வானவில் – 28/10/2010

 KSRTC

அரசு போக்குவரத்து நிறுவனங்களிலேயே தனியாருக்கு இணையான வசதிகளுடன், சிறப்பான சேவைகளைக் கொடுத்துவருவது என்றால் அது கர்நாடகாவின் KSRTC  தான். ஆன்லைன் புக்கிங், பலதரப்பட்ட வண்டிகள் என, இதற்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும் பெரிதாக வித்தியாசம் காணமுடியாது. டிக்கெட் கட்டணத்தைத் தவிற. இவ்வளவு சிறப்பான சேவைகளுடன், தனியாரைவிட குறைவான கட்டணம் என்பதால் இங்கே பெங்களூரில், பஸ் பயணம் செய்யும் அனைவரின் முதல் தேர்வு KSRTC தான்.

தமிழ்நாட்டின் SETC இன்னும் ஆன்லைன் முன்பதிவுகளையே ஆரம்பிக்கவில்லை. பஸ் கட்டணத்தைப் பொருத்தவரை இதுதான் இந்தியாவிலேயே மலிவான ஒன்று என்றாலும்,  வசதிகளைப் பொருத்தமட்டில் இதனால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடமுடியவில்லை என்பதே உண்மை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அருந்ததி ராயும், காஷ்மீர் பிரச்சினையும்

அருந்ததி ராய், காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை எனக் கூறியதை வைத்து மிகப் பெரிய அரசியலே நடக்கிறது இங்கு. எந்த டிவியை பார்த்தாலும், அவரைக் கைது செய்ய வேண்டுமா, கூடாதா என்பதுதான் விவாதத்துக்கான விஷயம். அரசின் கொள்கைக்கு எதிராக ஒருவர் பேசிவிட்டால் உடனே அவர்களைக் கைது செய்து விடவேண்டுமா? அப்படி செய்தால், ஜனநாயக அரசுக்கும், சர்வாதிகார அரசுக்கும் என்ன வித்தியாசம்? அடிப்படை உரிமைகள் என்பது எழுத்தளவில் மட்டுமே இருக்கவேண்டுமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரக்த சரித்ரா (த‌மிழில் ரத்த சரித்திரம்)

ரக்த சரித்ரா முதல் பாகம் ஹிந்தி, தெலுங்கில் வெளியாகிவிட்டது. தமிழில் சூர்யாவை ஹீரோவாக சித்தரிக்கும் இரண்டாம் பாகம் மட்டும்தானாம். அது எப்படி முதல் பாகம் பார்க்காமல், இரண்டாம் பாகம் பார்ப்பது?  என்னதான் முதல் பாகத்தின் காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகவோ, இல்லை படம் ஆரம்பிக்கும்போது விவரணமாகவோ (Narration) சொன்னாலும், ஒரு முழுப் படத்தில் உணரவைக்கும் விஷயத்தை சில நிமிடங்களில் உணரவைக்க முடியுமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிருக்கும். உடனே உலகத்தில் அவங்களுக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லைங்கற மாதிரி சொல்லிக்குவாங்க. என‌க்கு எல்லாமே அரைகுறை என்பதால் பெரும்பாலான விஷயங்களில் இவர்களிடம் விவாதத்துக்கு செல்வதில்லை. ஆனால் சில சமயங்களில் நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களையே தவறு எனக்கூறி விவாதம் புரியும்போதுதான் செமக் கோபம் வருது. அதுவும் இவங்க பேசற தோணியே இவன் சொல்லறதெல்லாம் எப்படி ஒத்துக்கிறதுங்கிற மாதிரிதான்.  உலகத்தில் எல்லாம் தெரிஞ்சவனும் எவனும் இல்ல, எதுவும் தெரியாதவனும் எவனும் இல்ல. எல்லோர்க்கிட்டயும் நாம கத்துக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு. இதை புரிஞ்சிக்கிற யாரும் இப்படி பெருமை பேசிட்டு இருக்க மாட்டாங்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

ஒரு காமெடி கவிதை
அருகம்புல் போல் என் காதல்
வளர்ந்து கொண்டிருக்கும்போது
அவள் அப்பன் எருமை மாடு
போல மேய்ந்துவிட்டான். 😀

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Advertisements
வானவில் – 28/10/2010

11 thoughts on “வானவில் – 28/10/2010

 1. Ezhilan சொல்கிறார்:

  \\அரசின் கொள்கைக்கு எதிராக ஒருவர் பேசிவிட்டால் உடனே அவர்களைக் கைது செய்து விடவேண்டுமா? அப்படி செய்தால், ஜனநாயக அரசுக்கும், சர்வாதிகார அரசுக்கும் என்ன வித்தியாசம்? அடிப்படை உரிமைகள் என்பது எழுத்தளவில் மட்டுமே இருக்கவேண்டுமா என்ன? //

  இந்த %&$^% அரசின் கொள்கைக்கு எதிராக பேசவில்லை நண்பரே. நம் நாட்டையே கூறு போட நினைக்கும் வல்லுருகளுக்கு வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறாள்.

  1. சில வார்த்தைகள் வேண்டாம் என்பதால் அதை நீக்கிவிட்டேன்.

   கருத்து சுதந்திரம் என்பது அனைத்து விஷயங்களுக்கும் பொருந்த வேண்டும். அப்படிப் பார்த்தால் காஷ்மீரில் பலரும் தனி நாடு கேட்டு போரிடுகிறார்கள். அனைவரையும் சிறையில் அடைத்துவிடலாமா?

   காஷ்மீர் நம் நாடு, காஷ்மீரிகள் இந்தியர் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள் என்றால், அங்கே பொது வாக்கெடுப்பு நடத்த நம் அரசு தயங்குவது ஏன்?

   வருகைக்கு நன்றி, எழிலன்.

 2. YOGA.S சொல்கிறார்:

  கவிதல ஒரு சந்தேகம்;அவள் அப்பன் எருமை மாடு போல் மேய்ந்து விட்டான்!அப்புடீன்னா என்ன?அடி பின்னீட்டான் அதானே??????(அனுபவம்?)

 3. //சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிருக்கும். உடனே உலகத்தில் அவங்களுக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லைங்கற மாதிரி சொல்லிக்குவாங்க. //

  cool down….பாஸ். கொஞ்ச நாளைக்கு கத்துவாங்க.. அப்புறம் தன்னால சரியாயிடுவாங்க..

 4. kanagu சொல்கிறார்:

  /*அருந்ததி ராய், காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை*/

  அவங்க சொல்றது உண்மைதான்.. நாம தான் வாக்கெடுப்பு நடத்தலையே..

  /*ஒரு முழுப் படத்தில் உணரவைக்கும் விஷயத்தை சில நிமிடங்களில் உணரவைக்க முடியுமா என்ன?*/

  முயற்சி பண்றாங்க.. பாப்போமே முடியுதா-னு 🙂 எல்லாம் சீரியல் ரீ-கேப் மாதிரி தான் 🙂

  1. // அவங்க சொல்றது உண்மைதான்.. நாம தான் வாக்கெடுப்பு நடத்தலையே..//
   பல பேர் இதை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க, அதான் பிரச்சினையே..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s