மைனா.. மைனா..

ஒருவழியா நேத்துதான் மைனா பார்த்தேன். பெங்களூரில் இந்த வாரமாவது வெளியாகும் எனக் காத்திருந்து அது நடக்காததால் ஓசூர் போய்தான் பார்க்கவேண்டியிருந்தது. பெங்களூரில் எப்பவுமே இதுதான் பிரச்சினை. எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், பெரிய ஹீரோ இல்லைன்னா இங்க அது ரிலீஸ் ஆகாது.

பிரபு சாலமனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவருடைய முந்தையப் படங்கள் கதையும், ட்ரைலரும் வித்தியாசமானப் படம் எனப் பார்க்க தூண்டும். போய் பார்த்தால் திரைக்கதையில் ஏதாவது ஒன்று சொதப்பி இருப்பார் மேலும் அனைத்தும் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலாகத்தான் இருந்தன. ஆனால் இந்தப் படத்தில் அதை புரிந்துகொண்டு செயல்பட்டிருக்கிறார்.

மூணாருக்குப் பக்கத்தில் இவ்வளவு அழகான கிராமத்தை கதைக்களமாகத் தேர்ந்தெடுத்ததற்கே இவருக்கு தனி பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும். அதுவும் அந்த மலைப் பகுதியின் அழகையும், அங்கே சென்று வரும்போது ஏற்படும் இடர்பாடுகளையும் தெளிவாகக் காட்டும் வண்ணம் திரைக்கதை அமைத்தது நிச்சயம் புத்திசாலித்தனமான விஷயம்தான்.

ஆனால் பல இடங்களில் பருத்திவீரனின் சாயல் அடிப்பதைத் தவிர்த்திருக்கலாம். சின்ன வயதிலிருந்தே ரௌடி பயலாக திரிவது, சிறுவயது காதல், ஓவராகப் பேசும் ஒரு பொடியன், காதலுனுக்காக அம்மாவிடம் கதாநாயகி சண்டையிடுவது, உருக்கமான க்ளைமாக்ஸ் என அனைத்திலும் பருத்திவீரனின் பாதிப்பு தெரிகிறது.

படத்தில் பெரும்பாலோனோர் புதுமுகங்கள் அல்லது ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியவர்கள். இவர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு அருமையான படைப்பைக் கொடுத்த பிரபு சாலமன், மிகவும் பாராட்டுக்குரியவர். படத்தின் ஒவ்வொருக் காட்சியிலும் இவரது உழைப்பு தெரிகிறது.

விதார்த். தொட்டுப்பார் மூலம் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், இதுதான் தன் முதல் படமாக சொல்லுவார் என எதிர்பார்க்கிறேன். மிகச் சிறப்பான நடிப்பு. கதாப்பாத்திரத்துடன் முதல் காட்சியில் இருந்தே ஒன்றிவிடுகிறார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.

அமலா.  நெஞ்சத்தை கொள்ளைக் கொண்டு போகிறது இவரது நடிப்பு. கிராமத்து இளம்பெண் மைனாவாக வாழ்ந்திருக்கிறார். நல்ல களையான, பெரிதாக மேக் அப் இல்லாத பரு விழுந்த முகத்துடன் மைனாவாக இவர் வரும்போது நம் மனமும் சுருளியை போல இவரை நேசிக்க வைக்கிறது. ஒவ்வொருக் காட்சியிலும் தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது இவரிடமிருந்து. தமிழ் சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்த இன்னொரு நடிகை கிடைத்துவிட்டார் (மறுபடியும் கேரளாவுக்கே நன்றி!!). சிந்து சமவெளியின் மூலம் ஒரு மாதிரியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டிருப்பார். நல்லவேளை மைனா வந்து காப்பாற்றியது.

போலீஸ் அதிகாரியாக வரும் நபர் (அவர் பெயர் என்ன?), தம்பி ராமையா என அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து சரியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தம்பி ராமையாவுக்கு, மெயின் காமடியனாக இதுதான் முதல் படம். சிறப்பாகவே செய்திருக்கிறார்.

இசை இமான். நம்பவே முடியவில்லை. பாடல் வரிகள் தெளிவாகக் கேட்கின்றன. இதுபோன்ற கதைகளுக்கு இமானால் இசை அமைக்க முடியும் என, படம் வெளிவரும் முன் யாராவது சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். இது போன்று தொடர்ந்து இவர் இசையமைத்தால் நம் காதுகளுக்கு நல்லது. ‘மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’  பாடல் நல்ல மெலடி, இன்னும் சில நாட்களுக்கு நம் மக்களின் உதடுகளில் முணுமுணுக்க வைக்கும்.

ஒரே ஒரு நெருடலான விஷயம். வன்முறைக் காட்சிகள். இது போன்ற இயல்பான கதையம்சம் கொண்ட அனைத்து படங்களிலும் இப்போது வன்முறைக் காட்சிகளும் சற்றே அதிகமாக வருவது வருத்தமாக இருக்கின்றது. அதுவும் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகளை சற்றே குறைத்திருக்கலாம்.

மூணாரின் மலைப் பகுதியூடாக கதையோடு சேர்ந்து நாமும் பிரயாணிக்கையிலேயே தெரிகிறது படக் குழுவினரின் உழைப்பு. நிச்சயம் அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கின்றது. அந்த மலைப் பகுதியின் அழகை சிறப்பாகக் காட்டியதில் ஒளிப்பதிவாளர் சுகுமாரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பாடல் காட்சியில் மைனாவின் இமை பட்டு தொட்டாசிணுங்கி செடி மூடும். இது போன்ற கவிதைத்துவமான காட்சிகள் பல. நிச்சயம் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் நிறைய உழைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் மைனா நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

Advertisements
மைனா.. மைனா..

12 thoughts on “மைனா.. மைனா..

 1. பருத்தி வீரன் பாதிப்பில்லாமல் இப்போது கிராமத்துக் கதைகள் வருவதில்லை. நகரத்து கதைகளிலிருந்து கிராமத்திற்கு மாறியது போல, கொஞ்ச காலம் இந்த காதலையும் மறைந்து திரையுலகம் இயங்கினால் தேவலை.

  1. யாராச்சும் ஒருத்தர் நிச்சயம் முயற்சி செய்வாங்கன்னு நினைக்கிறேன்.
   இந்த வாரம் நந்தலாலா ரிலீஸ் ஆகுது. இதில காதலெல்லாம் இல்லைன்னு கேள்விப்பட்டேன். நான் கடவுள் படத்தில், பாலாவும் காதல் என்ற விஷயத்தை எடுத்துக்கல. தமிழ் சினிமா நல்ல பாதையை நோக்கி போயிட்டிருக்கு..

 2. நான் எழுத நினைத்தவை அனைத்தும் எழுதி விட்டாய் நண்பா ஒன்றே ஒன்றை தவிர. இத்தகைய அணைத்து படங்களின் முடிவும் சற்று ஒரே மாதிரியாக உள்ளதை சொல்கிறேன்.

 3. நல்ல படங்களைப் பார்க்கவும்,பாராட்டவும் நமக்கு இந்த மின் ஊடகமானது துணை புரிவதுதான் மிகச் சிறப்பானதாயிருக்கின்றது. அச்சு ஊடகங்கள் இன்னும் பரவலாயிருந்தாலும் மின்னூடகங்கள் அதனை விஞ்சும் காலம் வரும். அதில் உண்மையான விமர்சனங்களுக்கு எந்த முக மூடியும் இல்லாதிருக்கும்.

  1. நிச்சயமாக.. இப்போதெல்லாம் அச்சு ஊடகங்களின் விமர்சனங்களைவிட, வலையுலகின் விமர்சனங்களைப் படித்து திரைக்கு செல்பவர்கள் அதிகமாகிவிட்டனர். நிச்சயம் அச்சு ஊடகங்களை வலையுலகம் விஞ்சும் காலம் வரும்..

   வருகைக்கு நன்றி..

 4. // வன்முறைக் காட்சிகள். இது போன்ற இயல்பான கதையம்சம் கொண்ட அனைத்து படங்களிலும் இப்போது வன்முறைக் காட்சிகளும் சற்றே அதிகமாக வருவது வருத்தமாக இருக்கின்றது.

  😦 வன்முறைக்கு பயந்தே நான் பாதி படங்களை பார்ப்பதில்லை.

  1. // வன்முறைக்கு பயந்தே நான் பாதி படங்களை பார்ப்பதில்லை//

   உங்களை மாதிரி நல்ல மனசுக்காரங்களும் படம் பார்க்க வருவாங்கன்னு யோசிக்காமயே படம் எடுத்தடறாங்க.. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s