நாங்கள் சமையல் செய்த கதை

சமையல்ங்கறது உண்மையிலேயே ஒரு கலைதான். ஒரு சின்ன விஷயம் தவறாகப் போனால் கூட ஒட்டுமொத்த உழைப்பும் வீணாப் போகும். இந்த விஷயத்தை வீட்டில் இருக்கும்வரை புரிந்து கொண்டதில்லை. கொஞ்சமா உப்பு பத்தலைன்னா கூட ‘என்னம்மா பண்ணிருக்க? ஒண்ணுமே நல்லா இல்லை’ன்னு திட்டிட்டு அதுக்கப்புறமாதான் உப்பு போட்டு சாப்பிடுவேன்.

அப்பெல்லாம் அம்மா ‘நாளைக்கு பொண்டாட்டி வந்து ஆக்கிப் போடறப்ப உப்பு ஒறப்பே இல்லைன்னாலும் ஒண்ணும் சொல்லாம சாப்பிடுவல்ல, அப்ப தெரியும்டா என் சமையலோட அருமையைப் பத்தி’ன்னு சொல்லுவாங்க.

ஆனால் அவ்வளவு நாள் வெயிட் பண்ண தேவை இருக்கவில்லை. காலேஜ் முடிச்சு பெங்களூரில் வேலைக்கு சேர்ந்து வெளியில் சாப்பிட ஆரம்பிச்சவே அம்மா சமையலோட அருமை புரிஞ்சுது. காலேஜ் முடிக்கற வரைக்கும் வீட்டிலேயே இருந்ததால, சமையல் விஷயத்தில் எனக்கு தெரிஞ்சதெல்லாம் சுடுதண்ணி வைக்கிறது மட்டும்தான்.

பெங்களூரில் ரூம் எடுத்து நண்பர்களுடன் தங்க ஆரம்பித்த சில நாட்களில் நண்பன் ஒருவன் ஒரு அற்புதமான யோசனை சொன்னான். அதாவது நாமே சமைச்சு சாப்பிட்டா என்னங்கறதுதான் அவனது யோசனை. உடனே எல்லோரும் ஹோட்டலில் சாப்பிடறதுல இருக்கற கெட்ட விஷயங்களை எல்லாம் பேச ஆரம்பிச்சோம். நாங்க பேசுன விஷயத்தை எல்லாம் கேட்டால் இனி யாரும் ஹோட்டல் பக்கமே போக மாட்டாங்க.

அடுத்த சனிக்கிழமை சமையலை ஆரம்பிக்கிறதுன்னு நாள் குறிச்சாச்சு. உடனே அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பிச்சோம். கேஸ் ஸ்டவ், சமையல் செய்யப் பாத்திரங்கள் என எல்லாம் ஒருவழியா வாங்கி வந்தாச்சு. சனிக்கிழமை அன்னிக்கு எல்லாம் ரெடி.

அடுத்து என்ன சமையல் செய்யலாம். நண்பனின் அம்மாவிடம் கேட்ட போது உப்புமாதான் இருக்கறதிலேயே எளிதாக செய்யக் கூடிய ஐட்டம்ன்னு சொன்னதால உப்புமா செய்யறதுன்னு முடிவாச்சு. ‘இப்போதைக்கு உப்புமால ஆரம்பிப்போம், அதுக்கப்புறம் அப்படியே சாப்பாடு, பிரியாணின்னு போகலாம்’ன்னு நண்பன் ஒருவன் சொன்னான்.

உடனே அவன் அம்மாவிடம் உப்புமா செய்யும் வழிமுறைகள் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு ‘இவ்வளவு ஈசியான விஷயமா இது? இதுக்கு போய் இவ்வளவு ப்ளான் போட்டமே’ என நொந்து கொண்டு உப்புமா செய்ய தேவையான அனைத்தையும் வாங்கி வந்தோம்.

ஒருவழியா சமையலை ஆரம்பிச்சோம். ஆளுக்கு ஒரு வேலைன்னு பிரிச்சிக்கிட்டோம். என்னன்ன போடணும்ன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்குன்னு சொன்னதால என்னை தேவையான பொருட்களை சரியான சமயத்தில் எடுத்துக் கொடுக்கிற வேலையில போட்டுட்டாங்க.

எனக்கும் அதுதான் எளிதா இருந்துச்சு. அடுத்து அடுத்துன்னு ஸ்டவ் பக்கத்தில் இருப்பவன் கேக்கக் கேக்க எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். ஒரு கால் மணி நேரத்தில சமையல் முடிஞ்சுது. எல்லாருக்கும் ஒரே சந்தோசம். ‘மச்சி வாசனையே தூக்குதுடா. என்னிக்காவது அந்த மெஸ் சமையல்ல இந்த மாதிரி வாசனை வந்திருக்காடா?’ எனக் கேட்டபடி எல்லோரும் தட்டு நெறையா போட்டுட்டு வந்தோம்.

‘பாக்கறதுக்கு உப்புமா மாதிரிதான் இருக்கு, சாப்பிட்டா உப்புமா மாதிரியே இல்லையே’ன்னு எனக்கு பயங்கர‌ குழப்பம். ஆனால் கூட இருக்கிறவன் எல்லாம் ஆஹா ஒஹோன்னு சொல்லிட்டு சாப்பிட்டுட்டு இருந்தானுங்க. என்னடா இது நமக்கு மட்டும்தான் இப்படி தோணுது போல நல்லா இல்லைன்னு சொன்னால் நம்ம லூசுன்னு சொல்லிடுவாங்கன்னு முடிவு பண்ணி  நானும் அவனுங்கக் கூட்டத்தில சேர்ந்துட்டேன்.

வாழ்க்கையிலேயே அவ்வளவு கஷ்டப்பட்டு எப்பவும் சாப்ப்ட்டதில்ல. சாப்பிடவே முடியாத ஒரு விஷயத்தை சூப்பரா இருக்குன்னு புகழ்ந்து கொண்டே சாப்பிடறது எவ்வளவு கஷ்டம்ன்னு அதை அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும்.

ஒருவழியா சாப்பிட்டு முடிச்சு எல்லாத்தையும் எடுத்து வைக்கும் போதுதான் தெரிஞ்சது உப்புமால மிளகாய்ன்னு ஒண்ணைப் போடவே இல்லன்னு. :(. இதில என்னப் பிரச்சனைன்னா எல்லாத்தையும் எடுத்துக் கொடுக்கிற பொறுப்பில் இருந்தது நான். அதனால எல்லோருடைய கொபமும் என் மேலதான் திரும்பிச்சு. :(.

அப்புறம் ஏண்டா சப்பாடு சூப்பரா இருக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டப்பதான் எல்லோருமே என்னை மாதிரியே நல்லா இருக்கிற மாதிரி நடிச்சுட்டுதான் சாப்பிட்டுருக்காங்கன்னு தெரிஞ்சது. அதோட சமையல் செய்யற வேலையே வேணாம்ன்னு முடிவு செஞ்சுட்டோம்.

அடுத்த நாள் எப்பவும் சாப்பிடற மெஸ்ல சாப்பிட உட்கார்ந்தப்ப முன்னாடி நாள் இந்த மெஸ்ல செய்யற சமையலப் பத்தி பேசுனதெல்லாம் தேவையில்லாம ஞாபகம் வந்துப் படுத்தியது.

Advertisements
நாங்கள் சமையல் செய்த கதை

5 thoughts on “நாங்கள் சமையல் செய்த கதை

  1. //‘பாக்கறதுக்கு உப்புமா மாதிரிதான் இருக்கு, சாப்பிட்டா உப்புமா மாதிரியே இல்லையே’ன்னு எனக்கு பயங்கர‌ குழப்பம். ஆனால் கோட இருக்கிறவன் எல்லாம் ஆஹா ஒஹோன்னு சொல்லிட்டு சாப்பிட்டுட்டு இருந்தானுங்க//

    ha…ha… அதுக்காக முயற்ச்சியை கைவிடுறது நல்லாயில்ல தம்பி. இல்லாட்டி பிற்காலத்தில் இன்னொருத்தர் உங்களை எலி மாதிரி யூஸ் பண்ணிடுவாங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s