பண முதலைகளுக்கு இரையான ஊடகங்கள்

உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் என யாருமே இருக்க முடியாது. நமக்குத் தெரிந்ததாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களே உண்மையானது தானா என அறிவது இயலாத காரியம். நாம் சம்பந்தப் பட்ட விஷயங்களைத் தவிர மற்ற எதையும் நாம் அறிந்ததாக சொல்லிக்கொள்ள முடியாது.

அன்றாடம் நடக்கும் விஷயங்களிலேயே எவ்வளவு நமக்குத் தெரிகிறது? அல்லது நடந்ததாக சொல்லப்படும் விஷயங்கள் நிஜமாகவே நடந்தவையா? தெரியாது. சில விஷயங்கள் தனி மனித/குடும்ப கௌரவத்தைக் காரணமாகக் கொண்டும், சில விஷயங்கள் எதிர்கால விளைவுகளைக் கருத்தில் கொண்டும், சில விஷயங்கள் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து என்ற சுயநலக் காரணங்களாலும் மறைக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன.

இவற்றில் ஒருவனின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்தலும், பகிராததும் அவரவர் விருப்பங்களைப் பொருத்தது. அதனை நாம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அனைவரையும் பாதிக்கும் விஷயங்களிலும், பொதுவான செய்திகளிலும் உண்மைகள் மறைக்கப்படுவதுதான் தவறாகப்படுகிறது எனக்கு.

முக்கியமாக செய்தி ஊடகங்களின் போக்கு. இவர்கள் என்ன செய்தி வெளியிடுகிறார்களோ அதுதான் உலகில் நடந்தது. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறார்களோ அவைதான் உலகிலேயே மிக முக்கியமான விஷயம். நம்மிடம் சிறிது பணமிருந்தால் போதும், எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும், நம்மைப் பற்றித் தவறான செய்திகள் வராமல் செய்துவிடலாம்.

இவற்றை மிக சிறப்பாக உபயோகப்படுத்திக் கொள்வோர் தனியார் நிறுவனங்கள்தான். என்ன நடந்தாலும் இருக்கவே இருக்கு பொதுவான வார்த்தை. ‘தனியார் நிறுவனம்’. தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது, தனியார் பள்ளியில் மாணவன் துன்புருத்தல், தனியார் கல்லூரியில் பிரச்சினை, தனியார் நிறுவனத்தில் ஒருவர் பலி.

ஏன் இவர்களால் இந்த நிறுவனத்தில் தான் பிரச்சினை. இவர்கள் பேருந்துதான் விபத்துக்குள்ளானது என சொல்ல முடியவில்லை? பத்திரிக்கை சுதந்திரம் என்பது நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எழுத மட்டும்தானோ?

தற்போது நோக்கியா தொழிற்சாலையில் நடந்த விபத்து (உண்மையில் கொலை). எதிர்பாராதவிதமாக ரோபோ தாக்கி இறந்ததாக எல்லா செய்தி ஊடகங்களிலும் செய்தி. அண்மையில் எந்திரன் படம் பார்த்த மக்களுக்கு ரோபோ என்றவுடன் படத்தில் வந்த ரோபோதான் ஞாபகத்துக்கு வரும். விபத்துக்கு என்னக் காரணம், யார் மீது தவறு என்ற கோணத்தில் எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டதாகத் தெரியவில்லை. இதுபோன்ற நிறுவனங்கள் தொழிலாளர் பாதுகாப்பில் கொண்டிருக்கும் அக்கறையின்மையை மக்களிடம் புரியவைப்பதற்கு பதிலாக, நிறுவனத்தின் தொழிற்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்ட செய்தியை வெளியிடுகின்றன ஊடகங்கள்.

ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதை ஊர் ஊராக சென்று தியேட்டர் வாசல்களில் கருத்துக்கேட்கும் இவர்கள், இந்த விபத்தைப் பற்றி அங்கே வேலையில் இருந்த ஒரு ஊழியரிடம் கூட விசாரிக்காதது ஏன்?  இவர்களுக்கு இந்நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் முக்கியமாகிறது.

தன்னுடைய இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மெஷினைக் காப்பாற்ற ஒரு உயிர் போனால் பரவாயில்லை என நினைத்த நோக்கியா நிறுவனத்தின் பார்வைக்கும், அவர்கள் விளம்பரம் மூலம் கிடைக்கும் சில இலட்சம் ரூபாய்கள், இந்நிறுவனத்தின் முகத்திரையைக் கிழிப்பதைவிட முக்கியமானது என நினைக்கும் ஊடகங்களின் பார்வைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை.

இந்த விபத்தின் மறைக்கப்பட்ட சில உண்மைகள் வினவு போன்றவர்களின் முயற்சியால் சிறிது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் வெளிவராமல் மறைக்கப்பட்ட உண்மைகள் எவ்வளவோ? பணத்தைத் தவிர்த்து உண்மை செய்தியை வெளியிடும் ஊடகங்களை இனி கனவிலும், திரையிலும் மட்டுமே பார்க்கமுடியும் எனத் தோன்றுகிறது.

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? இவையெல்லாம் எப்போது சரியாகும்? பதில் தேடி பல நாட்கள் அலையவேண்டியிருக்கும். பதில் கிடைக்குமா? உண்மையான மக்களாட்சி- நம் மக்களுக்காக, நம்மவர்களே நடத்தும் ஆட்சி – வரும் வரை, பதில் கிடைப்பது அரிதுதான்.

Advertisements
பண முதலைகளுக்கு இரையான ஊடகங்கள்

4 thoughts on “பண முதலைகளுக்கு இரையான ஊடகங்கள்

  1. kanagu சொல்கிறார்:

    பணம் சூழ் உலகு-னு தான் இப்போ நம்ம உலகத்துக்கு பேர் வைக்கனும் போல இருக்கு… அந்த அளவுக்கு பணம் விளையாடுது…

  2. எல்லா சானலும் அவங்க productஐ பிரபலபடுத்துவதற்க்காகவே தொடங்கபட்டது. நான் ஒரு மெயில் மூலமாகத்தான் இந்த செய்தியை தெரிந்தி கொண்டேன். வருத்தமாகத்தான் இருக்கின்றது.

    1. // நான் ஒரு மெயில் மூலமாகத்தான் இந்த செய்தியை தெரிந்தி கொண்டேன்//
      குறைந்தபட்சம் இணைய உலகிலாவது உண்மையை சொல்ல ஆளுங்க இருக்காங்கன்னு ஆறுதல் அடையவேண்டியதுதான். இல்லைன்னா இது போன்ற உண்மைகள் வெளியவே வராமல் முடக்கப்பட்டிருக்கும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s