சிங்கார சென்னை

வார இறுதியில் நண்பனின் அக்கா திருமண நிகழ்ச்சிக்காக சென்னை சென்றிருந்தோம். அதிலிருந்து சில நினைவுத் துளிகள்.

சென்னைக்கு நான் போவது இது இரண்டாவது தடவையோ மூன்றாவது தடவையோதான். வளர்ந்தது, படிச்சது எல்லாம் ஈரோட்டை சுத்தியே என்பதால் சென்னை செல்லும் அவசியம் ஏற்படவில்லை. பெங்களூர் எனக்கு தெரிந்த அளவுக்கு சென்னை தெரியாது.

சனிக்கிழமை போனதும் பைக் எடுத்துட்டு எந்த இலக்கும் இல்லாமல் நானும் நண்பன் ஒருவனும் அண்ணா சாலையில் சுற்ற ஆரம்பித்துவிட்டோம். வழியில் பார்க்க தோன்றும் இடங்களையெல்லாம் அப்படியே போய் பாத்துட்டு இருந்தோம். அதில் சில மனதை நெருடிய விஷயங்களை பகிர இந்தப் பதிவு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அண்ணா சமாதியும், சில அறிவில்லா ஜீவன்க‌ளும்

புதிய தலைமை செயலகத்தை பார்க்கப் போன வழியில் அண்ணா சமாதி தென்பட்டதால் எதற்கும் போய் பார்ப்போம் என அங்கே போனோம். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கொடுமையான விஷயம் என்னன்னா, அங்க கூட சில காதல் ஜோடிகள் உட்கார்ந்துக்கிட்டு சில்மிஷங்கள் செஞ்சுக்கிட்டு இருந்ததுதான். ‘ஒருத்தரோட சமாதில எப்படிய்யா உங்களுக்கு ரொமான்ஸ் மூடு வருது?!!’. சமாதில எழுதியிருக்கும் ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகின்றது’ வரிகளைப் படிச்சிட்டு ‘இதையும் அவர் தாங்கிக்குவார்’ன்னு நெனைச்சுட்டாங்களோ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எக்ஸ்பிரஸ் அவென்யூ

பெங்களூரின் ஷாப்பிங் மால் கலாச்சாரம் தற்போது சென்னையையும் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த மால் ஒரு உதாரணம். உள்ளே எஸ்கேப் மல்டிப்லெக்ஸின் சூழலும், அமைப்பும் என்னைக் கவர்ந்தன. வழக்கம் போல எல்லா ப்ராண்ட் கடைகளுடன் சென்னையின் பார்க்கவெண்டிய இடங்களில் ஒன்றாக சொல்லும் அளவுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. 1 மணி நேர பார்க்கிங்குக்கு 20 ரூபாய். அதற்கு பிறகு ஒவ்வொரு மணிக்கும் 10 ரூபாய் என்பது ரொம்பவே அதிகமாத் தெரிஞ்சது எனக்கு. இங்கே பார்க்கிங்குக்கே இவ்வளவு பணத்தை எதுவும் கேட்காமல் கொடுத்துவிட்டு, ஷாப்பிங் செய்யும் இவர்களில் எத்தனை பேர் தெருவோர காய்கறி கடைகாரர்களிடம் பேரம் பேசாமல் பொருட்களை வாங்குகிறார்கள்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பெசன்ட் நகர் பீச்

தமிழ் சினிமாவோட முக்கியமான லொக்கேஷன் ஆன பெசென்ட் நகர் பீச்சுக்கு சில நண்பர்களைப் பார்க்க போயிருந்தோம். 4, 5 மணி வாக்கில் பெரிசா கூட்டம் இல்லை. அதனால் ஒரளவு நல்லா கடலை ரசிக்க முடிந்தது. அதுக்கப்புறம் செமக் கூட்டம். இங்கயும் சில பேரோட தொல்லை தாங்கலை. சுத்தி எவ்வளவு பேர் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காமல் உதடோடு உதடு பொருத்தி முத்தமிடுவது என்னைப் பொருத்தவரை மிகவும் அநாகரீகமான விஷயம். அதுவும் அங்கே நிறைய குழந்தைகள் விளையாண்டு கொண்டிருந்தனர். இதுபோன்ற விஷயங்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு இது தவறில்லை போல எனத்தான் தோன்றும். இது போன்ற ஆட்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கின்றனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுண்டலும் பிச்சைக்காரனும்

கடற்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சிறுவன் தொல்லை பண்ணி சுண்டல் வாங்க வச்சிட்டான். ‘படிக்கிறயாடா? என்ன படிக்கிற?’ எனக் கேட்டபோது 6வது படிப்பதாக சொன்னதால் சரி என்று அந்த சுண்டலை வாங்கினோம், யாருக்கும் சாப்பிடத் தோணாததால் அதை தூக்கிப்போட்டு விடலாம் என நாங்கள் சொல்ல நண்பன் தூக்கிப் போடுவதுக்கு பதில் ஏதாவது பிச்சைக்காரருக்கு கொடுத்திடலாம்ன்னு சொல்லி அடுத்து வந்த ஒரு வயதான பிச்சைக்காரனிடம் கொடுக்க, அவரோ தொடர்ந்து காசு கேட்டுக்கிட்டே இருந்தார். யாரும் காசு கொடுக்காததால் நண்பன் கொடுத்த சுண்டலை அவனிடமே தூக்கி எரிந்துவிட்டு போய்ட்டார் அந்த ஆள்.  ‘இவங்க உண்மையிலேயே சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கிறாங்களா? இல்ல சம்பாத்யத்துக்கு பிச்சை எடுக்கிறாங்களா?’

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜிம்னாஸ்டிக்ஸும் தெருவோர வித்தைகளும்

அங்கே வித்தைக் காட்டி பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்த நண்பன் ஒருவன் ‘இவங்களையெல்லாம் சரியா ட்ரெய்ன் பண்ணுனா, ஜிம்னாஸ்டிக்ஸ்ல பெரிய ஆளுங்களா வருவாங்க’ என சொன்னான். அவன் சொன்னது மிகச்சரியாகப் பட்டது, ஆனால் யார் செய்வது? இன்னொரு நண்பனோ, ‘அதுக்கு முதல்ல இவங்க பெற்றோர்களே ஒத்துக்க மாட்டாங்க!! அவங்களை பொருத்தவரைக்கும் இன்னிக்கு கிடைக்கற வருமானம்தான் முக்கியம். எப்பவோ கிடைக்கப்போற மெடல் இல்ல’ன்னு சொன்னான். இதுவும் உண்மையாகத்தான் பட்டது எனக்கு. இவங்க நிலைமையெல்லாம் எப்பதான் மாறும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Advertisements
சிங்கார சென்னை

11 thoughts on “சிங்கார சென்னை

 1. எழுதவொண்ணா சில விஷயங்கள் இருந்தும் நாசுக்காக சொல்லிய விதம் அருமை. இன்னும் சில விஷயங்கள் அரங்கேறவில்லை, அரங்கேற அளவிலும் இல்லை. திருந்துங்கடா .. அவ்ளோ தான் சொல்ல வந்துச்சு அங்க நடந்த நெறைய விஷயங்களை பார்த்த பொது.

  1. வருகைக்கு நன்றி நண்பரே..

   சென்னையைப் பத்தி தப்பா சொல்லணும் என்பது என் எண்ணமல்ல.. எப்பவாவது சென்னை வருபவர்களின் பார்வையில் சென்னையின் அழகை விட அவலங்களே அதிகம் தெரிகின்றன என சொல்ல நினைத்தேன் அவ்வளவுதான்..

 2. அன்பு, நல்லா வந்துகிட்டிருக்கீங்க.
  தமிழ் வேர்ட்பிரஸ்ல ஜவஹர் சார் தான் பதிவுத்திலகம். 🙂
  அவர் இப்ப அவ்வளவா பிளாக்ரதில்ல. 😦
  முடிஞ்சா அவர் கிட்ட தொடர்பு வச்சிகோங்க, நல்லா பட்ட தீட்டுவாரு.
  (just a thought)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s