பெண்ணாதிக்கம்

குறிப்பு: முதலிலேயே ஒரு விஷயம் சொல்லிடறேன். இது முழுக்க முழுக்க நகைச்சுவையான பதிவு. ஏதோ நான் சீரியஸா ஏதாவது எழுதியிருப்பேன்னு நெனைச்சு திட்டிட்டு போகலாம்னு வந்திருந்தீங்கன்னா சாரி.

எப்ப பார்த்தாலும் ஆணாதிக்கத்தைப் பத்தியும், பெண்ணியம் பத்தியும் நிறையப் பதிவுகள் வருது. சரி ஒரு மாற்றமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் சில விஷய்ங்கள் பத்தி எழுதலாம்ன்னுட்டுத்தான் இந்த இடுகை.

1. பேருந்துகளில், ஆண்கள் பெண்களுக்கான இடத்தில் உட்கார்ந்திருந்தால் சத்தம்போட்டு எழுப்பி விட்டுட்டு உட்காருபவர்கள், ஆண்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருக்கும்போது யார் வந்தாலும் எந்திரிக்கிறதில்லை. 😐

2. ஒரு பொண்ணை லவ் பண்ணவைக்கணும்ன்னா எப்ப பார்த்தாலும் பசங்கதான் லோலோன்னு அலைஞ்சு திரிஞ்சி ஏதேதோ செய்யணும். பொண்ணுங்களுக்கு பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தாப் போதும். எதுவும் செய்யத் தேவையில்லை, பசங்கத் தானாப் பின்னாடி சுத்துவாங்க (சினிமாவைத் தவிர. தமிழ் சினிமால வர மாதிரி, பசங்கப் பின்னாடி சுத்திசுத்திப் போய் லவ் பண்ணற பொண்ணுங்களை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை). 😳

3. இந்தப் பொண்ணுங்களுக்கு எந்த கலரில் டிரஸ் போட்டாலும் நல்லாத்தான் இருக்கு. நாம கொஞ்சம் கலர்ஃபுல்லா டிரஸ் போட்டால் உடனே, ‘என்ன மச்சி, ராமராஜன் ரசிகர் மன்றத்தில் சேர்ந்திட்டயா? இல்லை ஆந்திராப் பக்கம் போயிட்டு வந்தியா?’ என கேட்டுக்கேட்டு இனிமேல் அந்தத் துணியை போடவே முடியாதபடி பண்ணிடறாங்க. இதனாலயே நாம எப்ப பார்த்தாலும், கருப்பு வெள்ளையிலும், சாயம் போன கலரிலும் சட்டைப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு. 😦

4. ஆண்களுக்கு பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பா வேலைக்கு போயாகணும். இல்லைன்னா, பார்க்கிறவன் எல்லாம் ‘வெட்டியாத்தான் இருக்கியா?, வெட்டியாத்தான் இருக்கியா?’ன்னு கேட்டுக்கேட்டே சாவடிச்சுடுவாங்க. பெரும்பாலான பொண்ணுங்களுக்கு அதெல்லாம் பிரச்சினையே இல்லை. அவங்களுக்கு பிடிச்சா வேலைக்கு போவாங்க, இல்லைன்னா ‘அதுதான் அவர் வேலைக்கு போறாரே, அது போதும், நான் வீட்டைப் பாத்துக்கிறேன்’னு சொல்லிட்டு வீட்டில் இருந்துக்குவாங்க. 😐

5. நாம கஷ்டப்பட்டு (?) வேலை பண்ணி, எல்லாத்துக்கும் சரிசரின்னு சொல்லி, ஆன்சைட் வாய்ப்பு கிடைக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும். இவங்க ஏற்கனவே ஆன்சைட்டில் இருக்கறவனைக் கல்யாணப் பண்ணிட்டு, என் ஹஸ்பண்ட் ஆன்சைட்டில் இருக்கிறார். நான் போகணும்ன்னு சொல்லிட்டு, அவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டிருந்தவனுக்கெல்லாம் ஆப்படிச்சுட்டு போயிடுவாங்க.  👿

6. நான் ஏதாவது தப்பு பண்ணி மாட்டிக்கிட்டால் செம அடி அடிக்கற அப்பாவும், அம்மாவும், என் தங்கச்சி ஏதாவது பண்ணினால் ‘பொண்ணுன்னு பாக்கிறேன், இனிமேல் இந்த மாதிரி தப்பு பண்ணினா நடக்கிறதே வேற’ன்னு எல்லா தடவையும் ஒரே டயலாக்கை சொல்லிட்டு விட்டுடுவாங்க‌. 😐

7. இதையெல்லாம் விட பெரிய விஷயம். சின்ன வயசில் கோவிலில் பிரசாதம் வாங்க நிக்கும் போது, மன்னன் பட ரஜினி, கவுண்டமணி கணக்கா சண்டை போட்டு போய் முதலில் நின்னால், முதலில் பொண்ணுங்க வாங்கம்மான்னு கூப்பிட்டு அவங்களுக்கு பிரசாதம் கொடுத்திட்டுத்தான் நமக்கு கொடுப்பாங்க. எவ்வள்வு கடுப்பாகும்ன்னு யோசிங்க மக்களே.. !! 👿

இன்னும் நிறைய விஷயம் இருந்தாலும் இதுக்கே எத்தனை பேரு திட்டுவாங்கன்னு தெரியாததால இதனுடன் நிறுத்திக்கிறேன். 😀

Advertisements
பெண்ணாதிக்கம்

17 thoughts on “பெண்ணாதிக்கம்

 1. 4 ஆவது பாய்ண்ட் எனக்கு பொருந்தும்..ஆமாம் எதுக்கு பெயர், மின்னஞ்சல், வலைத்தளம் இத்தனையும் நிரப்பி தான் கருத்து சொல்லணுமா?? அதையெல்லாம் எடுத்துடுங்க சார்..

  1. //4 ஆவது பாய்ண்ட் எனக்கு பொருந்தும்//
   நிறைய பேருக்கு அது பொருந்தும். 🙂

   // ஆமாம் எதுக்கு பெயர், மின்னஞ்சல், வலைத்தளம் இத்தனையும் நிரப்பி தான் கருத்து சொல்லணுமா?? அதையெல்லாம் எடுத்துடுங்க சார்//
   இதுநாள் வரை கவனித்ததில்லை. அதை நீக்கமுடியுமெனவும் தெரியாது, தற்போது நீக்கிவிட்டேன். நன்றி 🙂

 2. ராசா சொல்கிறார்:

  ஆண்களுக்கான இருக்கையா? அப்டி எங்க நண்பா இருக்கு? பெண்களுக்கு மட்டும் தான் இருக்கைகள் உண்டு மீதி எல்லாம் பொது இருக்கைகள் தான் அதனால்தான் ஆண்கள்னு எந்த பேருந்திலும் எழுதூரத்து இல்லை.

  1. // அதனால்தான் ஆண்கள்னு எந்த பேருந்திலும் எழுதூரத்து இல்லை //
   ஒரு சில பேருந்துகளில் எழுதியிருந்தாங்க.. அப்படிப் இல்லைன்னாலும் கூட, பஸ்ஸில் ஆண்களுக்குன்னு தனி இருக்கை கூட கிடையாதுன்னு அதையும் பெண்ணாதிக்கத்தில் சேர்த்திடலாம். 😀

 3. //குறிப்பு: முதலிலேயே ஒரு விஷயம் சொல்லிடறேன். இது முழுக்க முழுக்க நகைச்சுவையான பதிவு.//

  இல்ல. நீங்க சீரியஸாவே போடலாம்…தப்பில்லை.

  //6. நான் ஏதாவது தப்பு பண்ணி மாட்டிக்கிட்டால் செம அடி அடிக்கற அப்பாவும், அம்மாவும், என் தங்கச்சி ஏதாவது பண்ணினால் ‘பொண்ணுன்னு பாக்கிறேன், இனிமேல் இந்த மாதிரி தப்பு பண்ணினா நடக்கிறதே வேற’ன்னு எல்லா தடவையும் ஒரே டயலாக்கை சொல்லிட்டு விட்டுடுவாங்க‌. //

  இங்க பாருங்க… http://goo.gl/0FtlD

 4. Bala சொல்கிறார்:

  4. அதுக்கு பொண்ணுங்க ஒரு பேரு வெச்சு இருக்காங்க .. ஹோம் மினிஸ்டர். ஹோம் மேக்கர் நு எல்லாம்.

  5. எனக்கு கல்யாணம் ஆகா போகுது, அதனால நான் போக ஆசை படுறேன்னு சொல்லி, எனக்கான வாய்ப்பை தட்டி பரிசுட்டாங்க மாப்ள.

  1. // ஹோம் மினிஸ்டர். ஹோம் மேக்கர் நு எல்லாம் //
   அதுவே பசங்கன்னா, தண்டச்சோறு, சோம்பேறின்னு பேரு.. 😦

   //எனக்கான வாய்ப்பை தட்டி பரிசுட்டாங்க மாப்ள.//
   உனக்கு மட்டுமில்லை.. பல பேரோட நிலைமை இதுதான்.. 🙂

 5. வாசிக்கும் போது சிரிப்பு வந்தாலும்,உங்களுக்கு இருக்கும் சலுகையை இப்படி எல்லாம் பட்டியல் போட்டால் அதுபாட்டுக்கு போயிற்றே இருக்கும்.

 6. அன்பு அம்பு மாதிரி பாய்கிறத பார்த்தா … பயமா இருக்குதே

  //பசங்கப் பின்னாடி சுத்திசுத்திப் போய் லவ் பண்ணற பொண்ணுங்களை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை//
  மகா பெரிய கவலை தான். 😦

  // நான் வீட்டைப் பாத்துக்கிறேன்’னு சொல்லிட்டு வீட்டில் இருந்துக்குவாங்க.//
  நீங்க ஒரு நாள் வீட்டுல இருந்து பாருங்க அப்ப தெரியும்

  1. //மகா பெரிய கவலை தான்.//
   இல்லையா பின்ன.. 🙂 பசங்களைக் கேட்டுப்பாருங்க கஷ்டம் புரியும்.. 😐

   //நீங்க ஒரு நாள் வீட்டுல இருந்து பாருங்க அப்ப தெரியும்//

   நாங்க‌ வீட்டில் இருந்தால்தான் வெட்டிதண்டம்ன்னு திட்டறாங்களே.. 😯 அப்புறம் எங்க இதெல்லாம் டிரை பண்ணறது.. 😦

   // அன்பு அம்பு மாதிரி பாய்கிறத பார்த்தா … பயமா இருக்குதே //
   பயப்படவெல்லாம் தேவையில்லை.. சும்மா, நகைச்சுவைக்காகத்தான் இந்தப் பதிவு.. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s