வானவில் – 12/11/2010

அர்த்தமில்லா விவாதங்கள்

இந்த செய்தி தொலைக்காட்சிகளின் தொல்லை தாங்கல. இவங்களுக்கு எப்பொ பார்த்தாலும் இவங்களுக்கு எப்பவும் ஏதாவது ஒண்ணு பரபரப்பா இருந்துக்கிட்டே இருக்கணும். இவங்களோட இந்த டிஆர்பி சண்டையில நாம தெரிஞ்சிக்கிறது என்னமோ ரொம்ப கம்மிதான். எப்ப என்ன முக்கிய செய்தியா இருந்தாலும் போதும், நாலு பேர் சேர்ந்து பேச அதப்பத்தி ஆரம்பிச்சுடுறாங்க. ஒரு மணி நேரம் சண்டை போட்டுட்டு, விவாதம் பாதில இருக்கிறப்பவே அவ்வளவுதான் நேரம் முடிஞ்சுடிச்சுன்னு எந்த முடிவுமே சொல்லாம முடிச்சிடுறாங்க. கடைசியா என்னதான் முடிவு சொன்னாங்கன்னு யோசிச்சாதான் தெரியும் அவங்க  ஒண்ணுமே சொல்லலைன்னு. 😐

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு சிலர் இருக்காங்க. எப்போ பாத்தாலும் காசு காசுன்னுதான் பேச்சு. ஒருதடவை ஆங்கிலத்தில் பதிவெழுத ஆரம்பிச்சப்ப, உடன் தங்கியிருந்தவனிடம், ‘மச்சி புதுசா ப்ளாக் எழுத ஆரம்பிச்சிருக்கேன். எப்படியிருக்குன்னு படிச்சுப்பாத்து சொல்லுடா’ன்னு சொன்னதுக்கு, ‘எதயாவது செஞ்சா காசு வரும்ன்னு சொல்லு செய்யறேன். மத்தபடி வெட்டிவேலையெல்லாம் சொல்லாத’ன்னான். இதோட நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்ல, அதுக்கப்புறம், ‘நீ ஏண்டா தேவையில்லாம டைமை வேஸ்ட் பண்ணிட்டிருக்க. ப்ளாக் ஹோஸ்ட் எல்லாம் அவனுக்கு சைட் வேல்யூ அதிகம் ஆகணுங்கிறதுக்காக உஙளுக்கெல்லாம் ஃப்ரீயா கொடுக்கிறான். நீங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி எழுதி அவனுக்கு காசு சம்பாரிச்சு கொடுக்கறீங்க’ன்னான். இவனை மாதிரி ஆளுங்ககிட்டயெல்லாம் இதப்பத்தி பேசுனது என் தப்புன்னு அமைதியா இருந்துட்டேன். 😳

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காவிரிப் பிரச்சினை

விவசாயத்துக்கு தண்ணி இல்லை தண்ணியைத் திறந்துவிடுங்கன்னா, ‘எங்க அணை நிரம்ப அரை அடி பாக்கி இருக்கு, நிரம்புனவுடன் வர உபரி நீர் எல்லாம் உங்களுக்குத்தான். ஆனால் அணை நிரம்பாம நீரைத் திறந்துவிட முடியாது’ன்னு கர்நாடக அரசியல்வாதிங்க சொன்னப்ப அழுவறதா சிரிக்கிறதான்னே தெரியல. நீர் பங்கீடுங்கிறது, இருக்கிறத சரியா பகிர்ந்துக்கிறதுன்னுதான் தமிழில் அர்த்தம் வருது. கன்னடத்தில் ஒருவேளை மிச்சம் மீதியக் கொடுக்கிறதுன்னு அர்த்தம் வருதோ என்னவோ. நல்லவேளையா மழை வந்தது. இல்லைன்னா இந்த காவிரிப் பிரச்சினை மறுபடியும் பெரிசாகியிருக்கும். ஜல் புயலுக்கு நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பின் நவீனத்துவம்

எனக்கு தமிழ் இலக்கியத்தில் அவ்வளவா பரிச்சயம் இல்லை. ஆனாலும் ஓரளவுக்கு ஆர்வம் உண்டு. எனக்கு பல நாளா புரியாத ஒரு விஷயம் இந்த பின் நவீனத்துவம். அப்படீன்னா என்ன? சத்தியமா தெரியலைங்க. ஆரம்பத்தில் படித்த பின் நவீனத்துவக் கதைகள் பாதி எனக்கு புரியல. சரி, பின் நவீனத்துவக் கதைகள்ன்னா நமக்கு புரியாது போலன்னு விட்டுட்டேன். நேத்து ஒரு சிறுகதைப் படிச்சேன். எனக்கு நல்லாத்தான் புரிஞ்சுது. ஆனால் இதையும் பின் நவீனத்துவம்னுதான் எழுத்தாளர் போட்டு இருந்தார். பின் ந‌வீனம்/இருத்தலிய நவீனம் இதைப்பத்தியெல்லாம் நல்லாத் தெரிஞ்சவங்க, என்னை மாதிரிப் பசங்களுக்கு புரியற மாதிரி விளக்கம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். நிறைய பேர் பின் நவீனக்கதைகள் அருமையா இருக்குன்னு எழுதறாங்க. புரிஞ்சா நாமும் படிக்கலாமேன்னுதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குழப்பம்

நண்பன் ஒருவன் இந்த தீபாவளிக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து பட்டாசு வாங்கியிருந்தான். அவங்கிட்ட, ‘தேவையில்லாமல் இதில் இவ்வளவு காசு செலவு செய்யறதுக்கு பதிலா, யாராவது ஏழைக் குழந்தைக்கு படிப்புக்கு காசு கொடுத்திருந்தா ஒரு நல்ல காரியம் செஞ்ச மாதிரியாவது இருந்திருக்குமில்ல’ன்னு கேட்டதுக்கு, அவன் ‘நாம எல்லாம் பட்டாசு வாங்கிறதாலதான் நிற‌ய ஏழைகளுக்கு வேலை கிடைக்குது. நாம வாங்கிறதை நிறுத்திட்டா அவங்கதான் கஷ்டப்படுவாங்க’ன்னு சொன்னான். இதில எது சரி? :s

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

ஒரு பையன் பெண்ணுக்கு அனுப்பிய SMS :
ஒரே ஒரு நாள் உன்னோடு
வாழும் ரோஜாவைக் காதலிக்கும்
நீ, வாழ்நாள் முழுக்க உன்னோடு
வாழ விரும்பும் என்னை வெறுப்பது ஏன்?

பெண்ணின் பதில் SMS:
ஹே.. சூப்பர் டயலாக் 🙂

Advertisements
வானவில் – 12/11/2010

4 thoughts on “வானவில் – 12/11/2010

 1. அர்த்தமில்லா விவாதங்கள் –
  பிளாக் பற்றி உங்கள் நண்பருக்கு புரியவில்லை என நினைக்கிறேன். இது நம்மை செதுக்கி கொள்ளவும் நம்மை அங்கிகரிக்கவும் கிடைத்த மாபெரும் வழி,. சிலர் பணம் பார்க்க அலைகின்றார்கள் என்பதற்காக நாம் எதுவும் செய்ய முடியாது. இது ஒரு சிறந்த அங்கிகாரம் கிடைக்கும் இடம். எனக்கு புத்தகம் எழுதச் சொல்லி ஒரு அழைப்புக் கூட வந்தது, சில காரணங்களால் அது கைகூடவில்லை,. இருந்தாலும் அதுவே பெரிய அங்கிகாரம் அல்லவா.

  காவிரிப் பிரச்சினை –
  தனக்கு போகத்தான் தானம் தர்மம் என்கின்றார்கள். 😐

  பின்நவீனத்துவம் – http://www.jeyamohan.in/?p=6089
  உங்களுக்கு ஜெயமோகன் உதவுவார் என நினைக்கிறேன்.

  குழப்பம் –
  பட்டாசுகள் தயாரிப்பவர்கள் கொத்தடிமைகள் போலதான் வாழ்கின்றார்கள். இந்த முறை ஏகப்பட்ட கோடிகளுக்கு பட்டாசு வித்திருக்கிறது. அது எத்தனை மக்களை சென்றடைந்திருக்கும் என நம்புகின்றீர்கள் நண்பா,. 😳

  SMS –
  இந்தப் பொண்ணுங்களே இப்படிதான். 🙂

  1. //இது ஒரு சிறந்த அங்கிகாரம் கிடைக்கும் இடம்//
   நிச்சயம் உண்மை. நல்லா எழுதறேன்னு யாராவது சொன்னாலே போதும். காசு பணம் எல்லாம் இந்த பாராட்டுகள் முன் ஒண்ணுமே இல்லை. சில பேர் இதை புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க.

   //பட்டாசுகள் தயாரிப்பவர்கள் கொத்தடிமைகள் போலதான் வாழ்கின்றார்கள்.//
   உண்மைதான். ஏதாவது ஒரு காரணம் சொல்லி தீபாவளியை கொண்டாடிக்கொண்டிருக்கும் சிலர் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

   //உங்களுக்கு ஜெயமோகன் உதவுவார்//
   நன்றி நண்பரே.. படித்துப் பார்க்கிறேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s