வானவில் – 21/10/2010

எந்திரன்

இந்தப் படத்தைப் பத்தி நல்லதாகவோ கெட்டதாகவோ ஏதாவது ஒரு செய்தி வந்துக்கிட்டேதான் இருக்கு. ஒரு பக்கம் படம் 300 கோடிக்கு மேல வசூல் பண்ணி பல சாதனைகளை முறியடிச்சிருக்குன்னு ஒரு செய்தி. இன்னொரு பக்கம் வேறு எந்தப் படத்தையும் ரிலீஸ் செய்யக் கூடாதுன்னு தியேட்டர் முதலாளிகள் மிரட்டப்படறாங்கன்னு ஒரு செய்தி. படம் இவ்வளவு வசூல் பண்ணினால் எதுக்காக தியேட்டரை விட்டுத் தூக்கப் போறாங்க?  எந்த பெரிய படமும் வந்த மாதிரியும் தெரியல‌. ஒண்ணுமே புரியல.. 🙄

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அஜித்‍-கலைஞர்-அம்மா

மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு கூடின கூட்டம் உண்மையிலேயே யாரும் எதிர்பார்க்காததுதான். அங்க பேசின ஜெயலலிதா இரண்டு நடிகர்களை திமுக மிரட்டினதாகவும் அவங்க இந்த அம்மாக்கிட்ட வந்து புகார் சொன்னதாகவும் சொல்லியிருக்காங்க. அதில் ஒருத்தர் அஜித்‍ என எல்லோருக்கும் தெரியும்படியே இந்த அம்மா பேசினாங்க. பாவம் அஜித் இன்னொரு முறை கலைஞர் வீட்டுக்குப் போய் மன்னிப்பு கேக்கணும். இன்னொரு நடிகர் விஜய்ன்னு சொல்லறாங்க. உண்மையான்னு தெரியல. விஜயை காசு வாங்காம நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினாங்களா? எந்த படத்துக்கா இருக்கும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை 2-0 ன்னு இந்தியா ஜெயிக்கும்ன்னு பெங்களூர் போட்டியோட நாலாவது நாள் சொல்லியிருந்தாக் கூட நான் உட்பட பல பேர் நம்பியிருக்க மாட்டோம். இந்தியா ஆஸ்திரேலியா போட்டிகள்ல‌ எப்பவுமே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்த முறை மொகாலில நடந்த போட்டி நிச்சயமா சமீப காலங்களில் நடந்த போட்டிகளிலேயே சிறந்த ஒன்று. அதுவும் இந்தியா ஜெயிச்சதால சம்திங் ஸ்பெஷ‌ல். ஒருநாள் தொடரும் அருமையாக ஆரம்பிச்சிருக்கு. முதல் போட்டி ஜெயிச்சாச்சு. இதையும் 2-0 என ஜெயித்தால் சூப்பரா இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

டென் ஆக்சன்+

நம் நாட்டில் கிரிக்கெட் ரசிகர்களை ஒப்பிடும் போது கால்பந்து ரசிகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆனாலும் போன உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முந்தைய போட்டிகளைவிட அதிக மக்கள் பார்த்தனர் என டிஆர்பி ரேட்டிங்க் சொன்னது.  இதன் காரணமாகவே கால்பந்துக்குனே புதுசா டென் ஆக்சன்+ அப்படின்னு ஒரு புது சேனலை ஆரம்பித்திருக்கிறது டென் ஸ்போர்ட்ஸ். இது பழைய ஜீ ஸ்போர்ட்ஸ்‍-இன் புது பெயர்தான் என சொன்னாலும் முழுக்க முழுக்க கால்பந்துக்கு என ஒரு சேனல் இந்தியாவில் இருப்பது பலருக்கு ஆச்சர்யமானதுதான். ஆனால் இதன் விளம்பரத்தில் எந்த எந்த நாட்டோட லீக் போட்டிகள் எல்லாம் போடறதா காமிக்கிறாங்க, இந்தியாவின் ஐ‍-லீக் மட்டும் மிஸ்ஸிங். ஐ-லீக் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையும் இவங்கக்கிட்டதான் இருக்கு. இவங்க பார்த்து சரியான முறையில் விளம்பரப் படுத்துனா ஐ-லீக்கும் பிரபலம் ஆகும். நம்ம வீரர்களுக்கும் நல்லது நடக்கும். செய்வாங்களா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வானவில்

நானும் இந்த மாதிரி கதம்ப பதிவுக்கான பேரு தேடித்தேடி அலுத்துப்போய் ஒருவழியா வானவில்லுன்னு பேரு வச்சிட்டேன். என்ன பண்ணறது எந்த பேரை யோசிச்சாலும் யாரோ ஒருத்தர் முன்னமே வச்சிருக்காங்க. கடைசியா வந்தால் இதுதான் பிரச்சினை. எதிர்கால சந்ததியனரை மனசில வச்சு சில பெயருங்களை விட்டு வைங்கப்பா. எங்களை மாதிரி புது பசங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறோம் பார்த்தீங்களா!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Advertisements
வானவில் – 21/10/2010

3 thoughts on “வானவில் – 21/10/2010

 1. kanagu சொல்கிறார்:

  எந்திரன் நல்லாவே கல்லா கட்டிட்டு தான் இருக்கு… தீபாவளி வரைக்கும் அது அப்படி தான்… அதுக்கு அப்புறம் கூட பெரிய படங்கள் இல்ல.. பார்ப்போம்..

  /*பாவம் அஜித் இன்னொரு முறை கலைஞர் வீட்டுக்குப் போய் மன்னிப்பு கேக்கணும்.*/

  🙂 🙂

  இந்த டெஸ்ட் தொடர் உண்மையிலேயே நல்லா இருந்துது.. 🙂 இன்னும் ரெண்டு டெஸ்ட் இருந்துருந்தா நல்லா இருந்துருக்கும். 😦

  எனக்கென்னமோ டென் ஆக்‌ஷன் சேனல் ஹிட் ஆகுறது கஷடம்-னு தோணுது.. பாப்போம்..

  எப்டியோ ஒரு பேர புடிச்சிட்ட… அப்பப்ப இதுல எழுது அன்பு.. இல்லன்னா உனக்கு இந்த பேரு தேவையில்லை-னு யாராவது எடுத்துக்க போறாங்க 8)

 2. //நானும் இந்த மாதிரி கதம்ப பதிவுக்கான பேரு தேடித்தேடி அலுத்துப்போய் ஒருவழியா வானவில்லுன்னு பேரு வச்சிட்டேன்

  Same blood.

  // அப்பப்ப இதுல எழுது அன்பு.. இல்லன்னா உனக்கு இந்த பேரு தேவையில்லை-னு யாராவது எடுத்துக்க போறாங்க

  இப்படி வேற இருக்குதா? நல்லவேளை சொன்னீங்க. நானும் அப்ப பாயாசத்தை கெட்டியா பிடிக்கணும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s