மொக்கைகள் – வாங்கியவையும் கொடுத்தவையும்

சில நகைச்சுவையான நினைவுகள் எப்போது நினைத்தாலும் நமக்கு சிரிப்பை வரவழைப்பவை. அவற்றில் சில இங்கே.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒருநாள் 2012 படம் பார்த்துட்டு வந்து படுத்திருந்தோம். திடீருன்னு நைட்டு 1 மணிக்கு பக்கத்தில் படுத்திருந்த நண்பன் ‘டேய் இந்தப் பக்கம் வாடா, இந்தப் பக்கம் வா’ன்னு கத்திக்கிட்டு இருந்தான்.

‘என்னடா, எதுக்குடா அந்தப்பக்கம், நான் இங்கயே படுத்துக்கிறேன்’ன்னு தூக்க கலக்கத்திலேயே சொன்னேன்.

அவனோ, ‘டேய் அங்க மலை கீழ விழுது, இந்தப் பக்கம் ஓடிவா’ எனக் கத்தினான்.
அப்பதான் எனக்கு புரிஞ்சிது, 2012 படத்தைப் பார்த்துட்டு அதே மாதிரி கனவு கண்டுக்கிட்டு இருக்கிறான்னு. ஓவரா கத்திக்கிட்டு இருந்தான். எழுப்பவும் மனசில்ல. தலையோட போத்திக்கிட்டு தூங்கிட்டேன்.

அடுத்தநாள் எந்திருச்சு மொத வேலையா ரூமில எல்லார்க்கிட்டயும் சொல்லி அவன அசிங்கப்படுத்திட்டுதான் ஆறுதலடைஞ்சேன். 🙂

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இங்கே கம்பனியில் டிரெய்னிங் சமயம். அதற்கு முன் நடந்த எல்லா தேர்வுகளிலும் முதல் அட்டெம்ப்டிலயேப் பாஸ் ஆயிட்டேன். கடைசி டெஸ்டில் ஃபெயில். முதல் முறையா மறுதேர்வு எழுதப் போனேன்.

முதல் தடவை எழுதும்போது எல்லா டெஸ்டுக்கும் ஒரே லாகின் ஐடி, பாஸ்வேர்ட்தான். அதனால் நான் போய் உக்கார்ந்ததும் எல்லாம் டைப் பண்ணிட்டுப் பார்த்தால் லாகின் ஆகலை. உடனே கண்காணிப்பாளரைக் கூப்பிட்டு சிஸ்டம் வொர்க் ஆகலைன்னு சொன்னேன். பாஸ்வேர்டே கொடுக்காம எப்படி லாகின் ஆகும். நாந்தான் பாஸ்வேர்டு கொடுப்பேன் அதுவரை உக்காருன்னு சொன்னான். அப்போதான் ரீடெஸ்டுக்கு வேற பாஸ்வேர்டுன்னு தெரிஞ்சுது.

இதைக் கவனிச்ச பக்கத்திலிருந்த நண்பன் ‘இதுக்குதான் அப்பப்ப ஃபெயில் ஆகணுங்கிறது, ரீ டெஸ்ட்டுக்கு வேற பாஸ்வேர்டுன்னு கூட தெரியாம டிரெய்னிங் முடிச்சிருப்ப’ என சொல்லி சிரிச்சான்.

அந்த கண்காணிப்பாளரோட இங்கிலிஷ் அவ்வளவா சரியா இருக்காது. பாஸ்வேர்ட் கொடுக்கப்படும்ன்னு சொல்லறதுக்கு ‘பாஸ்வேர்டு கிவென்’ன்னு சொன்னான்.

என்ன கிண்டலடிச்ச நண்பன் எழுந்து ‘லாகின் ஆகலை’ன்னு சொன்னான். அவனோ ‘நான் இன்னும் பாஸ்வேர்டே தரலையே, என்ன ரெண்டு பேரும் என்னைக் கிண்டலடிக்கறீங்களா’ன்னு கேட்டான்.

வேறு வழியில்லாமல் உட்கார்ந்த நண்பன் ‘இவன்தான பாஸ்வேர்ட் கிவென்னு சொன்னான். அதைப்போட்டு வொர்க் ஆகலைன்னு சொன்னால் எதுக்கு இவனுக்கு இவ்வளவு கோபம் வருது’ன்னு கேட்டான்.

நான் ‘இதுக்குத்தான் இவன் இங்கிலீஷை புரிஞ்சிக்கணும்ன்னு சொல்லறது. எத்தனை டைம் ரீ டெஸ்ட் எழுதுன்னாலும் இவன் இங்கிலிஷைப் புரிஞ்சிக்கலைன்னா ஒண்ணும் பண்ண முடியாது’ன்னு சொன்னேன். 🙂

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கல்லூரித் தோழி ஒருத்தியிடம் போனில் பேசிக்கொண்டிருந்த போது, அவள் அருகிலிருந்த ஒரு பெண் வழவழ என பேசிக்கிட்டே இருந்தாள். ‘யார் அந்த பொண்ணு?’ என நான் கேட்டபோது, இவளும் ‘அவக்கிட்டயே தர்றேன் கேடுக்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்திடறேன்னு’ சொல்லிட்டு அந்த பொண்ணுக் கையில போனைக் கொடுத்துட்டு போயிட்டாள்.

சரின்னு சொல்லிட்டு இந்தப் பொண்ணுக்கிட்ட பேசிட்டிருந்தேன். சும்மா  எந்த ஊரு, என்ன பேரு, வீட்டுல அப்பா, அம்மா எல்லாம் என்னப் பண்ணறாங்கன்னு பொதுவாத்தான் பேசிட்டு இருந்தேன். திடீருன்னு அந்தப் பக்கம் என் ஃப்ரெண்ட்டோட‌ குரல். ‘ஏண்டா சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்கன்னா, ஒரு மணி நேரமாடா முன்னப்பின்ன பாக்காத பொண்ணுக்கிட்ட மொக்கப் போடுவ?’ எனக் கேட்டாள்.

அவள் கேட்ட போதுதான் ஒரு மணிநேரம் ஆகியிருந்ததே எனக்கு தெரிஞ்சுது. என்ன பண்ணறது? வழியிறதத் தவிர வேற எதுவும் பண்ணமுடியல  😳

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னையிலிருந்து வந்திருந்த நண்பன் ஒருவன் ‘பெங்களூரில் அது இல்லை, இது இல்லை, சென்னை மாதிரி வராது’ன்னு பேசிக்கிட்டே இருந்தான். இவனுக்கு துணையா சென்னையை சொந்த ஊராக்கொண்ட இன்னொருத்தனும் பேசிக்கிட்டு இருந்தான்.

ரொம்ப பேசறானுங்களேன்னுட்டு அவன்கிட்ட நான் ‘சரி, சென்னையில இருக்கிறது எது இங்க இல்லை?’ன்னு கேட்டேன். ‘பீச் இருக்காடா?’ன்னு கேட்டுட்டு ஏதோ அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டமாதிரி முகத்த வச்சிக்கிட்டான். நான் ‘சரி உனக்கு பீச் காட்டறேன், ஏதோ பீச் என்ன, உனக்கு பெங்களூரில மெரினா பீச் காட்டறேன்’ன்னு சொன்னேன். இதில இருந்த உள்குத்துக்கூட புரியாம அவனும் ஒத்துக்கிட்டான்.

கொஞ்ச நேரம் வேற விஷயங்களைப் பேசிக்கிட்டு இருந்தோம். அவன் ‘சரி எப்போ எனக்கு மெரினா பீச் காட்டப்போறீங்க’ன்னு கேட்டான். நானோ ‘டேய் இப்போதான‌ அதைப் பார்த்துட்டு வந்தோம். மறுபடியும் அங்கயே போகணுமா?’ எனக் கேட்டேன்.

அவனோ அதுவரை சப்போர்ட்டாகப் பேசிக் கொண்டிருந்தவனிடம் கேட்க, எங்களைப் பார்த்த அவனும் தேவையில்லாம திட்டு வாங்க வேண்டாமேன்னு சொல்லி ‘ஆமா, அங்க இருந்துதான் வர்றோம்’ன்னு சொல்லிட்டான். இதை எதிர்பார்க்காத அவன் தோல்வியை ஒத்துக்கிறதத் தவிர வேற வழியில்லை. அதுக்கப்புறம் கிளம்புற வரைக்கும் சென்னையைப் பத்தி பேசவே இல்லை. 🙂

Advertisements
மொக்கைகள் – வாங்கியவையும் கொடுத்தவையும்

9 thoughts on “மொக்கைகள் – வாங்கியவையும் கொடுத்தவையும்

 1. குடிக்க வைக்கிறதுக்கு பதிவு போடுறத பத்தி எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.ஆனால் எல்லோரும் போய்டா அப்புறம் உங்க பதிவையும் என்னோட பதிவையும் யார் படிப்பாங்க …ஹா ஹா ஹா

  ur blog is nalla mokkai.. but innum irundhirundhal nalla irukum….

 2. kanagu சொல்கிறார்:

  /*அதற்கு முன் நடந்த எல்லா தேர்வுகளிலும் முதல் அட்டெம்ப்டிலயேப் பாஸ் ஆயிட்டேன். */

  இது உனக்கு தேவையா.. நாங்க எங்க ஹிஸ்டரி-ல எவ்வள்வு டெஸ்ட், ரீ-டெஸ்ட் பாத்து இருப்போம்.. 😀 😀

  /*அதைக் கேட்கலாம்ன்னு யொசிக்கறப்ப என் ஃப்ரெண்ட் ஃபோனைப் புடுங்கிட்டா..*/

  நீ தேறுரது கஷ்டம்டா அன்பு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s