மனுதர்மத்தை நிலைநிறுத்தும் கோவில் சடங்கு

சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்த சம்பவம் இது. பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது என்பதற்கான உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம்.

மங்களூர் அருகே உள்ள ஒரு கோவிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டு முடித்த எச்சிலைகளின் மேல் தலித்துகளும், மற்ற சாதியினரும் உருண்டு செல்கிறார்கள். அப்படி சென்றால் அவர்களுக்கு தோல் சம்பந்தப் பட்ட வியாதிகள் ஏதும் வராது என்பது நம்பிக்கையாம்.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த பழக்கம் கடந்த 400 வருடங்களாக கடைபிடிக்கப் படுகிறது என்பதும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் அடிக்கடி இக்கொவிலுக்கு விஜயம் செய்வது வழக்கம் என்பதும்தான். அரசுக்கு தெரிந்தே இது போல‌ மனிதர்களை சாதி ரீதியாக வர்க்கம் பிரிக்கும் முயற்சிகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான்.

இத்தனைக்கும் அங்கே சாப்பிட்டவர்கள் யாரும் துறவிகளோ முனிவர்களோ கிடையாது. சாப்பிட்டவனும், அந்த எச்சிலையின் மேல் உருண்டவனும் ஒரே பள்ளியில் படிப்பவர்களாகவோ அல்லது ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவோ கூட இருக்கக் கூடும். இங்கே ஒருவனை உயர்ந்தவனாகவும், மற்றொருவனைத் தாழ்ந்தவனாகவும் ஆக்கி வைத்திருப்பது மனுதர்மத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

சாமியார், சாமி என்பதையெல்லாம் கூட அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என விட்டுவிட்டாலும், இது போன்ற சம்பவங்களை எந்த அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் நிறைய இளைஞர்கள் இருந்தனர். உருண்டவர்களிலும்தான்.  இதுபோன்ற மனுதர்மம் சார்ந்த நம்பிக்கைகள் அடுத்த தலைமுறையினரிடமும் தொடர்கிறது என்பது வேதனை அளிக்கும் விஷயம்.

இந்த செய்தியில் ஒரே ஆறுதலான விஷயம், சில தலித் அமைப்பினர் இந்த பழக்கத்திற்கெதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதனால்தான் இந்தவிஷயம் வெளி உலகத்துக்கு தெரியவே வந்தது. இது போன்ற போராட்டங்கள் மூலம் நிச்சயம் இந்தக் கொடுமைகளை களைய முடியும் என நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் அனைவரும் சமம் என்ற நிலை வரும்.

Advertisements
மனுதர்மத்தை நிலைநிறுத்தும் கோவில் சடங்கு

9 thoughts on “மனுதர்மத்தை நிலைநிறுத்தும் கோவில் சடங்கு

 1. சுட்டிகளை சொடுக்கி படிக்கவும்.

  1. பகுதி 31.கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது…

  2. பகுதி 27. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் விக்ரகம் வெறுங்கல்லாகி பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.

  3. பகுதி 26. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு.

  4. பகுதி 25. தமிழில் பேசினால் தீட்டு கழிய‌ ஸ்நானம் பண்ணணும்.

  5. உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு. பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்

  6. பகுதி 10. பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ளஉறவு கொண்டால்?

  7. பகுதி 9. ” தலித் ” துகள் சண்டாளர்களாம். ? தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு.

 2. //சாமியார், சாமி என்பதையெல்லாம் கூட அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என விட்டுவிட்டாலும், இது போன்ற சம்பவங்களை எந்த அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.//
  😦

 3. மனுதர்மத்தை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எச்சில் இலை மேலே இவங்களை யாரும் உருள சொல்லி கட்டாயப்படுத்தவில்லையே? இவங்க எதற்க்கு அவர்களையே தாழ்த்தி கொள்ளவேண்டும்?

  1. Anbu சொல்கிறார்:

   நம்பிக்கை என்ற பெயரில் மக்களிடம் இது போன்ற செயல்களை பரப்பி வைத்திருப்பதுதான் மனுதர்மம்..

   // இவங்க எதற்க்கு அவர்களையே தாழ்த்தி கொள்ளவேண்டும் //
   இதை எப்போது எல்லோரும் புரிந்துகொள்கிறார்களோ அப்போதுதான் இது போன்ற அவலங்கள் முடிவுக்கு வரும்..

 4. //பார்ப்பனர்கள் சாப்பிட்டு முடித்த எச்சிலைகளின் மேல் தலித்துகளும், மற்ற சாதியினரும் உருண்டு செல்கிறார்கள்//

  நன்றாக தெரியுமா? அங்கே மற்ற சாதியினரும் உருளுகிறார்கள் என்று. பெரும்பான்மையான மக்கள் தலித்துகளாகத்தான் இருப்பார்கள். பார்ப்பணர்கள் எப்பொழுதோ மேட்டுகுடி மக்களையும் தங்களுடன் இணைத்துகொண்டுவிட்டார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து இப்பொழுது இந்தமாதிரியான கிழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

  1. Anbu சொல்கிறார்:

   பெரும்பான்மையான மக்கள் தலித்துகள்தான். ஆனால் மற்ற சாதியினர் சிலரும் உருளுகிறார்கள் எனத்தான் செய்தியில் சொல்லப்பட்டது.

   //பார்ப்பணர்கள் எப்பொழுதோ மேட்டுகுடி மக்களையும் தங்களுடன் இணைத்துகொண்டுவிட்டார்கள்.//
   அப்படியெல்லாம் சொல்ல முடியாது. பார்ப்பனரல்லாத எல்லோரையும் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் கீழ்த்தரமாகவே பார்க்கிறார்கள். நம்மில் சிலர்தான், தலித்துகளை விட நாம் மேல் என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். முதலில் இவர்கள் திருந்த வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s