ஊழலைப் பற்றிப் பேச‌ நாம் தகுதியானவர்களா?

இப்போது செய்தித்தாள், தொலைக்காட்சி (சன், கலைஞர் தவிர) அனைத்திலும் முக்கியச் செய்தி ஊழல்கள்தான். காமென்வெல்த், 2ஜி ஸ்பெக்ட்ரம், கர்நாடகா நில பேர ஊழல் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவை அனைத்தையும் வெளிக்கொண்டு வந்ததில் ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகம்தான். ஆனால் இவர்கள் யாரும் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் கவனம் செலுத்தப் போவதில்லை. ஏனென்றால் இப்போது இது ஹாட் நியூஸ். எனவெ இதன்மூலம் அதிக டிஆர்பி பெறுவதே இவர்கள் நோக்கம்.

இதற்கிடையே, திமுக மற்றும் காங்கிரஸ் இடையில் நடந்த பதவிபேர பேச்சுவார்த்தைகள் நீரா ராடியா தொலைபேசி பதிவுகள் மூலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

நீரா ராடியா பதிவுகள் மூலம் தெரியவந்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்தி, இந்த பதவி பேரம், கருணாநிதி குடும்ப சண்டை என்பதையெல்லாம் விட, இந்த பேரத்தில் மிக முக்கிய பங்காற்றியிருப்பது வட இந்திய ஊடகத் துறையின் முக்கியமான ஒருவரான என்டிடிவியின் பர்கா தத். இதன்மூலம் ஊடகத் துறையின் நம்பகத் தன்மையும் காணாமல் போகிறது.

பாராளுமன்றம் முதல் பதிவுலகம் வரை எங்கு பார்த்தாலும் இந்த ஊழலைப் பற்றியும் ஊழலில் ஈடுபட்டோருக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகள் பற்றியுமே பேச்சு. என்னுடையக் கேள்வியெல்லாம் ‘இதைப் பற்றி பேச நமக்கு தகுதியுள்ளதா?’ என்பதுதான்.

உடனே நம்மிடம் தோன்றும் கேள்வி, ‘நான் என்ன 1,75,000 கோடி ரூபாயா கொள்ளையடித்தேன்?’ என்பதுதான்.

சரிதான், நாம் யாரும் அவ்வளவு பணம் கொள்ளையடிக்கவில்லை, ஏனென்றால் அதற்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் நாமும் நம்மால் முடிந்த அளவுக்கு அரசை ஏமாற்றிக் கொண்டுதானே இருக்கின்றோம்?

இல்லையென்று யாரும் சொல்ல முடியுமெனத் தோன்றவில்லை. அதற்கான சில காரணங்கள் இங்கே.

1.  சொந்தமாகத் தொழில் செய்யும் எத்தனை பேர் வருமானத்தை சரியாக பதிவு செய்து வரி செலுத்துகிறார்கள்?

2. அரசாங்க வேலையிலிருக்கும் எத்தனை பேர் லஞ்சம் கொடுக்காமல் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள்?

3. ஒரு அரசு அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் வேலை விரைவாக முடியுமெனத் தெரிந்த பின்பும், எத்தனை பேர் வேலை மெதுவாக நடந்தாலும் பரவாயில்லை, நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறோம்?

4. கேஸ் பொருத்தப்பட்ட தன்னுடைய காருக்கு அரசு மானிய விலையில் கொடுக்கும் சமையல் கேஸைக் கொண்டு நிரப்பாதவர்கள் எத்தனை பேர்?

5. போக்குவரத்து காவலரிடம் தவறு செய்து மாட்டிய எத்தனை பேர் கோர்ட்டில் ஃபைன் கட்டத் தயார் உங்களுக்கு காசு கொடுக்க முடியாது என சொல்லியிருக்கிறோம்?

6. நம்மில் எத்தனை பேர் சரியான நில மதிப்பை சொல்லி உண்மையான வரியைக் கட்டி நிலம் பதிவு செய்கிறோம்?

இது போல இன்னும் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி நம்மால் முடியும் அனைத்து விஷயங்களிலும் நாமும் அரசை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். அமைச்சர்கள் அவர்களால் முடிந்த அளவு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் திருந்தும் வரை அடுத்தவரின் தவறைப் பற்றிக் கேட்க தகுதியில்லாதவர்கள் என்பதே என் கருத்து.

Advertisements
ஊழலைப் பற்றிப் பேச‌ நாம் தகுதியானவர்களா?

24 thoughts on “ஊழலைப் பற்றிப் பேச‌ நாம் தகுதியானவர்களா?

 1. Karthik சொல்கிறார்:

  பொதுவாக, குறைகள் இல்லாத மனிதனே இல்லை என்று சொல்வார்கள். நம்மில் பெரும்பாலோனோர் தவறு செய்ய வேண்டுமென்று நினைத்து தவறு செய்வதில்லை. உதாரணத்திற்கு, எனது மனைவியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமணையில் சேர்த்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு தனியாரில் சேர்த்து செலவழிக்கும் அளவிற்கு வசதி இல்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனபோதிலும், அரசு மருத்துவமனையில் நான் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு “அன்பளிப்பு” கொடுத்தாக வேண்டியிருக்கிறது. அப்படி இல்லையென்றால் அவர்கள் என் மனைவியை கவனிக்கும் விதம் மோசமாயிருக்கும். அந்நிலையில் நான் என்ன செய்வது?

 2. Karthik சொல்கிறார்:

  நீங்கள் கூறியபடி நிலத்தை நான் வாங்கிய விலைக்கே பத்திரப்பதிவு செய்கிறேன்.. அதற்கான வரியைக் கட்டுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அடுத்து அதை நான் விற்க நேரும்போது, என்னிடம் வாங்குபவர்களும் அதையே செய்ய அவர்கள் என்ன மடையர்களா? அதே நேரம் அரசு நிர்ணயிக்கும் தொகையை விட கூடுதலாக என்னிடம் நிலத்தை விற்றவர், அதற்கான வருமான வரி கட்ட நேரிடுமே.. அதற்கு அவர் ஒப்புதல் கொடுப்பாரா? நான் சரியாக நடந்து கொண்டால் போதுமா..? எல்லாரும் சரியாக நடக்க வேண்டுமே… அப்போது என்ன செய்வது?

 3. Karthik சொல்கிறார்:

  என்னைப் பொருத்தவரை மேல்மட்டத்திலிருந்து மாற்றம் கீழ்நோக்கி வரவேண்டும். மாற்றம் என்பது அடிமட்டத்தில் இருந்து மேலே செல்ல வாய்ப்பே இல்லை!!

  1. அப்படியில்லை நண்பரே.. கீழ்மட்டத்தில் இருக்கும் பலரும், ஒவ்வொரு காரியத்தையும் பணத்தைக் கொண்டே நடத்துவதால்தான் அவர்கள் மேல்மட்டத்திற்கு வரும்போது செய்யும் ஊழல்கள் தவறாக தெரிவதில்லை. என்னைப் பொருத்தவரை தவறுகள் அடிமட்டத்திலிருந்து களையப்பட வேண்டும்.

   ஓட்டு போடும்போது காசு வாங்காமல் நியாயமானவனுக்கு ஓட்டுப் போட்டிருந்தால் ஊழல் அரசியல்வாதிகள் என்றோ ஒழிந்திருப்பார்கள்.

   மேலே நீங்கள் சொன்ன இரண்டு எடுத்துக்காடுகளிலும், உங்களைத் தவறு செய்யத் தூண்டுபவரும் (நிலம் விற்பவர், மருத்துவமனை ஊழியர்), சமுதாயத்தில் நம் நிலையில் இருப்பவர்கள்தானே.

   உதாரணத்திற்கு, நீங்கள் உண்மையான விலையில் பதிவு செய்பவருக்குத்தான் விற்பேன்/வாங்குவேன் எனக் கூறலாம். நிச்சயம் ஒருவராவது இருப்பார்.

   அதேபோல மருத்துவமனையில், உங்களால் முடிகிறது கொடுக்கிறீர்கள். அதைக் கூட கொடுக்க முடியாதவனும் அதே மருத்துவமனைக்குத் தானே வருகிறான். நீங்கள் செய்யும் விஷயத்தால், அவனிடமும் அதையே எதிர்பார்த்து இந்த ஊழியர்கள் சரியாக நடத்தமாட்டார்கள் அல்லவா?

   எனவேதான் நம் நிலையில் நம்மை திருத்திக் கொள்ளாதவரை நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்கிறேன்.

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!!

 4. உண்மைதான் அன்பு, எல்லாப் பிரச்சினைகளிலும் இன்னொருவர் மீது கை காட்டிவிட்டு நாம் ஓரமாகத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதில் ஒரு சௌகரியம் இருக்கிறது இல்லையா? நாம் என்றைக்கு நம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்துகிறோம்? அரசியல் ரீதியாக இப்போது அதீதக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் யாரைப் பின்னணியில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோமானால் கேள்வி கேட்பதிலேயே அர்த்தமில்லை என்பதும் புரியும். இப்படிச்சொல்வதால் ஊழலுக்கு உடந்தை என்பது அர்த்தமல்ல. நம்மையும் இதற்காகக் குரல் எழுப்புபவர்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்பதுதான் கருத்து

  1. சரிதான் நண்பரே.. நம்மை சுய பரிசோதனைக்கு உட்புடுத்தாதவரை அடுத்தவர்களை விமர்சிக்க நமக்கு தகுதியில்லை.

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

 5. rasheedera சொல்கிறார்:

  உங்கள் சிந்தனையில் ப்ழை உண்டு. சின்னச்சின்ன தவருகாள் செய்யவேண்டிய நிலையில் உள்ள சராசரி மனிதனையும், திட்டமிட்டே கொல்லையடிக்கும் நிலைமையையும் ஒருசேர பார்ப்பது தவறு. இப்படி நாமும் வளரலாமே என்ற ஆசையில் தான் மற்ற பெரும்பான்மை தவறுகள் நடைபெருகின்றன். திருட வாயிபிருந்தும்,தேவை இருந்தும்,செய்யாமல் இருக்க வேண்டுமானால் , வாரிசு சொத்துரிமை தடுக்கப்படுகிறது என்று சட்டம் இயற்ற வேண்டும். இதை விவாதமாக ஆக்குங்களேன். அதாவது பிள்ளைகளுக்கு சொத்துறிமை கிடையாது, என்றால் குற்றங்கள் குறைஒயும். விவாதிக்கத்தயாரா?

  1. கருத்துக்கு நன்றி நண்பரே..

   நீங்கள் சொல்லுவதைப் போல் சொத்து சேர்த்துவைக்கும் அவசியம் இல்லாமல் போனால் கொள்ளையடிப்பது குறையுமா?

   எனக்கு நம்பிக்கையில்லை. உண்மையிலேயே கஷ்டப்படுகிறவன்தான் அடுத்த நாளைக்கு தேவைப்படும் என சேர்த்துவைப்பான். இதைப் போன்ற ஊழல்வாதிகள் இல்லை. அவர்கள் தங்கள் குழந்தைக்கும் கற்றுக் கொடுத்துவிடுவார்கள்.

   லைசன்ஸ் இல்லாத பையனிடம் வண்டியை கொடுத்தனுப்பிட்டு, போலிஸ் பிடித்தால் அம்பதோ நூறோ கொடுத்துட்டு வந்துடுன்னு பழக்கப் படுத்தற நம்மவர்கள் போலத்தான் அவர்களும்.

 6. நண்பரே!
  நம்மைக் குறை சொல்லிக் கொள்வது நியாயமாகத் தெரியவில்லை, ஒரு வேளை ஒரு பாரபட்சமற்ற சுய விமரிசனம் என்று நம்மை நாமே பாராட்டிக் கொள்ள மட்டுமே உதவி செய்யும்.
  உதாரணமாக நாம் செலுத்தும் வருமான வரி. நம்மில் பலர் வருமான வரி செலுத்தாதவர்களாக இருக்கலாம். இருப்பினும் நம்மிடம் இருந்து வசூலிக்கும் வரிப் பணத்தை அரசு சரியாகச் செலவு செய்கிறதா? சென்னை போன்ற முக்கிய நகரங்களிலேயே சாலைகளின் நிலை என்ன என்பது நமக்கு நன்கு தெரியும். நம்மிடம் இருந்து பெறப்படும் பணத்தைக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இன்னும் போதாதென்று வாரியத் தலைவர்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது அரசு. எத்தனை ஏரிகள், குளங்கள் மழைக் காலத்திற்கு முன்னர் ஆழம் செய்யப் பட்டன? அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட கருவிகளில் எத்தனை இன்னும் செயல்படும் நிலையில் உள்ளது? கேள்விகள் ஏராளம். பதில் சொல்ல எந்த அரசியல் வாதியும் வருவதில்லை.
  நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் வரி கட்டாமல் போனால் நோட்டிஸ் வரும், பிரச்சினைகள் வரும். அரசியல் வாதிகள் வருமானத்திற்கு கணக்குக் காட்டவே வேண்டாம்!
  நாம் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழப் பழகி விட்டோம். நம்மால் இந்த நாற்றம் பிடித்த அரசியல்வாதிகளை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். மக்கள் கேள்வி கேட்கத் திராணியற்றவர்களாக இருக்கும் வரை இந்த அவலம் தொடரத் தான் செய்யும்.

 7. swaminathan சொல்கிறார்:

  இயேசு : எந்த குற்றமும் செய்யாத ஒருவன் இந்த குற்றவாளி மீது முதல் கல்லை எறியலாம்
  இப்படி தான் இருக்கு அன்பு சொல்வது

 8. swaminathan சொல்கிறார்:

  இப்படித்தான் ஆரம்பிக்கும் அப்பறம் நம்ம மடியில தான் கையை வைப்பாங்க

  நீங்கள் சொல்வது உங்கள் கருத்து இது உண்மைய இருக்கணும்னு அவசியம் கிடையாது

  இன்னும் கிராமத்து பக்கம் போய் பாருங்க உழைக்காம வர காசு உடம்புல ஒட்டாதுன்னு சொல்றவங்க இருக்காங்க

  தப்ப செய்யல்லன்னா பிழைக்க தெரியாதவன்னு சொல்லறது இல்லன்னா மாத்தி சொல்வது (நீங்கள் சொல்வது போல் ).

  உங்களால முடியும்னு சொல்ல கூட முடியில்லையே அப்புறம் எப்படி இந்த மாதிரி குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்

  இயேசு :பாவத்தின் சம்பளம் மரணம்

  இப்போது கொஞ்சம் மாத்துவோம் தோல்வி தான் தண்டனையா இருக்கணும்
  இன்னிமே ஆயுசுக்கும் அவர்கள் நாற்காலிய பத்தி நினச்சு பாக்க kodathu

 9. Anbu சொல்கிறார்:

  சுந்தரசோழன் & சுவாமிநாதன்..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  எந்த வகையிலும் ராசா செய்ததை நியாயப் படுத்தவில்லை நான். இதைப் பற்றி பேசுபவர்கள் எல்லோரும் ஏதோ நாம் உலகிலேயே ரொம்ப யோக்கியமானவர் போல பேசுவது எனக்கு சரியாகப் படவில்லை, ஊழல், லஞ்சம் என்பதையெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் செய்யும் நம் பலபேரில் ஒருவர்தான் இந்த ராசா. மாற்றம் என்பது முதலில் நம்மில் ஆரம்பிக்கவேண்டும் என்பதே என் கருத்து.

 10. சுவாமிநாதன் சொல்கிறார்:

  நிருபர்:உலக அளவில் உணவு பஞ்சத்துக்கு காரணம் என்ன?
  ஜார்ஜ் புஷ் :சீனாவிலும் இந்தியாவிலும் மத்திய வருவாய் பிரிவினரின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பது தான் உணவு தானிய விலை உயர்வுக்கு காரணம்

  அதாவது நாம என்ன சாப்பிடனும் எவ்ளோ சாப்பிடனும்னு யார் முடிவு பண்ணனும் நாம தானே

  இதுதான் முதலாளித்துவத்தின் உச்சம்.

  அவுங்க இத எதோ பொறாமைல சொல்லல.

  “A famous plant-breeder had once said, in regard to rice: ‘He who controls the supply of rice will control the destiny of the entire Asiatic orbit. The most important thing to the majority of the Asia is not capitalism or socialism or any other political ideology but food which means life itself, and in most of Asia, food is rice.
  Earl Butz, a former US Secretary of Agriculture, is notorious for one sentence that he uttered in a course of an otherwise utterly insignificant life: ‘If food can be used as a weapon we would be happy to use it. -from the article The Great Gene Robbery by Claude Alvares.

  நம்ம அடிமடில கைய வைக்கிறானுக.

  நீங்க என்னடான்ன நாம யோகியமனவனா என்றெல்லாம் சாதாரண மக்களை விமர்சிச்சு ஒரு அறிக்கை விடுறீங்க.

  பதில் சொல்வதற்கு முன்னாள் -“The Great Gene Robbery by Claude Alvares” கட்டுரை ஐ படித்துவிடுங்கள் அப்புறம் “the international ” என்ற ஹாலிவுட் படத்தையும் பார்த்து விடுங்கள்

  உண்மையில் matrix படத்துல வர மாறி நாம எல்லாம் தூங்கிட்டு இருக்கோம் நம்ம உழைப்புல முதலாளிகள் வாழ்றான்(அந்த படத்துல எப்புடி மனித உடல் சூட்டுல machine இயங்குதோ அதைப்போல).

  உங்களுக்கு உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தா சொல்லுங்க பிறகு விவாதிப்போம்
  நன்றி

  1. Anbu சொல்கிறார்:

   நான் இந்த பதிவில் எந்த இடத்திலும் ராஜா பண்ணினதோ, மற்ற ஊழலையோ சரின்னு சொல்லவில்லை. இந்த ஊழலைப் பத்தி பேசிக்கிட்டே கொஞ்ச கொஞ்சமா நாமும் பல தவறுகளை செஞ்சிக்கிட்டு இருக்கொங்கிறதுதான் என் வாதம். முதலாளிகளும், வெளிநாட்டினரும் நம்ம உழைப்பை கொள்ளையடிக்கிறான்னு பேசிக்கிட்டே வெளிநாட்டு தயாரிப்புகளை வாங்கிற ஆளுங்கதான் நாம்.

   எவ்வளவு பேர், குறைந்த விலைக்கு கிடைக்கிற சீனப் பொருட்களை விட்டுட்டு இந்தியாவில் தயாராகிற பொருட்களை வாங்குறோம். இதுபோன்ற தவறுகளை திருத்திக்கிட்டு பிறகு மத்தவங்க தப்பைப் பத்தி பேசுவோம் என்பதுதான் என் வாதம்.

 11. swaminathan சொல்கிறார்:

  george bush in “india makkalin vaankum sakthi adhikariththu vittathu athu thaan unavu porutkalin vilai yetraththirkku kaaranam ”
  ithai paththi ungal karuththu

  the great gene robbery -padiththeerkala

  the international padam paaththeerkala

  1. Anbu சொல்கிறார்:

   அந்த புத்தகமும் படமும் இன்னும் நான் பார்க்கவில்லை. படித்துவிட்டு பதில் சொல்லுகிறேன்.

   புஷ் சொன்னது பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணமாக இதைத்தான் சொல்லுவார்கள். முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்க அதிபர் சொல்வதில் எந்தஆச்சரியமும் இல்லை.

 12. swaminathan சொல்கிறார்:

  from a blog
  சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
  நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து விதைகளும், மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென இச்சட்டம் கட்டாயப்படுத்துகிறது. விதைகளைப் பதிவு செய்வதற்கு மத்திய அரசால் அமைக்கப்படும் மத்திய விதைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  விதைகள் பதிவு அல்லது நிராகரிக்கும் விவகாரத்தில் இக்குழுவின் முடிவே இறுதியானது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதைகள் அல்லது நடவு பயிர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். பதிவு செய்யப்படாத விதைகள் அல்லது நடவுப் பயிர்களை விற்பனை செய்வது, பயன்படுத்துவது, பாதுகாப்பது, பரிமாறிக்கொள்வது அனைத்தும் முற்றிலுமாகத் தடைசெய்யப்படுகிறது.
  சாதாரண விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் விதைகளையோ அல்லது மரக்கன்றுகளையோ மத்திய அரசுக்கு அனுப்பி பதிவு செய்வது சாத்தியமான ஒன்றல்ல. அப்படியானால் அவர்கள் விதைகளை உற்பத்தி செய்வது சட்டவிரோமானதாகும். செல்வாக்குபடைத்த விதைக்கம்பெனிகள் மட்டுமே தங்களது விதைகளை பதிவு செய்யவும், அவ்விதைகளை மார்க்கெட்டில் விற்கவும் முடியும். இதன்படி வராலாற்றுக் காலந்தொட்டு விவசாயிகளுக்கு விதைகள் மீதிருந்த உரிமை தட்டிப்பறிக்கப்பட்டு விட்டது. தங்களுக்குத் தேவையான விதைகளுக்கு விதைக்கம் பெனிகளிடம் கையேந்தி நிற்கும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இனி தனது வயலில் என்ன சாகுபடி செய்வது என தீர்மானிக்கும் உரிமைகளைக் கூட விவசாயிகள் இழந்து விட்டார்கள். விதைகள் வழங்குவதை தங்கள் கையில் வைத்துக் கொண்டுள்ள நிறுவனங்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கிராமத்து விவசாயிகளது தலைவிதியை தீர்மானிக்க முடியும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
  விதைகளுக்கான விலைகளை தீர்மானிப்பது குறித்து சட்டத்தில் எந்த வரைமுறையும் இல்லை.

  எனவே, பதிவு செய்துள்ள கம்பெனி விதைகளின் விலைகளை பலமடங்கு உயர்த்தி விவசாயிகளை கொள்ளையடிக்க முடியும். ஏற்கனவே பல்முனை சுரண்டலுக்குள்ளாகியுள்ள விவசாயிகள் இனி விதை கொள்ளைக்கும் பலியாக வேண்டும்.
  விதைகளை பதிவு செய்வதில் மத்திய விதைக்குழுவின் முடிவே இறுதியானது என்பது பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் ஏற்பாடாகும். ஏற்கனவே மான்சாட்டோ கம்பெனி தனது மரபணு விதைகளை பல நாடுகளில் அறிமுகப்படுத்த கோடிக்கணக்கான டாலர் லஞ்சம் கொடுத்த சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. சமீபத்தில் இந்தோனேசியா அதிகாரிகளுககு 7 லட்சம் டாலர் கையூட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையூட்டுகள் வழங்குவதும் – கையூட்டுகளைப் பெற்றுக்கொண்டு தரமற்ற விதைகளைப் பதிவு செய்து இந்திய விவசாயத்தை நாசப்படுத்துவதும் இனி அன்றாட நிகழ்ச்சிகளாகிவிடும்.
  ஒருமுறை பதிவு செய்யப்பட்ட விதை ஆண்டு பயிராக இருப்பின் 15 ஆண்டுகளுக்கும், நீண்ட காலப் பயிர்களாக இருப்பின் 18 ஆண்டுகளுக்கும் பதிவு பெற்றவர் உரிமம் கொண்டாட முடியும். பதிவு பெற்றவர் மேற்கண்ட பதிவுக்காலத்துக்குப் பின்னர் மீண்டும் இதே காலத்துக்கு மறுபதிவு செய்து கொள்ளவும் முடியும். இக்காலம் முழுவதற்கும் பதிவு பெற்றவரின் உரிமையில் வேறுயாரும் தலையிட முடியாது என திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி விதைகள் பதிவு பெற்றவரின் தனிச் சொத்தாக மாறிவிடும்.
  அரசு மற்றும் தனியார் விதை பரிசோதனை மையங்களை விதைகளின் தரத்தை தீர்மானிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் தரம் குறைந்த விதைகளுக்கும் முறையற்ற சான்றிதழ்களை தனியார் பரிசோதனை மையங் களிலிருந்து பெற்றுக் கொள்ள வழி ஏற்படும். விதை நிறுவனங்களே இத்தகைய சோதனை மையங்களை ஏற்படுத்திக் கொள்வது அந்நிறுவனங்களுக்கு எளிதானதாகும்.
  அடுத்த ஆபத்து விதை சான்றிதழ் வழங்கும் பணியிலிருந்து படிப்படியாக அரசு வாப° வாங்கிக் கொள்ளும் என்பது தான். விதை உற்பத்தி செய்யும் தனிநபர் அல்லது நிறுவனம் நாளடைவில் தங்களது விதைகளுக்கான சான்றிதழ்களை (ளுநநன ஊநசவகைiஉயவiடிn) அவர்களே வழங்கிக் கொள்ள முடியும் என்பது விதை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சர்வ சுதந்திர பாத்யதையாகும். விதைகளின் தரத்தைப் பரிசோதிக்கவும், சான்றிதழ் வழங்குவதையும் கூட அரசு நிறுவனங்களின் மூலம் தான் நடத்த வேண்டு மென்பதை இச்சட்டம் கட்டாயப்டுத்தவில்லை என்பதிலிருந்தே இச்சட்டம் யார் நலனை பாதுகாக்க முன்மொழியப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
  மிகவும் கொடுமையானது என்னவெனில் வழக்கமாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விதைகளையும் ஒருவர் தன் பெயரில் பதிவு செய்துகொள்ள சட்டத்தில் வழிவகையுள்ளது. இவ்வாறு பதிவு செய்யக் கூடாது என மத்திய விதைக்குழுவிற்கு மனு செய்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அதேபோன்று தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விதையின் பதிவினை ரத்து செய்ய வேண்டுமென யாரும் கோரவும் முடியாது. ஆம்! பதிவு செய்யப்படும் விதை கம்பெனிகளுக்கு முன்னால் பல்லிளிக்க வேண்டிய பரிதாப நிலை விவசாய தேசத்துக்கு.

  “விதைகளின் தரத்தை பாதுகாப்பதற்கே” சட்டம் என முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தரத்தை பாது காப்பதற்கான பொறுத்தமான சரத்துக்கள் சட்டத்தில் இல்லாதது வினோதமானதாகும். தரமற்ற விதைகளை விநியோகித்து அதனால் பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உரிய நட்ட ஈடு பெறவும் சட்டத்தில் வழியில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி நீதி மன்றம் மூலம் நிவாரணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நொந்து நுhலாகிப்போயியுள்ள விவசாயிகள் நீதிமன்றத்தின்நெடிய படிக்கட்டுகளில் ஏறி நட்ட ஈடுகோரி அலைவது எப்படி சாத்தியமாகும்? அதிலும் செல்வாக்கு படைத்த விதைக்கம்பெனி களை எதிர்த்து அப்பாவி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது, நீதி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.
  கடந்த ஆண்டுகளில் மான்சாட்டோ கம்பெனியின் பி.டி.பருத்தி விதைகளால் சாகுபடிகள் அழிந்து நாடுமுழுவதும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலையில் மாண்டது நாடறிந்ததே. புதிய சட்டம் இந்த பரிகாரத்திற்கே நடைமுறையில் இடமளித்துள்ளது.
  இச்சட்டத்தை அமுல்படுத்திட பகுதிவாரியாக விதை ஆய்வாளர்கள் (ளுநநன ஐளேயீநஉவடிசள) நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூட்டிய வீடுகளையும் – குடோன்களையும் கூட பூட்டுக்களை உடைத்து சோதனை செய்யும் அதிகாரம் இவர்களுக்கு உள்ளது. தீவிரவாதி களின் வீடுகளைக் கூட பூட்டை உடைத்து சோதனை செய்வதற்கு சட்டம் ஒழுங்கு காவல் துறை நீதிமன்றம் மூலம் தேடுதல் வாரண்ட் பெற வேண்டும். ஆனால் விதை இன்°பெக்டர்கள் அத்தகைய நிபந்தனை ஏதுமின்றி தானடித்தமூப்பாக யாருடைய வீடுகளையும் உடைத்து சோதனையிட முடியும். விவசாயிகளை மிரட்டி சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்டிப்போடவே இத்தகைய முரட்டு அதிகாரங்கள் விதை இன்°பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  பழைய சட்டத்தில் மத்திய விதைக்குழுவில் மாநிலங்களுககு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய சட்டத்தில் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதானது மாநிலங்களுககான உரிமைகளைக்கூடத் தட்டிப் பறிப்பதாகும்.
  சட்டத்தை மீறி பதிவு செய்யப்படாத விதைகள் நடுபவர்கள் விற்பனையில் ஈடுபட்டால் ரூ.50000 வரை அபராதமும் – 6 மாதம் சிறைத் தண்டனைகள் வழங்கிட முடியும். அதாவது, பதிவு செய்யாத ஒருபடி நெல் விதையை அடுத்த வீட்டு விவசாயிக்கு விற்றாலோ அல்லது வீட்டுத் தோட்டத்தில் முளைத்த ஒரு வாழைக்கன்றையோ, தென்னங்கன்றையோ விற்பனை செய்தாலோ, அவர் கதி அதோ கதிதான். இத்தகைய தேச விரோத குற்றங்களை (!?) கண்டுபிடித்து வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதற்கு விதை இன்°பெக்டர்கள் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் (இவர்களுக்கு வேறு எந்த வேரலயும் கிடையாது). இத்தகைய விவசாய விரோத, தேச விரோத அம்சங்கள் பல இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன. ஏழை, சிறு, குறு விவசாயிகள் பெரும் பகுதியாக உள்ள இந்திய திருநாட்டில் எந்த சட்டமும் இவர்களது பாதுகாப்பை மையமாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும். ஆனால் புதிய சட்டம் பன்னாட்டு, உள்நாட்டு விதை கம்பெனிகளை பாதுகாப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. விவசாயிகள் பாதுகாப்பு பற்றி குறிப்பிடும் சில சரத்துக்களும் நடைமுறை சாத்தியமற்றதாகவே உள்ளது.

  விவசாயிகள் விதை உற்பத்தி உரிமையை பாதுகாக்கும் வகையில் 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், “பயிர்வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம்” (ஞடயவே ஏயசவைநைள ஞசடிவநஉவiடிn யனே குயசஅநசள சுiபாவ ஹஉவ – 2001) நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தில் விவசாயிகளுக்கு சில குறைந்த பட்ச பாதுகாப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. இச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் 3 1/2 ஆண்டுகளுக்குப் பின்னரும், இச்சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் பதிவு செய்து அமுலாக்குவ தற்கான ஏற்பாடுகள் இன்று வரை மேற்கொள்ளப்பட வில்லை. இது பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவ தாகும். இந்திய அரசால் முன்மொழியப்பட்டு சட்டமாக்கப்பட்ட பி.வி.பி.எப்.ஆர் (ஞஏஞகுசு ஹஉவ) சட்டத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, இதற்கு நேர் எதிர் மறையான விதைகள் சட்டத்தை அதே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது இந்திய அரசின் உண்மை சொரூபத்தை தோலுரித்துக் காட்டுவதாகும்.
  நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள இச்சட்டம் நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. விவசாயிகள், விவசாய சங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக விஞ்ஞானிகள், இடதுசாரி கட்சிகள் போன்ற அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுவடைந்து வருகின்றன. எனவே, இந்த சட்டத்தில் கீழ்க்கண்ட திருத்தங்களைச் சேர்ப்பது அவசியமான தாகும். மசோதாவை அப்படியே நிறைவேற்றுதை எதிர்த்தும், கீழ்க்கண்ட திருத்தங்களை வற்புறுத்தியும், நாடுதழுவிய மேலும் வலுவான மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
  விவசாயத் தொழிலாளர் சங்கமும், விவசாயிகள் சங்கமும், விவசாயிகளிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கியக் கடமையாகக் கருத வேண்டும்; தொழிலாளர் விவசாயி களின் கூட்டு முயற்சிக்கு வழிகாண வேண்டும். தங்களது வறுமைக்கும், கடன் தொல்லைக்கும் அடிப்படை இயற்கை அல்ல; கிரகங்களின் சேட்டையுமல்ல; அரசுகளின் கடைக்கண் பார்வை நம்மீது விழாததுமல்ல; அரசுகளின் திட்டமிட்ட அரசியல் பார்வையும், கொள்கையும், சுரண்டும் வர்க்க சார்புத் தன்மையேடு இருப்பதே காரணம் என்பதை உணர வைக்கும் ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். பெரும் திரளாக விவசாயிகள் பங்கேற்கும் இயக்கங்களே அரசைப்பணிய வைக்கும் என்ற உண்மையை சங்கங்களின் தலைவர்கள் உணர வேண்டும். இன்று சின்னத்திரை, பத்திரிக்கை இவைகளின் மூலம் பப்ளிசிட்டி போதும், மக்களின் பங்கேற்பு முக்கியமல்ல என்ற கருத்து பரவலாக உள்ளதை பலகீனமாகப் பார்க்க வேண்டும். மக்கள் திரளும் போது பப்ளிசிட்டி தானாகக் கிடைக்கும், அரசும் பயப்படும். இல்லையெனில் போட்டி டி.வி சேனல் மூலம் மக்களை குழப்பிவிடும். இந்த உணர்வோடு, கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக வலுவான இயக்கம் நடத்திட நம்மால் இயன்றதை எல்லாம் செய்வோம்.
  1. விவசாயிகள் பாரம்பரிய உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளித்திட வேண்டும்.
  2. தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து விதைகளையும் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். விதைகளை பதிவு செய்யக் கூடாது எனவும், செய்யப்பட்ட பதிவினை ரத்து செய்திட கோருவதற்கு மக்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். பதிவு பெற்றவர் பதிவு செய்த விதையின் மீது உரிமை கொண்டாடுவதற்கான காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைப்பதுடன் – மறு பதிவுக்கு வாய்ப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
  3. மோசமான விதைகளால் ஏற்படும் சாகுபடி இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட விதை நிறுவனம், விதையினை வழங்கும் ஏஜெண்டுகள் முழு நட்ட ஈட்டினை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு குறுகிய கால வரம்புக்குள் வழங்கிட வேண்டும்.
  4. விதை இன்°பெக்டர்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
  5. மத்திய விதைகள் குழுவில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதிகள் வழங்கிட வேண்டும்.
  6. விதைகள் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தனி நபர்களுக்கோ, நிறுவங்களுக்கோ வழங்கக் கூடாது. சான்றிதழ் வழங்கும் ஆணையம் மத்திய – மாநில விதைகள் குழுவின் ஆலோசனையுடன் மாநில அரசுகள் அமைத்திட வேண்டும்.
  7. விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பது சட்டத்தின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.

  1. Anbu சொல்கிறார்:

   ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். நான் ஏற்கனவே சொன்னதுதான். இந்த பதிவில் அரசியல்வாதியையோ, அவர்கள் செய்யும் ஊழலையோ நியாயப்படுத்தவில்லை.

   இவ்வளவு பெரிய தவறு செய்யும் ஒவ்வொருவனும், சிறுவயதிலிருந்தே சமுதாயத்தில் ஊறிப்போன ஊழல்களில் உழன்று வந்தவன்தான், அதனால்தான் பெரியப் பதவிக்கு வந்ததும் அவன் செய்யும் தவறுகள் அவனுக்கு பெரியதாக தெரிவதில்லை. ஊழல் இல்லாத நல்ல அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் நம்நாடு பெறவேண்டுமென்றால், சிறுவயது முதலே அரசையும், மக்களையும் ஏமாற்றுவது தவறு என அடுத்த தலைமுறை உணரும்படி நமது நடவடிக்கை இருக்கவேண்டும்.

   இதில் எந்த இடத்திலும் அரசு செய்வது தவறில்லை என சொல்லவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s