வானவில் – 19/11/2010

ஊழ‌ல்

சமீப காலமா எந்த செய்தித்தாளை எடுத்தாலும் ஊழல், ஊழல்தான் செய்தி. காமன்வெல்த் 70,000 கோடி, அலைக்கற்றை 1,75,000 கோடி, இங்கே கர்நாடகாவில் நில ஊழல் 6000 கோடி, ஆதர்ஷ் அப்பார்ட்மெண்ட் வீடு ஒதுக்கீடு என திரும்பியப் பக்கமெல்லாம் ஊழல் செய்திகளால் நாறிப்போய் கிடக்கிறது இந்தியாவின் மானம், உலக அரங்கில்.  சரி இதெற்கெல்லாம் தீர்வு என்ன? சம்பந்தப்பட்டவர்கள் பதவி விலகிவிட்டனர். அவ்வளவுதான். “அப்ப அவங்க அடிச்ச பணம்? அதற்கான நடவடிக்கை?” இப்படியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்டீர்கள் என்றால், இந்திய அரசியலைப் பற்றி உஙளுக்கு எதுவும் தெரியவில்லை என அர்த்தம். வாழ்க ஜனநாயகம்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ப்ளான்

“எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்”ன்னு வடிவேல் சொல்லுவாரு. ஆனால் எங்களைப் பொருத்தவரை நாங்க ப்ளான் பண்ணி பண்ணுன எந்த காரியமும் உருப்படியா நடந்ததில்லை, கடைசி நேரத்தில் ஏதாவது ஒண்ணு சொதப்பிடும். மைனா படம் பார்க்க தீபாவளி நாளில் இருந்தே ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். ஆனால் எல்லாம் சொதப்பிடுச்சு. ஆனால் போன சனிக்கிழமை, மதியம் சாப்பிடப் போலாம்ன்னு ஹோட்டலுக்கு போயிட்டிருந்த வழியில், மைனா போலாமென சொல்ல, உடனே ஓசூருக்கு பஸ் ஏறிட்டோம். இது முதல் தடவையில்லை. நிறைய தடவை, எந்த ப்ளானும் இல்லாம செய்யற காரியங்கள்தான் நல்லபடியா முடிஞ்சிருக்கு. எதையும் திட்டமிட்டு செய்யணுங்கிறதெல்லாம் சும்மாவோ?

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Survival Organization

சர்வைவல் அமைப்பு (Survival International). இதைப்பற்றி எனக்கு தெரியவந்தது, இவர்கள் ஒரிசா பழங்குடியனரான டோங்க்ரியா கோந்த் (Dongria Kondh) மக்களுக்கு ஆதரவாக வேதாந்தாவின் பாக்ஸைட் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோதுதான். இவர்களது தளத்துக்கு சென்று பார்த்தபோதுதான் டதெரிந்தது, இவர்கள் உலகின் அனைத்து மூலையிலும் உள்ள பழங்குடியனரின் வாழ்வுரிமைக்காக போராடி வருகிறார்கள் என்று.

இவர்களின் செயல்களில் நாமும் பல வகைகளில் உதவ முடியும். அதற்கான வழிகளை அறிய அவர்களது தளத்திற்கு செல்லுங்கள். (http://www.survivalinternational.org/actnow) உங்களால் எந்த வகையில் உதவ முடியும் என நினைக்கிறீர்களோ அந்தவகையில் உத‌வுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இவர்களின் செயல்களைப்பற்றி தெரிவியுங்கள்.

அது மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் பழங்குடியினரின் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் இந்த தளத்தில் (http://www.survivalinternational.org/tribes) நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பமீலா

இந்த ஆங்கில செய்தி சேனல்களின் அலும்புக்கு அளவே இல்லாமல் போயிட்டு இருக்கு. ஒபாமா வந்தபோது, ஏதோ கடவுளே வந்துட்ட மாதிரி அவரோட அல்லா நடவடிக்கைகளையும் ஒண்ணுவிடாமல் ஒளிபரப்பினார்கள். என்ன சாப்பாட்டை ரசிச்சு சாப்பிட்டாருங்கிறதில இருந்து. சரி அவர்தான் அமெரிக்க அதிபர்ன்னு விட்டுத்தொலைக்கலாம்ன்னா, இப்ப பமீலா வந்ததை அதுக்கு மேல பெரிய விஷயமா பேசுறாங்க. பமீலா சேலை கட்டுனா செய்தி, வீட்டைக் கூட்டினா செய்தி, சன் பாத் எடுத்தா செய்தின்னு, இவங்களோட எல்லா வெப்சைட்டிலும், முதல் பக்கத்திலேயே பமீலாவின் படம்தான் வரவேற்கிறது. டிவி நடிகையான பமீலா, ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கிறதுக்காக வந்திருக்காங்க. இதுக்கு எதுக்கு இவ்வளவு அலம்பல்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

பொண்ணு: நாம கல்யாணம் பண்ணிக்கிட்டவுடனே சிகரெட் பிடிக்கறத விட்டுடணும்.
பையன்: சரி. 😐
பொண்ணு: தண்ணியடிக்கறதையும்தான்.
பையன்: சரி. 😦
பொண்ணு: நைட் கிளப்புக்கும் போறதையும் விட்டுடணும்.
பையன்: சரி… 😳
பொண்ணு:வேற‌ என்ன‌ கெட்ட‌ ப‌ழ‌க்க‌த்தை விட‌லாம்ன்னு நினைக்கிற‌?
பையன்: உன்னை க‌ல்யாண‌ப் ப‌ண்ணிக்க‌லாங்கிற‌ ஐடியாவை.. 👿
பொண்ணு: ?? 😦

Advertisements
வானவில் – 19/11/2010

5 thoughts on “வானவில் – 19/11/2010

 1. //இதுக்கு எதுக்கு இவ்வளவு அலம்பல்?

  நாளைக்கே நீங்க ஒரு வி.ஐ.பி ஆயிட்டீங்கன்னா … எங்க பாத்தாலும் அன்பு மயமாத்தான் இருக்கும். அதுக்குத்தான் இப்பவே ஒத்திகை பாத்திட்டு இருக்கோம்.

  //அது மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் பழங்குடியினரின் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் இந்த தளத்தில் (http://www.survivalinternational.org/tribes) நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

  நல்ல தகவல்.

  // எதையும் திட்டமிட்டு செய்யணுங்கிறதெல்லாம் சும்மாவோ?
  ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

  1. // நாளைக்கே நீங்க ஒரு வி.ஐ.பி ஆயிட்டீங்கன்னா //
   நானா..? அவ்வ்வ்.. இப்படியெல்லாம் யோசிக்கறதுக்கே ரொம்ப பெரிய்ய்ய மனசு வேணும்.. 🙂 அதை கமெண்டா வேற போட்டிருக்கீங்களே 🙂

   யப்பா.. இது அவங்களா போட்ட கமெண்டுப்பா.. நான் ஏதோ அவங்ககிட்ட கெஞ்சி ‘நீ எதிர்காலத்தில விஐபி ஆவ’ன்னு போட சொன்னதா நெனைச்சுக்கிட்டு என்னை ஓட்டியெல்லாம் கமெண்ட் பண்ண‌ப்படாது.. ஆமா 🙂

   1. // நான் ஏதோ அவங்ககிட்ட கெஞ்சி ‘நீ எதிர்காலத்தில விஐபி ஆவ’ன்னு போட சொன்னதா நெனைச்சுக்கிட்டு என்னை ஓட்டியெல்லாம் கமெண்ட் பண்ண‌ப்படாது.. //

    ஆமாம் மக்களே இந்த கமெண்டுக்கும் அன்புக்கும் எந்த சம்பந்தமும் இல்ல…இல்ல…இல்ல

    (ஆனா தம்பி… எனக்கு கொடுக்கிற கமிஷன்ல மாத்திரம் கைவச்சிடாதீங்க.)

 2. kanagu சொல்கிறார்:

  ஊழல் உண்மையாவே தினசரி கலக்கிட்டு இருக்கு.. எல்லா கட்சியையும் கலக்கிட்டு இருக்கு 🙂

  ‘எந்த விஷயத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும்’- இது காமெடி டயலாக். அத பின்பற்றினா காமெடியா தான் ஆகும் 😛 😛

  ‘Survival organisation’ பத்தி தகவல் கொடுத்ததுக்கு நன்றி.. அவங்க வலைத்தளத்த பாக்குறேன்..

  ஆமா ‘பமீலா’ யாரு???/ 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s