இவனுங்களை எல்லாம் என்ன பண்ணலாம்?

கொஞ்ச நாளைக்கு முன்ன சில புத்தகங்கள் வாங்க லேண்ட்மார்க் போயிருந்தேன். வழக்கமா வெளிய போறப்ப கூட வர பசங்க எல்லாம் லேண்ட்மார்க்ன்னு சொன்னவுடனே எஸ்கேப் ஆயிடுவாங்க. சரின்னு தனியா போய் அங்க இருந்த புத்தகங்கெளெல்லாம் பாத்திட்டு இருந்தேன்.

திடீருன்னு ஒருத்தன் ‘ஹாய்!’ன்னு சொன்னான். எனக்கு எப்பவுமே முகங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் கொஞ்சம் சிக்கல்தான். ‘அய்யய்யோ எவனோ ஹாய் சொல்லறானே, இவன் யாருன்னு வேற தெரியலயே’ன்னு ஒரு குழப்பத்திலேயே ‘ஹாய்’ சொன்னேன்.

‘நீங்க புத்தகங்கள் எல்லாம் நிறைய படிப்பீங்களா?’ எனக்கேட்ட போதுதான், நல்லவேளை இவன் நமக்கு தெரிஞ்சவன் இல்லைன்னு நிம்மதி ஆகி,

‘ஓரளவு படிப்பேன்’ என சொன்னேன்.

‘எனக்கு ஏதாவது புத்தகங்களை பரிந்துரைக்க முடியுமா? இங்க நிறைய இருக்கு, எது நல்லா இருக்கும்ன்னே தெரியல. நான் அதிகமா இங்கிலீஷ் புக்ஸ் படிச்சதில்ல‌’ என கேட்க, எனக்கு ரொம்ப சந்தோஷ‌ம். நம்மளையும் மதிச்சு ஒருத்தன் புத்தகங்களைப் பத்தி கேட்கிறானேன்னு அதுவும் ஆங்கில புத்தகங்களை.

நான் உடனே ‘த்ரில்லர்ன்னா ஜெஃப்ரி ஆர்ச்சர். த்ரில்லர்லயே நிறைய விஷயங்களோட வேணும்ன்னா டான் ப்ரவுன், கொஞ்சம் தத்துவ சம்பந்தமான கதைகள்ன்னா பாலோ கோயெல்ஹோ’ன்னு வரிசையா ஒரு 15 நிமிஷம் சொல்லிட்டே இருந்தேன்.

சும்மா சொல்லக்கூடாது ரொம்ப நல்லா கவனிச்சான். அவன் ரொம்ப ஆர்வமா கேட்டதுனால நானும் ரொம்ப குஷி ஆகி எனக்கு தெரிஞ்சவரைக்கும் எல்லாத்தையும் சொல்லி ஓய்ந்த போது,

‘உண்மையிலேயே உங்களுக்கு புக்ஸைப் பத்தி நிறைய தெரிஞ்சிருக்கு. உங்க மொபைல் நம்பரைக் கொடுக்கறீங்களா, எப்பவாவது மறுபடியும் புக் வாங்க செய்யும்போஅது உங்க அட்வைஸ் கேட்டுக்கறேன்’ன்னு சொன்னான்.

நானும் ரொம்ப சந்தோஷமாகி என் மொபைல் நம்பரைக் கொடுத்துட்டு வந்தேன். ஒரு வாரம் கழிச்சு அவன்கிட்ட இருந்து கால் வந்துச்சு. நானும் ரொம்ப சந்தோஷமா, ‘என்னங்க எப்படி இருக்கீங்க.. எதாவது புத்தகம் பத்தி தெரிஞ்சிக்கணுமா?’ன்னு கேட்டேன்.

‘இல்லீங்க.. நாங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு மார்க்கெட்டிங் பிஸினஸ் ஆரம்பிச்சிருக்கிறோம். எல்லோருமே உங்களை மாதிரி ஐடி ஃஃபீல்டுல இருக்கறவங்கதான்.’ அப்படின்னு ஆரம்பிச்சு சும்மா பேசிக்கிட்டே போனான்.

எனக்கு அதெல்லாம் ஒத்துவராது, எனக்கு பிடிக்கலன்னு எவ்வளவு சொல்லியும் விடவேயில்ல. ரெண்டு நாள் யோசிங்கன்னு அவனா டைம் கொடுத்துட்டு கட் பண்ணிட்டான்.

அதுக்கப்புறம் யோசித்த போதுதான் புரிந்தது, அந்த புத்தகம், அட்வைஸ் எல்லாம் என் ஃபோன் நம்பர் வாங்கத்தான்னு. இது தெரியாம ஒரு அரை மணி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டனேன்னு நெனைச்சாத்தான் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.

ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணினப்போ, எனக்கு ஃபோன் பண்ணறதெல்லாம் நேர விரயம்ன்னு ஒரு வழியா கட் பண்ணிவிட்டுட்டேன்.

இது நடந்து ஒரு ரெண்டு மாசம் ஆச்சு. சமீபத்தில் லேண்ட்மார்க் போனபோது, ஒரு ஆள் என்னை மாதிரியே யாரோ ஒருத்தன்கிட்ட எல்லா எழுத்தாளர்களைப் பத்தியும் சொல்லிட்டு இருந்தார். என்னன்னு பார்த்தால் அவனேதான். வேற ஒருத்தன்கிட்ட அதே பிட்டைப் போட்டு கேட்டுட்டு இருந்தான். ‘அடப்பாவி ஒரே விஷயத்தை சொல்லி எத்தன பேரைடா ஏமாத்துவ’ன்னு நெனைச்சுட்டு இந்தப் பக்கம் வந்துட்டேன்.

நானாவது பரவாயில்ல. ஒவ்வொருத்தறப் பத்தியும் பொதுவா சொல்லிட்டு விட்டுட்டேன். இவரோ ஒவ்வொரு புத்தகத்தோட கருவெல்லாம் சொல்லிட்டு இருந்தார். இது எதுவுமே அவனுக்கு தேவையில்ல. அவனுக்கு தேவையெல்லாம் இவரோட ஃபோன் நம்பர்தான்னு தெரியும்போது எவ்வளவு கஷ்டப்படுவார்ன்னு நெனச்சு பாத்தப்ப வருத்தப்படறதா, சிரிக்கறதான்னே தெரியல.

ஏதாவது வியாபாரத்துக்கு ஆள் பிடிக்கறதுன்னா நேரடியா பண்ணவேண்டியதுதான. எதுக்கு இந்த மாதிரி அடுத்தவங்களோட நேரத்தையும், நம்பிக்கையையும் கெடுக்கணும். இனிமேல் உண்மையிலேயே யாராவது எங்கிட்ட வந்து எதாவது புத்தகங்களை பத்திக் கேட்டாலும் எனக்கு சொல்லத் தோணாது. இவனுங்களை எல்லாம் என்ன பண்ணலாம்?

Advertisements
இவனுங்களை எல்லாம் என்ன பண்ணலாம்?

11 thoughts on “இவனுங்களை எல்லாம் என்ன பண்ணலாம்?

 1. ha…ha.. புத்தகம் பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கீங்களே. எனக்கும் உங்க நம்பரை தாப்பா. 🙂
  (ஏதாவது doubt வந்துச்சுன்ன clear பண்ணிக்கத்தான்.)

 2. இதே அனுபவம், எனக்கும் நேர்ந்தது. இடம், நம்ம போரம் லேன்ட்மார்க் புக்ஸ் இருக்கும் இடம். நல்ல வேலை, ஒரே கால் ல நான் எஸ்கேப் ஆகிட்டேன் .. .இவனுங்கள மாதிரி நெறய பேர் இருக்காங்க.

 3. […] இவனுங்களை எல்லாம் என்ன பண்ணலாம்? (via என் எண்ணங்களின் வழித்தடம்) Posted on நவம்பர் 25, 2010 by tamilannaan கொஞ்ச நாளைக்கு முன்ன சில புத்தகங்கள் வாங்க லேண்ட்மார்க் போயிருந்தேன். வழக்கமா வெளிய போறப்ப கூட வர பசங்க எல்லாம் லேண்ட்மார்க்ன்னு சொன்னவுடனே எஸ்கேப் ஆயிடுவாங்க. சரின்னு தனியா போய் அங்க இருந்த புத்தகங்கெளெல்லாம் பாத்திட்டு இருந்தேன். திடீருன்னு ஒருத்தன் 'ஹாய்!'ன்னு சொன்னான். எனக்கு எப்பவுமே முகங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் கொஞ்சம் சிக்கல்தான். 'அய்யய்யோ எவனோ ஹாய் சொல்லறானே, இவன் யாருன்னு வேற தெரியலயே'ன்னு ஒரு குழப்பத்திலேயே 'ஹாய்' சொன்னேன். 'நீங் … Read More […]

 4. […] This post was mentioned on Twitter by princeamaladhas, Anbazhagan Raju. Anbazhagan Raju said: இவனுங்களை எல்லாம் என்ன பண்ணலாம்?: http://wp.me/p12Itx-6X […]

 5. kanagu சொல்கிறார்:

  இத சரி-னு சொல்ற்தா-னு தப்பு-னு சொல்றதா-னு தெரியல.. ஏன்னா இத ஒரு வியாபார யுக்தி-யா உபயோகிச்சுட்டு இருக்காங்க.. ’Now-a-days Everything is fair in business too’ 😦

  1. எனக்கு இது ரொம்ப தவறாகத் தெரியுது. பல சமயங்களில் இவங்க பலரை ஏதோ ஒரு வகையில் ஆசைகாட்டி ஏமாத்திதான் MLMக்கு இழுக்கறாங்க‌.. 😐

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s