வானவில் – 25/11/2010

திருந்தாத ஜென்மங்கள்

எங்க ரூமில் ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு வலிப்பு, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்கு. அவனுக்கு இப்ப வீட்டில் கல்யாணத்துக்கு பெண் பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க. அவன்கிட்ட ‘பெண் பாக்கிறப்பவே இந்த மாதிரி பிரச்சினையெல்லாம் இருக்குன்னு சொல்லிடு, அப்பதான் பின்னாடி எந்த பிரச்சினையும் இருக்காது’ன்னு சொன்னால், ‘இதையெல்லாம் போய் பொண்ணு வீட்டில் சொல்லுவாங்களா?’ன்னு கேக்கறான். இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்த மாதிரி ஆளுங்க திருந்த மாட்டாங்களா? இவனை நம்பி கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு யாரோ? அந்த பொண்ணை நினைச்சால்தான் கஷ்டமா இருக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீரா ராடியா

நீரா ராடியா டேப் சம்பந்தப்பட்ட விஷயங்களை படிக்கும்போதுதான் அரசியலில் நாம நினைச்சே பார்க்காத பல விஷயங்கள் நடக்குதுன்னு தெரியுது. அதைப் பற்றி படிக்கும்போது ஏற்படும் ஆச்சரியங்கள், யப்பா. கட்சி, கூட்டணி என இந்த அரசியல்வாதிகள் உண்டாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை தவிடு பொடியாக்குகின்றன இந்த பதிவுகள். இதுபோன்ற அரசியலில் சம்பந்தமே இல்லாத இடைத்தரகர்கள் மூலமாகத்தான் எல்லா விஷயங்களும் நடக்கிறது என்றால், இவர்கள் ஒவ்வொரு தடவையும் நேரில் போய் பார்ப்பதெல்லாம் எதற்காக?  ஒவ்வொரு உரையாடல் பற்றிய விவரங்களை படிக்கும்போதும் தலை சுற்றுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆஷஸ் தொடர்

ஒருவழியா இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குரியாகியிருக்கும் நிலையில் இது போன்ற மொக்கையான தொடர்களை தவிர்ப்பதே நல்லது.

இந்த விஷயத்தில் எனக்கு ஆஸ்திரேலியாவை ரொம்ப பிடிக்கும். அவங்க ஜெயிக்கிறாங்களோ, இல்லையோ கண்டிப்பா ஜெயிக்க முயற்சி செய்வாங்க. அதனால போட்டிகள் நல்லா விறுவிறுப்பாக இருக்கும். ஆஷஸ் (Ashes) தொடர் இன்னிக்கு ஆரம்பிச்சுடுச்சு. முதல் நாளிலேயே இங்கிலாந்து ஆல் அவுட். டெஸ்டுன்னா இப்படி இருந்தால்தான் பார்க்கிற நமக்கும் ஆர்வம் உண்டாகும். அதை விட்டுட்டு ஒர்ரே அணி மூணு நாளைக்கு ஆடினால் எவன் பார்ப்பான்?

ஆஷஸ் இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பிடித்த தொடராக இருப்பதற்கு இந்த விறுவிறுப்பே காரணமாகப் படுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நட்பு

எனக்கு எப்பவுமே ஒரு கெட்ட பழக்கம். நான் அதிகமாக யாருக்கும் ஃபோன் பண்ணிப் பேச மாட்டேன். இதனாலயே பல நண்பர்கள், பழைய நண்பர்கள் ஆகிட்டாங்க. இதுக்கு முக்கியமான காரணம், எப்ப கால் பண்ண நினைத்தாலும் ஒருவேளை ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பாங்களோ, நாம தொல்லை பண்ணிடுவமோன்னுதான். பேசி ஒரு வருஷம் ஆன ஃப்ரண்ட் ஒரு பொண்ணுக்கிட்ட போனவாரம் பேசிட்டு இருந்தேன். அப்பதான் புரிஞ்சுது, பல சமயங்களில் நாம நினைக்கிறதெல்லாம் அர்த்தமே இல்லாத விஷய்ங்கள்ன்னு. தொடர்ந்து தொடர்பில் இருந்தால் எல்லோரும் எப்போதும் போல நெருங்கிய நண்பர்களாகவே இருப்பாங்க. மாறணும்ன்னு நினைக்கிறேன். மாறுவனான்னு தெரியல. 🙂

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகம் – The Lost Symbol

டான் ப்ரவுன் (Dan Brown) எனக்கு மிகவும் பிடித்த த்ரில்லர் கதை எழுத்தாளர். இவரோட கதைகளில் எனக்கு மிகவும் பிடித்ததே, வரலாற்று சம்பவங்களையும், உண்மையான இடங்களையும், பலர் அறிந்திறாத விஷயங்களையும் கோர்வையாக்கி விறுவிறுப்பான நாவலைக் கொடுப்பதுதான்.

அவரது நாவல் தி லாஸ்ட் சிம்பல் (The Lost Symbol), அமெரிக்காவிலுள்ள மேசன் அமைப்பினரையும், அவர்களின் நம்பிக்கைக‌ளையும் பின்னணியாகக் கொண்ட கதை. கடவுள் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார் (அல்லது மக்கள்தான் கடவுள்) என்னும் கருத்தினை வலியுறுத்தும் இந்நாவல் நிச்சயம் பல ஆச்சரியங்களை நமக்குள் விதைக்கும்.

இதைப் படிக்கும் முன், வெப்பத்தை அளவிட நியூட்டன், வேறு ஒரு அளவியை உபயோகித்தார் என்பதும், அதில் நீர் கொதிக்கும் வெப்பநிலை 33 டிகிரி என்பதும் சத்தியமாக நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. இதுபோன்ற நமக்கு தெரியாத விஷயங்கள் பலவற்றை நமக்கு சொல்லியவாறே ஜெட் வேகத்தில் கதை பறக்கிறது.

த்ரில்லர் என்ற பெயரில் லாஜிக்கே இல்லாத முடிவுகளுடன் உள்ள கதைகளை படிப்பதற்கு, இந்த புத்தகத்தைப் படிக்கலாம். த்ரில்லர் படிச்ச மாதிரியும் ஆச்சு, சில விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்ட மாதிரியும் ஆச்சு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

ஆசிரியை: ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். இதில இருந்து என்ன தெரியுது?

மாணவன்: நாங்க படிக்கறதெல்லாம் வேஸ்ட். இதை விட்டுட்டு நல்ல பொண்ணைத் தேடிப் பிடித்தால் போதும், வாழ்க்கையில் உருப்பட்டுடலாம். 🙂

Advertisements
வானவில் – 25/11/2010

3 thoughts on “வானவில் – 25/11/2010

 1. kanagu சொல்கிறார்:

  இந்த வாட்டி வானவில் ரொம்ப நல்லா இருக்கு அன்பு.. 🙂 🙂 பல விஷயங்கள்…

  உண்மையிலேயே சொல்ல போன எல்லாருமே கல்யாணத்துக்கு முன்னாடி மருத்துவ பரிசோதனை செஞ்சிகிறது நல்லது..

  நீரா ராடியா டேப் இன்னும் படிக்கல.. படிச்சிட்டு சொல்றேன்..

  ஆஷஸ் நல்லா போய்ட்டு இருக்கு.. யாரு ஜெயிப்பா-னு இன்னும் கூட தெரியல.. பாப்போம் 🙂 🙂

  1. // உண்மையிலேயே சொல்ல போன எல்லாருமே கல்யாணத்துக்கு முன்னாடி மருத்துவ பரிசோதனை செஞ்சிகிறது நல்லது.. //

   சரிதான். ஆனால் இதுமாதிரி ஆளுங்க தனக்கு வியாதி இருக்குன்னு தெரிஞ்சும் ஏமாத்த நினைக்கிறாங்களே.. இவங்க எல்லாம் அப்படி அவனுங்களா போய் பரிசோதனை பண்ணிக்குவாங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s