பதின்ம வயது

என்னையெல்லாம் ஒரு ப்ளாக்கரா மதிச்சு தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்த குந்தவை அக்காவுக்கு நன்றி. 🙂

ஆனால் பதின்ம வயது நினைவுகள் என எதை எழுதுவது? நான் அந்தப் பருவத்தை விட்டு வெளியே வந்தே 5 வருஷம்தான் ஆகுது. (நாங்க எல்லாம் யூத்துங்கோ 🙂 ). அதனால பதின்ம வயதுப் பருவத்தின் கடைசி காலகட்டங்களில் இருந்த சில பழக்க வழக்கங்கள் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் நினைவுகளுக்கா பஞ்சம்.  பதின்ம வயதின் ஆரம்பக் காலக் கட்டங்களில் விளையாடிய‌ சில விளையாட்டுகளின் நினைவுகள் சில‌.

ஒவ்வொரு சீசனுக்கு ஒரு விளையாட்டுகள் என வச்சிருப்போம். கோடைக்காலத்தில் பெரும்பாலும் விளையாண்டது. பாட்டில் மூடிகளை ஒரு வட்டத்துக்குள் வச்சு ஒரு வட்டமானக் கல்லால் தூரத்தில் இருந்து அடிக்க வேணும். எவ்வளவு மூடி வெளிய வந்து விழுதோ அவ்வளவும் அடிச்சவனுக்கு சொந்தம். இதைக் கோடைக்காலத்தில் விளையாடக் காரணம், அப்போதான் கூல்ட்ரிங்ஸ் அதிகமா விற்பனையாகும். நமக்கும் அதிக பாட்டில் மூடி கிடைக்கும். இந்த விளையாட்டு உச்சத்தில் இருக்கும்போதெல்லாம் எவன் அதிக மூடி வச்சிருக்கிருக்கிறானோ அவன்தான் பெரிய ஆள்.  தலைவர் கெத்தா சுத்திக்கிட்டுருப்பார். எந்த விளையாட்டுலயுமே நான் பெரிய ஆளெல்லாம் கிடையாது. இதிலயும் அதிக மூடி வச்சிருக்கிரவனோட அடிபொடிகள்ல நானும் ஒருத்தன்.

அப்புறம் இந்த பம்பரம். எனக்கு உருப்படியா சாட்டையக் கூட சுத்த தெரியாட்டியும், எப்படியாவது அழுது புரண்டு பம்பரம் வாங்கிடுவேன். விடத்தான் தெரியாது. அதனாலயே பெரும்பாலும் என் பம்பரத்தில விளையாண்டதெல்லாம் என் பெரியப்பா பையன்தான். எப்பாவாவது கஷ்டப்பட்டு சாட்டைய சுத்திப் பழகி, நான்விட்ட பம்பரம் ஒரு நாள் சுத்துச்சு. என்னப் பிரச்சினைன்னா என்னோட இந்த ட்ரெய்னிங் செஸன் எல்லாம் யாரும் இல்லாத இடத்தில்தாங்கிறதால யாருக்கும் தெரியல. நான் பம்பரம் விடக் கத்துக்கிட்டேன்னு சொன்னாலும் ஒருத்தனும் நம்பல. விட்டுக்காமி பார்ப்போம்ன்னு சொன்னாங்க. நாசமாப்போன பம்பரம் அங்க மட்டும் சுத்தல. ஒருவழியா நல்லா பம்பரம் விட தைரியம் வந்தவுடன் இப்ப வாங்கடா பம்பரம் விட்டுக்காமிக்கிறேன்னு போனால் அவனுங்க விளையாட்ட மாத்தி கில்லி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க.

பம்பரம் அளவுக்கு கில்லி எனக்கு பிரச்சினை கொடுக்கலை. கொஞ்சம் சீக்கிரமே கத்துக்கிட்டேன். ஆனாலும் எல்லா விளையாட்டிலயும் நம்மவிட நல்லா விளையாடற சில பேர் இருந்துக்கிட்டேதான் இருந்தாங்க. இங்கயும் நான் சுமாரான ப்ளேயர்தான். கில்லி செய்யறதே ஒரு அருமையான விஷயம்தான். நல்ல ஒரு மரமா பார்த்து சரியான அளவிலான கிளையை உடைத்து தோலெல்லாம் போக செதுக்கி, ஒரு வழியா கில்லி ரெடி ஆகும்போது ஏதோ பெரிசா சாதிச்ச மாதிரி இருக்கும். ஆனாலும் இந்த கில்லி ஒருமாதிரி ஆபத்தான விளையாட்டும் கூட. பலதடவை நடந்து போயிட்டிருக்கிற யார் மேலயாவது பட்டு அவங்ககிட்ட திட்டுவாங்கிறது நடந்து இருக்கு.

லீவு நாட்களில் செய்யற இன்னொரு வேலை. ஆற்றுக்கு செல்வது. அதுவும் முக்கியமா கோடை விடுமுறை நாட்களில், மதியம் உச்சி வெயில் உறைக்கிற வரைக்கும் நல்லா குதிச்சு விளையாண்டுட்டு, ஆத்துல போய் குளிக்கிற சுகம் இருக்கே. நிச்சயமா அதை அனுபவிச்சுப் பாத்தாதான் தெரியும். அங்கேயும் போய் சும்மா குளிச்சுட்டு மட்டும் வர ஆளுங்க இல்ல நாங்க. பல நாட்கள் அங்கயும் போட்டிதான். எங்க ஊரில் பவானி ஆறுதான். ரொம்ப அகலமெல்லாம் கிடையாது. ஆனால் நல்லா வேகமா போயிட்டு இருக்கும். அதுல நீந்தி அக்கரைக்கு போகும்போது தண்ணியோட வேகத்தில் இழுத்துட்டு போய், அக்கரை சேரும்போதுதான், ஆறோட வேகம் புரியும். நாம அந்தப் பக்கம் ஆரம்பிச்ச இடத்துக்கு நேராப் போய் நிக்கணும்னா ஒரு 2,3 நிமிஷம் நடக்கணும்.

இதிலதான் எங்களுக்குப் போட்டியே. யார் ஆத்துனால அதிகதூரம் இழுத்துட்டுப் போகாம அக்கறைக்கு போய் சேர்றாங்க அப்படீன்னுதான் போட்டி. ஒரு சிலர் செம வேகமா நீந்திப்போய் ரொம்ப கொஞ்ச தூர இழுப்பிலயே கரையைக் கடந்திடுவாங்க. சில பேர் எங்கப் போய் சேந்தான்னே தெரியாது. நல்லா உத்துப்பாத்தா தூரத்தில தெரியுவாங்க. சில பேர் பயந்துட்டு திரும்பிப் போயிடுவாங்க. இவனுங்கதான் அன்று பூராவும் கிண்டலடிக்கப்படுகிறவர்கள். அடுத்த நாள் கரையத்தாண்டிர வரைக்கும் இவனுங்களை கிண்டல் அடிச்சுட்டேதான் இருப்போம்.

இன்னும் சில கிறுக்குத்தனமான விளையாடுங்க எல்லாம் இருக்கு. அதுல முக்கியமா இந்த வேப்பங்கொட்டயை கையில அடிச்சு இரத்தம் வரவைக்கிறது. உள்ளங்கையை மூடிக்கிட்டு, கையைத்திருப்பி, அந்த முட்டியில பாதி கொட்டைய வச்சி படார்ன்னு அடிப்பாங்க. அடிச்சவுடனே கையா வேகமா சுத்தணும். துளி இரத்தம் வந்தால் போதும், ‘எனக்கு இரத்தம் வந்துடுச்சி’ன்னு சொல்லி அடுத்த ஆளுக்கு அதப்பண்ணுவோம். நிச்சயமா செமயா வலிக்கும். ஆனாலும் அப்போ அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. விளையாடறதுதான் முக்கியம்.

சில நாட்களில் எங்கள் ஊரிலும் கிரிக்கெட் பிரபலமாக ஆரம்பிச்சுடுச்சு. அவ்வளவா ஆபத்தில்லாத விளையாட்டுங்கிறதால பெற்றோரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. எப்பவும் கிரிக்கெட்தான். அதுவும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அப்புறம் வந்த லீவுல காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சா மதியம் சாப்பிட்டுட்டு, மறுபடியும் விளையாடப்போயிடுவோம். பந்து கண்ணுக்கு தெரியும் வரை விளையாண்டுட்டுதான் வீட்டுக்கு வருவோம். ஆனால் கிரிக்கெட் பேட் எல்லாம் எங்களுக்கு பெரிய விஷயம். அதனால ஏதாவது ஒரு உடைஞ்ச பலகை, இல்லைன்ன நல்ல அகலமான மரக்கிளைய உடைச்சு அரிவாளில செதுக்கித்தான் பேட் தயார் செய்வோம். பல சமயங்களில் சரியா செதுக்காத பேட் நிறய பேரோட கைய கிழிச்சிருக்கு. இருந்தாலும் சரி செஞ்சு விளையாடினோமே தவிற விளையாட்ட நிறுத்தல. சில சமயங்களில் இரப்பர் பந்து உடைந்து போனதும், வேறு பந்து வாங்க காசு இருக்காது. அப்ப மட்டும்தான் விளையாட்டு நிக்கும்.

ஆனால் இப்போதோ எங்க மாமா பசங்க பலரும் வெளிய போவதே இல்லை. எப்பவும் கணினியில்தான் விளையாட்டு.  இப்பொதைய பசங்க வெளியே விளையாடும் ஒரே விளையாட்டு கிரிக்கெட்தான். மத்த அனைத்து விளையாட்டுகளும் காணாமல் போய்விட்டன. கணினியும், தொலைக்காட்சியும் முக்கிய அம்சமாக மாறிய நிலையில், நாங்கள் விளையாடிய பல விளையாட்டுகள் இவ்வளவு சீக்கிறம் (ஒரு பத்து வருட காலத்தில்) வழக்கொழிந்து போனதுதான் வருத்தமான விஷயம்.

சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அடுத்து இதில யாரை மாட்டிவிடுறது..? சரி சௌந்தர், பாலா நீங்க உங்க பதின்ம வயது நினைவுகளை கொஞ்சம் பகிர்ந்துக்கங்களேன்.

Advertisements
பதின்ம வயது

5 thoughts on “பதின்ம வயது

 1. இந்த விளையாட்டெல்லாம் விளையாடி இருக்கீங்களா?

  //பலதடவை நடந்து போயிட்டிருக்கிற யார் மேலயாவது பட்டு அவங்ககிட்ட திட்டுவாங்கிறது நடந்து இருக்கு.//

  எனக்கு கில்லி மறக்கவே மறக்காது.. வேடிக்கை பாத்துகிட்டு நின்ன என் நெற்றியில் ஒரு கொழுக்கட்டையை வச்சிட்டு போயிருச்சி. 😦 . பயங்கர வலி.

  // நாங்கள் விளையாடிய பல விளையாட்டுகள் இவ்வளவு சீக்கிறம் (ஒரு பத்து வருட காலத்தில்) வழக்கொழிந்து போனதுதான் வருத்தமான விஷயம்.//

  😦

  1. // இந்த விளையாட்டெல்லாம் விளையாடி இருக்கீங்களா? //

   கிராமத்தில வளந்ததால எங்க காலம் வரைக்கும் இந்த விளையாட்டெல்லாம் இருந்துச்சு.

   // வேடிக்கை பாத்துகிட்டு நின்ன என் நெற்றியில் ஒரு கொழுக்கட்டையை வச்சிட்டு போயிருச்சி //
   எல்லா ஊரிலயும் இப்படித்தான் போல. :)..

   விளையாடற இடத்தில பொண்ணுங்கனால எப்பவுமே பிரச்சினைதான். போங்கன்னா போகவும் மாட்டாங்க. வேடிக்கை பாக்கிறேன்னு நின்னு அடி பட்டுச்சுன்னா வீட்டுல போய் சொல்லிடுவாங்க.. நீங்களும் அடிச்சவர‌ வீட்டுல போட்டுக்கொடுத்தீங்கதான? 🙂

 2. //விளையாடற இடத்தில பொண்ணுங்கனால எப்பவுமே பிரச்சினைதான்.
  போங்கன்னா போகவும் மாட்டாங்க. வேடிக்கை பாக்கிறேன்னு நின்னு அடி பட்டுச்சுன்னா வீட்டுல போய் சொல்லிடுவாங்க..//

  அடப்பாவி… மனசாட்சியே இல்லையா?

  // நீங்களும் அடிச்சவர‌ வீட்டுல போட்டுக்கொடுத்தீங்கதான?//

  எங்க.. சொல்ல சொல்ல கேட்காம விளையாட போனதும் இல்லாம.. அடிவேற வாங்கிட்டு வந்தா… கூட கொஞ்சம் கிடைக்கும் என்று பயந்து .. வீட்டுல கதவு இடிச்சிடுச்சி என்று பொய் சொல்லி … அதை எல்லாம் எழுதினா உங்க பதிவை விட பெருசாயிடும்.

  1. // அடப்பாவி… மனசாட்சியே இல்லையா? //
   உண்மையத்தான சொல்லறேன்.. 🙂

   //அடிவேற வாங்கிட்டு வந்தா… கூட கொஞ்சம் கிடைக்கும் என்று பயந்து .. வீட்டுல கதவு இடிச்சிடுச்சி என்று பொய் சொல்லி //
   🙂 🙂

 3. kanagu சொல்கிறார்:

  பல விளையாட்டுகள் சுத்தமா அழிஞ்சிடுச்சு-னு தான் சொல்லணும்… அதுவும் கில்லியெல்லாம் நான் எட்டாவது படிக்கும் போது பசங்க விளையாடின மாதிரி ஞாபகம்.. அப்புறம் எல்லாம் காலி… 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s