விளம்பரத் தூதுவரான கடவுள்

சமீபத்தில் இஸ்கான் (Iskcon) சென்றிருந்தபோது தொன்றிய விஷயம் இது. பெங்களூர் இஸ்கான் கோவிலுக்கு செல்வதில் எப்போதும் எனக்கு பெரிதாக ஆர்வம் இருந்ததில்லையென்றாலும், புதிதாக பெங்களூருக்கு வரும் அனைத்து நண்பர்களின் லிஸ்டிலும் இந்த இடம் இருப்பதால், தவிர்க்க முடிந்ததில்லை.

இதற்கு முன் பல தடவை போயிருந்தாலும் இந்த முறைதான் 200 ரூபாய் ஸ்பெஷல் தரிசனத்தில் சென்றிருந்தேன். இந்த 200 ரூபாய் டிக்கெட் இருந்தால்தான் உங்களால் கோவிலை சுற்றி வர முடியும். இல்லையென்றால் சற்று தொலைவிலிருந்து பார்த்துவிட்டு போய்விட வேண்டியதுதான். அதே போல சிறப்பு பிரசாதம், சிறப்பு பூஜை எல்லாமும் இந்த ஸ்பெஷல் டிக்கெட் வாங்கி வருபவர்களுக்கு மட்டுமே.

இங்கு மட்டும் இல்லை. எல்லா பிரபலமான கோவில்களிலும் இதே நிலைதான். கடவுள் கூட காசு இருந்தால்தான் எளிதாக காணக்கிடைக்கிறார் இந்த நாட்டில்.

நான் கோவிலுக்கு செல்வது எப்போதும் சாமி கும்பிடுவதற்கு அல்ல. கோவில்களின் அமைதி நமது மனதுக்கும் அமைதி கொடுக்கும் என்பதால்தான். இந்த அமைதியை பல பிரபலமாகாத கோவில்களிலும், சில சர்ச்களிலும் மட்டுமே அனுபவித்திருக்கிறேன். இங்கேயும் ஏதாவது விசேஷ நாட்களில் போனால் அந்த அமைதி கிடைக்காது.

இஸ்கானுக்கு போய்விட்டு வெளியே வரும்போது கோவிலுக்கு போய்வந்த உணர்வு துளியும் இருந்ததில்லை எனக்கு.  ஏதோ ஷாப்பிங் மாலுக்குள் சென்றுவந்தது போலத்தான் எப்போதும் இருக்கும். கோவிலைவிட்டு வெளியேவரும் வழி முழுக்க கடைகள். சாப்பாட்டு ஐட்டங்கள் பிரசாதம் என்ற பெயரிலும், மற்ற பொருட்கள் கிருஷ்ணன் படத்துடனும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். கிருஷ்ணன் படம்போட்ட டி‍-ஷர்ட் போட்டால் கிருஷ்ணனின் அருள் கிடைத்துவிடுமா? ஏன்யா இப்படி அலும்பு பண்ணறீங்க‌?

என்னைப் பொறுத்தவரை இது ஒரு அற்புதமான வியாபாரத் தந்திரம். நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் விளம்பரத்தில் நடிக்கவைத்து தங்கள் பொருட்களை விற்பவர்களுக்கும், கிருஷ்ணனை நன்றாக தங்கத்தில் அலங்காரப்படுத்திக் காண்பித்துவிட்டு அவன் பெயரால் பொருட்களை விற்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு.

இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது நண்பன் ஒருவன் ‘இவர்கள் இந்த பணம் மூலம் பல பேருக்கு சாப்பாடு போடறாங்க, அதனால் இப்படி வியாபாரம் செய்வது தப்பில்லை’ என சொன்னான். ப‌ல‌ர‌து க‌ருத்தும் இதுதான்.

‘திருடுபவனும், கொள்ளைக்காரனும் கூட தனக்கென்று ஒரு நியாயமானக் காரணம் வைத்திருப்பான். அதனால் அவன் செய்வது சரியென்றாகிவிடுமா?’ என நான் கேட்டால் உடனே என்னை நாத்திகன் என்று சொல்லுகிறார்கள். இங்கே நாத்திகம் எங்க இருந்து வந்துச்சுன்னு தெரியல. தப்ப தப்புன்னு சொன்னால் நாத்திகமா? என்னய்யா இது?

இது இங்கு மட்டும் இல்லை,  இஸ்கானுக்கு கிருஷ்ணன் என்றால்,  திருப்பதியில் வெங்கடாஜலபதி, வாடிகனில் இயேசு,  மெக்காவில் அல்லா. அனைவரும் விளம்பரத் தூதர்களாகவே உபயோகப்படுத்தப் படுகிறார்கள்.

கடவுள் நம்பிக்கையை இவர்கள் வியாபார நோக்கத்திற்க்கு பயன்படுத்துகிறார்கள் என்றால் சில சாமியார்கள் வேறு சில விஷயங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை.

வாட்டிகனிலும், திருப்பதியிலும், இஸ்கானிலும் கோடிகோடியாய் கொட்டும் பலர் அதில் பாதியை தாங்கள் தினமும் பார்க்கும் ஏழைகளுக்கு கொடுத்திருந்தாலே பல பேர் இவர்களை தெய்வமாக வணங்கியிருப்பார்கள்.

எப்போது மனிதன் அன்பும், அமைதியும்தான் கடவுள் என உணர்கிறானோ அப்போதுவரை இதுபோன்றவர்களின் வேலைகள் நிற்கப் போவதில்லை.

Advertisements
விளம்பரத் தூதுவரான கடவுள்

7 thoughts on “விளம்பரத் தூதுவரான கடவுள்

 1. //எப்போது மனிதன் அன்பும், அமைதியும்தான் கடவுள் என உணர்கிறானோ அப்போதுவரை இதுபோன்றவர்களின் வேலைகள் நிற்கப் போவதில்லை.//

  இதை உணர்தாலும் அதனை நடைமுறை படுத்த எவரும் விடமாட்டார்கள். விட்டால் அவர்களுக்கு இடமில்லாமல் போய்விடுமே!

  நிறைய எழுதுங்கள்.

  1. உணர்தல் என்பது நம் மனதில் நிகழவேண்டியது. நாம் கொஞ்சம் யோசித்தால்கூட இந்த நம்பிக்கைகளில் எல்லாம் மறைந்திருக்கும் மூடத்தனம் தெரியும். யோசிக்கவேண்டியது நம்மவர்கள்தான்.

   நன்றி மாணிக்கம். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.

 2. வாட்டிகனிலும், திருப்பதியிலும், இஸ்கானிலும் கோடிகோடியாய் கொட்டும் பலர் அதில் பாதியை தாங்கள் தினமும் பார்க்கும் ஏழைகளுக்கு கொடுத்திருந்தாலே பல பேர் இவர்களை தெய்வமாக வணங்கியிருப்பார்கள்.

  நிதர்சனம்.

 3. //கேட்டால் உடனே என்னை நாத்திகன் என்று சொல்லுகிறார்கள்//
  The problem that results for the ability to think rationally.
  🙂
  Recently, a half baked opinionated person got irritated by the rationality in my comment (in another persons blog) and the comment followed something as
  “விளையாட்டுல ஆடி ஜெயிக்கிறவனை ஒத்துக்கலாம்,
  ஆடி தோக்குறவனையும் ஒத்துக்கலாம்.
  ஆனா, கலந்துக்காம சும்மா உதார் விடுறதுங்கள பார்த்தா தான் எரிச்சலா வருது”
  Poor nerd 🙂

  Anyhow i had the “same blood” and can understand your condition in this.

  1. ஃப்ரீயா விடுங்க சௌந்தர்… கொஞ்ச பேர் இப்படித்தான், தாங்களும் புரிஞ்சிக்க மாட்டாங்க, புரிஞ்சிக்கிட்டவங்க சொல்லறத ஏத்துக்கவும் மாட்டாங்க.. 😐

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s