சே குவேராவும் இன்றைய வியாபார சூழலும்

சே குவேரா (Che Guevara), லத்தீன் அமெரிக்காவின் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முற்பட்ட மிகப் பெரும் தலைவன்.முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து சாகும் வரை போராடிய போராளி. கியூபாவின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த‌ போதும், லத்தீன் அமெரிக்காவின் அனைத்து மக்களும் சம நிலையை அடைய வேண்டும் எனும் குறிக்கோளுக்காக, தனது பதவியை விட்டெறிந்து, பொலீவியாவின் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்.

மருத்துவம் படித்துக் கொண்டிருந்த வயதில், லத்தீன் அமெரிக்கா முழுக்க பயணம் செய்ததன் மூலம், மக்களின் வறுமை நிலையை அறிந்துகொண்ட அவர், இதற்கு தீர்வு மார்க்ஸியம் என நம்பி அதன் பாதையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

இவரது பெயரைக் கேள்விப்பட்டவர்கள் ஏராளம். ஆனால் இவரது உண்மையான நோக்கங்களை புரிந்து கொண்டவர்கள், அவரது பாதையில் செல்ல முற்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே. சே குவேராவின் படத்தை டி‍-ஷர்ட்டில் போட்டுக்கொண்டு, கம்யூனிசம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒரு விஷயம் என்று பேசுபவர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.

முதலாளித்துவத்தை சாகும் வரை எதிர்த்த சே குவேராவின் படங்களையும், பெயர்களையும் வியாபார நோக்கில் பயன்படுத்தி காசு பார்ப்பவர்கள் ஏராளம். இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரிந்திருந்தால், தன்னை புகைப்படம் எடுக்கவே அனுமதித்திருக்கமாட்டார் சே.

சே-வை வியாபார நோக்கில் பயன்படுத்தும் இவர்கள், அவரின் கொள்கையைப் பரப்பினார்களா என்றால், இல்லை. இவர்கள் வியாபாரத்துக்கு அவரின் படம் மட்டுமே போதுமானதாக இருந்தது. அவரின் கொள்கையைப் பரப்பினால் அது வியாபாரிகளுக்கே எதிரானதுதானே, அப்புறம் எப்படி இவர்கள் அதை செய்வார்கள்.

சே குவேரா படம் போட்ட சட்டையை அணிந்திருந்த நண்பனைப் பார்த்து கேட்டேன். இவர் யார் தெரியுமா. “தெரியுமே. ‘சே குவேரா’. கியூபா விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். சின்ன வயதிலேயே பல சாதனைகள் புரிந்தவர்”. இதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. இவனாவது பரவாயில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள்

‘சே, ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு முன் கியூபா தலைவராக இருந்தவர்தானே?’

‘அமெரிக்காவுல இருந்த பெரிய ஆளுதானே. பெருசா எல்லாம் ஒண்ணுமில்ல‌. என் ஃப்ரெண்ட் போட்டு இருந்தான். பாக்க நல்லா இருந்துச்சு நானும் வாங்கிட்டேன்’

இன்னும் சிலர், அவரது கருத்துக்களோடு ஒத்துபோகவில்லையெனினும் ஒரு டிரெண்டாக அவரது படத்தை வைத்திருப்பவர்களும் உண்டு. இவர்கள் யாருக்கும் சேவின் மோட்டார் சைக்கிள் டைரீஸ் புத்தகம் பற்றிக்கூடத் தெரியாது.

இவர்களை சொல்லி குற்றமில்லை. ‘சே’வை ஒரு பிராண்டாக மாற்றிய வியாபாரிகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

நான் மோட்டார் சைக்கிள் டயரீஸ் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவன், ‘இவர் ஒரு நல்ல பேச்சாளர். ஒழுங்கா ஏதாவது வியாபாரத் துறையில் இருந்திருந்தால் பெரிய ஆளா வந்திருக்கலாம். தேவையில்லாமல் கம்யூனிசம் அது இதுன்னு பேசி சின்ன வயசிலயே செத்துபோனதுதான் மிச்சம்’ என சொன்னான்.

இதுபோன்ற ஆட்கள் இருக்கும்வரை, சேவின் கொள்கைகளையும், அதன் உயர்ந்த நோக்கங்களையும் இளையத் தலைமுறையினருக்கு தெளிவாகப் புரிய வைப்பது என்பது கடினமே எனத் தோன்றுகிறது.

இளம் வயதிலேயே ஆதிக்ககாரர்களை எதிர்த்து சாகும்வரை உறுதியுடன் போராடிய சே குவேராவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவையும், பின்பற்ற வேண்டியவையும் ஏராளம்.

நான் இதைப் பற்றி தெரிந்து கொண்டதெல்லாம் சில புத்தகங்கள் மூலமாகத்தான். சில வலைப்பதிவுகள், கம்யூனிசத்தையும், சேவைப் பற்றியும் உண்மையான விஷயங்களைப் பரப்ப முயற்சிக்கின்றன. அவர்களின் முயற்சி வெற்றி பெற‌ வாழ்த்துக்கள். கஷ்டமான விஷயம்தான். முயற்சி செய்துதான் பார்ப்போமே.

Advertisements
சே குவேராவும் இன்றைய வியாபார சூழலும்

3 thoughts on “சே குவேராவும் இன்றைய வியாபார சூழலும்

  1. ஆமாம் நண்பரே அவர் யாரென தெரியாமல் அவர் படம் போட்ட பனியன் அணிபவர்களே அதிகம்..ஒரு முறை நான் அணிந்திருந்ததைப் பார்த்து என்னோடு பயணம் செய்த பயணி ஒருவர் என்னிடம் கேட்டார் அவர் யாரென தெரியுமா என்று?நான் சொல்லவே அப்போ அணியுங்கள் பரவாஇல்லை..நிறையப் பேருக்கு தெரியாது .ஆனால் அணிந்திருப்பார்கள் ..அதான் கேட்டேன் என்றார்..
    அது குறித்த கவிதையொன்றை அப்போ எழுதினேன்..

    http://wp.me/pFau0-15

  2. kanagu சொல்கிறார்:

    அவர் ஒரு வியாபார பொருளாக மட்டுமே இங்கு பார்க்கபடுகிறார்.. 😦 😦 அவரின் நோக்கங்கள் அதி மறைந்து போய்விடுகின்றன.. 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s