சுவாமியே சரணம் ஐயப்பா!!

கார்த்திகை மாசம் வந்துடுச்சு. இனி எங்க பார்த்தாலும் இந்த கோஷத்தைக் கேட்கலாம். சின்ன வயதில் ஐயப்பனுக்கு மாலை போடும் சீசனான இந்த கார்த்திகை மாசம் வந்தாலே ஒரே குஷிதான். அதுக்கு முக்கியமான காரணம், அந்த பஜனைகள்.

ஐயப்ப பஜனைகள், தெரிஞ்சவங்க வீட்டிலயும், கோவில்லயும் நடந்தால் கூட்டமா போய் உக்காந்துக்கிட்டு தொண்டைத்தண்ணி வத்தற வரைக்கும் பாடுவோம் (கத்துவோம்). அதுவும் எங்கயாவது கோவில்ல மைக் வச்சுட்டங்கன்னா அவ்வளவுதான். மைக் பக்கத்துல யார் உட்காரதுன்னு ஒரு சின்ன சண்டையே நடக்கும். ஒரு வழியா மைக் பக்கத்தில் உட்காந்துட்டோம் எல்லோரும் காதைப் பொத்திக்க வேண்டியதுதான். சின்னப் பசங்கதானன்னு மத்தவங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

பஜனைகளுக்கு போவதற்கு, பாட்டுக்கடுத்த இன்னொரு காரணம் அங்க கொடுக்கிற பொங்கலோ, சுண்டலோ. சும்மா ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் பஜனைல பாடிட்டு அந்த பிரசாதம் வாங்கி சாப்பிடறப்ப கிடைக்கிற சந்தோசம் இருக்கு பாருங்க. சான்ஸே இல்லை. அதுவும் பெரும்பாலும் ஐயப்ப பஜனைகளில் கொடுக்கிற பிரசாதங்கள் அநியாடயத்துக்கு நல்லா இருக்கும்.

இதெல்லாம் ஒரு அஞ்சாவது படிக்கிற வரைக்கும்தான். அதுக்கப்புறம் பெரும்பாலும் பஜனைகளுக்கு போவதை விட்டாச்சு. ஆனாலும், ஐயப்பனுக்கு மாலை போட்டவங்களைப் பார்க்கும் போதும், மத்தவங்க அவங்களை (பொடிப்பயலைக் கூட) மரியாதையா ‘சாமி, சாமி’ன்னு கூப்பிடறதப் பார்க்கும்போதும் பெரிதானவுடன் நாமும் எல்லா வருஷமும் மலைக்கு மாலை போட்டுட்டு போகணும்னு நினைப்பேன்.

எங்க அப்பா எப்பவுமே சபரிமலைக்கு மாலை போட்டது கிடையாது. அப்போது அவர் லாரிக்கு டிரைவரா போயிட்டு இருந்தார். அதனால் ‘என் தொழிலுக்கு, மாலை போட்டுட்டு சுத்தபத்தமா எல்லாம் இருக்கமுடியாது’ன்னு சொல்லுவார். அதனால் ‘நம்ம வீட்டில் மாலை போட்டால் நாமதான் போடணும். நம்ம அப்பா, அம்மா எல்லாம் நம்மல சாமி, சாமின்னு கூப்பிடுவாங்க, திட்டவே மாட்டாங்க’ன்னு நினைப்பேன். ஒவ்வொருதடவை அவங்க திட்டும்போதும்,  ‘மாலை போட்டிருந்தால் நமக்கு இப்படி திட்டு விழாதே’ன்னு தோணியதுண்டு.

இந்த நினைப்பெல்லாம் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரைக்கும் இருந்தது. ஒவ்வொரு வருஷமும் வீட்டில் போய், ‘இந்த வருஷம் மாலை போடப்போறேன்’ என சொல்லத்தோன்றும். இருந்தாலும் ஏதோ ஒரு பயத்தில் சொல்லாமயே விட்டுடுவேன்.

வீட்டுல எதாவது திட்டுவாங்கங்கிறது ஒரு காரணமா இருந்தாலும், காலைல நாலு மணிக்கு எழுந்து குளிக்கணும், காலை சாப்பாடு கிடையாது, போன்றவைகளும் காரணமாக இருந்தன. பத்தாவது தாண்டினவுடன், மாலை போட்டுட்டு பொண்ணுங்களை சைட் அடிக்கக் கூடாதுங்கிறதும் இந்த காரணங்களில் ஒன்றாக சேந்துக்கிச்சு. இதெல்லாம் கஷ்டம்ன்னு கிடையாது. ஆனால் என்னால் செய்ய முடியுமாங்கிறதுதான் பயமே. அதுவும் இந்த சீனியர் பசங்களெல்லாம், ஏதாவது தப்பு பண்ணிட்டால் தேங்காய் உடையாது, அது இதுன்னு பயப்படுத்திட்டாங்க.

அதுக்கப்புறம் சபரி மலைக்கு மாலை போடும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்விட்டது. அதுக்கு முக்கிய காரணம், எங்க ஊரில் மாலை போட்டுட்டு சுத்திட்டு இருந்தவங்கதான். சபரி மலைக்கு மாலை போடரவங்களில் பெரும்பாலானோர், எந்த வேலைக்கும் போகாமல் சும்மா சுத்திட்டு இருக்கிறவங்களாத்தான் இருந்தனர்.  அதுவும் நேத்துவரைக்கும் ஊரே அவனை ஒண்ணுக்கும் ஒதவாதவன்னு திட்டியிருக்கும். இன்னிக்கு மாலை போட்டுட்டு வந்தவுடனே சாமி, சாமின்னு மரியாதையா பேசும்.

இந்த முரண்பாடு எனக்கு பிடிக்கவில்லை. மேலும், சின்ன வயசில் பார்த்த உண்மையிலேயே பக்தியானவர்கள் ரொம்பவே குறைந்திருந்தார்கள். அப்போதெல்லாம், மாலை போட்டாங்கன்னா ஒரு தப்பும் பண்ணாமல் இருப்பாங்க (அல்லது, இருப்பாங்கன்னு சொல்லப்பட்டிருக்கிறேன்), ஆனால் இப்போதோ, எல்லாத்தையும் பண்ணிட்டு (தண்ணி, தம்), அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்துட்டு நானும் விரதம் இருந்திட்டேன்னு கோவிலுக்கு போறவங்க அதிகம் ஆனாங்க. இதனால் நாம மாலை போட்டாலும் இந்த கூட்டத்தில் சேத்திடுவாங்கன்னுட்டு அந்த எண்ணத்தையே விட்டுட்டேன்.

உண்மையிலேயே கடவுள் மேல் நிஜமான பக்தி காரணமாக மாலை போடறவங்க இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மேலே சொன்ன வகைகளில் பலர் இருந்ததால் அதுவே அதிகமாக கண்ணில்பட்டது. மேலும், ஓரளவு பெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் படிக்க ஆரம்பித்தபோது, ஐயப்ப விரதத்தில் பெண்களை ஒதுக்கும் போக்கு, மிகப் பெரியத்தவராக வெளிப்பட்டது. அதுவும் எங்க ஊரில் சிலர், பெண்களை சுத்தம் கருதி வீட்டுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள். இதெல்லாம் பார்த்தபிறகு, ஐயப்ப விரதத்தின் மேல் இருந்த ஈர்ப்பு சுத்தமாகப் போய்விட்டது.

Advertisements
சுவாமியே சரணம் ஐயப்பா!!

11 thoughts on “சுவாமியே சரணம் ஐயப்பா!!

 1. //வீட்டுல எதாவது திட்டுவாங்கங்கிறது ஒரு காரணமா இருந்தாலும், //

  வீட்டுல கெடக்குற திட்டுக்கெல்லாம் அசர்ற ஆளா…..
  ட‌வுட்டா இருக்கே….

 2. //மாலை போட்டுட்டு பொண்ணுங்களை சைட் அடிக்கக் கூடாதுங்கிறதும் இந்த காரணங்களில் ஒன்றாக சேந்துக்கிச்சு.//

  ஹி..ஹி…பப்ளிக்…பப்ளிக்

  1. அய்யய்யோ பொது இடம்ன்னு தெரியாம உளரிட்டனோ.. 😐

   // பொண்ணுங்களை சைட் அடிக்கக் கூடாதுங்கிறதும் இந்த காரணங்களில் ஒன்றாக //
   இவையனைத்தும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவை, சீரியஸா எதுவும் இல்லைன்னு சொன்னால் நம்ப வேற மாட்டாங்களே நம்ம மக்கள்.. 🙂

 3. Thirumalai சொல்கிறார்:

  மேலும், சின்ன வயசில் பார்த்த உண்மையிலேயே பக்தியானவர்கள் ரொம்பவே குறைந்திருந்தார்கள்

  100 % correct.

 4. kanagu சொல்கிறார்:

  /*மாலை போட்டுட்டு பொண்ணுங்களை சைட் அடிக்கக் கூடாதுங்கிறதும் இந்த காரணங்களில் ஒன்றாக சேந்துக்கிச்சு.*/

  அன்பு.. கொஞ்ச நாளா நீ உண்மைய பேசுறே-னு பசங்க சொன்ன போது நான் நம்பல. இப்ப நம்புறேன்… 🙂

  நானும் மாலை போடுறத பத்தி யோசிச்சதுண்டு… ஆனா பேசிக்கலி நான் சோம்பேறி.. அதனால யோசிக்கிறதோட சரி 🙂 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s