கால்பந்து ரசிகன் படும் பாடு

இந்தியாவில் கால்பந்து ரசிகர்களாக இருப்பவர்களின் கஷ்டங்கள் சில இங்கே.

1. முதல் பிரச்சினை கேபிள் ஆபரேட்டர்கள். ஒரு பக்கம் வருடத்தின் முக்கியமான கால்பந்து போட்டி நடந்துட்டு இருக்கும், இன்னொரு பக்கம் பங்களாதேஷ், ஜிம்பாப்வே ஒரு நாள் போட்டி நடந்திட்டு இருக்கும். இவங்க கிரிக்கெட் போட்டி நடக்கிற சேனலைத்தான் மெயின் பேண்டில் போடுவாங்க. நாம பால் எங்க இருக்குன்னே தெரியாம கடைசி பேண்டில் வரும் சேனலில் பார்க்க வேண்டியதுதான். இரண்டு கிரிக்கெட் மேட்ச் இருந்தால் அவ்வளவுதான். ஃபுட்பால் ஒளிபரப்பாகிற சேனல் வரவே வராது. 😳

2. மொக்கை கிரிக்கெட் மேட்ச்சுன்னாலும் ஒண்ணும் சொல்லாம பார்க்கிற அறை நண்பர்களுக்கு ஃபுட்பால் மேட்ச் நடக்கிறப்பதான் அவனுங்க பாக்க வேன்டிய எல்ல நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும். ‘ஃபுட்பால்தான!! ஒரு கோலோ ரெண்டு கோலோ போடப் போறாங்க. விளம்பரம் போடும்போது வச்சு ஸ்கோர் பாத்துக்கோ’ இதுதான் அவனுங்க எப்பவும் சொல்லற பதில். 😯

3. கிரிக்கெட் மேட்ச் ஒரளவு இன்ட்ரெஸ்டா முடிஞ்சுட்டா போச்சு. அந்த ஒரு வாரத்துக்கு அதைப் பத்தித்தான் பேச்சு. யாரைப் பார்த்தாலும் அதைப் பற்றியே பேசிட்டு இருப்பாங்க. ஆனால் ஃபுட்பாலில் இருக்கிற பத்து பேரும் பத்து வேறுவேறு அணிகளை சப்போர்ட் பண்ணறவங்களா இருப்பாங்க. அதனால என்னதான் கடைசி வினாடி வரைக்கும் பரபரப்பா போட்டி முடிஞ்சிருந்தாலும் அதைப் பத்தி பேச ஒருத்தன் இருக்க மாட்டான். 😳

4. நம்ம சப்போர்ட் பண்ணற அணி கோல் போடும்போது மகிழ்ச்சியை பகிர்ந்துக்க எவனும் இருக்க மாட்டானுங்க. நம்மளே ‘யெஸ்! யெஸ்!’ ‍ன்னு தனியா கத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான். 😯

5. நிறைய முக்கியமானப் போட்டிகள் இரவு 12, 1 மணிக்குத்தான் ஆரம்பிக்கும். நாம மட்டும் கொட்ட கொட்ட முழிச்சிருந்து பார்த்துக்கிட்டு இருக்கணும். இந்த போட்டிகளில் கோல் அடிச்சா கத்திக் கூட சந்தோஷப்பட முடியாது. சத்தமில்லாம காத்தில குத்தி சந்தோஷப்பட வேண்டியதுதான். 😐

6. மொக்க மொக்க கிரிக்கெட் மேட்சை எல்லாம் 10 தடவை 15 தடவை மறு ஒளிபரப்பு செய்யும் டிவிக்கள், ரொம்ப விறுவிறுப்பான ஃபுட்பால் போட்டிகளைக் கூட மறு ஒளிபரப்பு செய்வதில்லை. ஒருநாள் ஏதாவது காரணத்துக்காக போட்டிகளைத் தவற‌விட்டால் அவ்வளவுதான். போட்டி முடிவை ம‌ட்டும் நெட்டில் பார்த்துதான் தெரிஞ்சிக்கணும். 😐

7. ஒவ்வொரு உலகக்கோப்பைப் போட்டியின் போதும் அடுத்த தடவை இந்தியா தகுதி பெறும்ன்னு மனதைத் தேத்திக்கிட்டு பிரேசிலையும், ஜெர்மனியையும் சப்பொர்ட் பண்ணனும். இதில வீட்டிலயும், நண்பர்கள்கிட்டயும் திட்டு வேற. ‘ஏதோ ஒரு நாடு ஜெயிக்கறத ஏண்டா கண்ணு முழிச்சி பாத்துக்கிட்டிருக்கறேன்னு’.

இந்த விஷயத்தில் டிவிக்காரங்களையோ, நண்பர்களையோ குற்றம் சொல்ல முடியாதுன்னாலும், நாங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படறோம்ன்னு தெரிஞ்சுக்குங்கன்னு சொல்லத்தான் இந்தப் பதிவு. 🙂

ஏரியா கேபிளில் புதுசா ஆரம்பிச்சிருக்கிற ஃபுட்பால் ஸ்பெஷல் டென் ஆக்சன்+ சேனல் இன்னும் வரல. 😦 😦


Advertisements
கால்பந்து ரசிகன் படும் பாடு

7 thoughts on “கால்பந்து ரசிகன் படும் பாடு

    1. கண்டிப்பா சௌந்தர்…. 1983 ல் நாம் உலகக் கோப்பையை ஜெயித்த போது, அதுவரை சிற‌ப்பாக இருந்த ‌ஹாக்கி அணி சற்றே வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்த காலம். இதனால் மக்களிடம் கிரிக்கெட்டை கொண்டு செல்வது எளிதாக இருந்தது.

      நிச்சயமாக, இந்திய கால்பந்து அணி இதுபோல் எதுவும் சாதிக்காத வரை இந்தியாவில் கால்பந்து பிரபலாவது கஷ்டம்தான்.

    1. அப்படியெல்லாம் கிடையாது கனகு. ரொம்பவே விறுவிறுப்பான போட்டிகள் நிறைய இருக்கு. எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காத மாதிரி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s