் புரியவில்லை 🙂 .இல்ல அவரா ‘நானும் நடிகன் தான்.. நானும் நடிகன் தான்ன்னு’ அவரா வந்து விழுகிறாரான்னு தெரியல்ல. 🙂

  எப்ப விஜெய் ரசிகர் யாராவது இருக்கீங்கன்னா சொல்லுங்க…ஆயிடுறேன்.

  1. Anbu சொல்கிறார்:

   // அரசியல்வாதியா ஆகணும்ன்னா முதல் தகுதியே அவங்க நல்ல நடிக்க தெரிந்திருக்கணும். அதனால நம்ம தமிழர்கள் நல்ல நடிக்க தெரிந்தவர்களை அரசியல்வாதியா தேர்ந்தெடுக்கிறார்கள். //
   ஓ.. இதில இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ? அப்ப நம்ம ஆளுங்க புத்திசாலிங்கதான்னு சொல்லறீங்க‌.. 🙂

   // அவரா ‘நானும் நடிகன் தான்.. நானும் நடிகன் தான்ன்னு’ //
   எனக்கு என்னமோ அப்படித்தான் தோணுது..

   1. Anbu சொல்கிறார்:

    நன்றி நண்பரே.. பெரிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. 🙂
    இது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான். சிலருக்கு இன்னும் புரியவில்லை என்ற வருத்தத்தில் எழுதிய பதிவே இது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s