காமன்வெல்த் போட்டிகள் ‍‍- வெற்றியா? தோல்வியா?

70000 கோடி ரூபாயையும், உலக அரஙகில் இந்தியாவின் மானத்தையும் வாங்கிவிட்டு காமன்வெல்த் போட்டிகள் ஒருவழியாக நேற்று முடிவடைந்தன. இந்நிலையில் தற்போது காமன்வெல்த் போட்டிகள் மிகப் பெரிய வெற்றி அடைந்துவிட்டதாகக் கூறிக்கொண்டு அதற்கு நான்தான் காரணம் என டெல்லியில் அரசியல் தலைவர்களும், போட்டி அமைப்பாளர்களும் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சந்தேகம், எந்த அளவுகோலை வைத்து இவர்கள் இந்தப் போட்டிகள் மிகப்பெரிய வெற்றி என கூத்தாடுகிறார்கள் என்பதுதான். இவர்கள் அளவுகோலின்படி போட்டி நடக்கும்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றாலே அது மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரு நிகழ்வா?

முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் பதக்கங்களை வாங்கி இருப்பதையும் சொல்ல முடியும் எனத் தோன்றவில்லை. பதக்கங்கள் அதிகமானது, நமது வீரர்களின் திறமை அதிகரித்திருப்பதைதான் குறிக்கிறது. இதை எப்படி ஷீலா தீட்சித்தும், சுரேஷ் கல்மாடியும் தங்கள் வெற்றி எனக் கொக்கரிக்கிறார்கள்?

சொந்த நாட்டில் நடந்ததுதான் காரணம் எனக் கூறினால் அதை நிச்சயம் ஒத்துக்கொள்ள முடியாது. வழக்கமாக போட்டி நடப்பதுக்கு பல மாதங்கள் முன்பே மைதானங்கள் தயாராகிவிடும். சொந்த நாட்டு வீரர்கள் அங்கே தொடர்ந்து பயிற்சி எடுப்பதால் அவர்களுக்கு சற்றே சாதகமான நிலை உண்டாகும். ஆனால் இங்கோ போட்டி நடப்பதற்கு 2,3 நாட்கள் முன்புதான் மைதானங்கள் தயாராகின. எனவே இந்திய வீரர்கள் இந்தப் போட்டிகள் எங்கு நடந்திருந்தாலும்  இதே அளவு பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றிருப்பார்கள்.

இப்போது போட்டிகள் வெற்றி வெற்றி எனக் கத்திக் கொண்டிருப்பது தங்கள் ஊழல்களை மறைப்பதற்காகவே. இது அனைவருக்கும் தெரிந்தாலும் இவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்யமுடியாது. இன்னும் மூன்று வருடம் கழித்து தேர்தல் வரும்போது போட்டிகளையே நம்மில் பலர் மறந்திருப்பர். இதில் அந்த ஊழல்களையா ஞாபகம் வைத்துக்கொள்ளப் போகிறோம்?

இதுபோன்ற போட்டிகளை பல கோடி ரூபாய் செலவு செய்து ஒவ்வொரு நாடும் நடத்துவதே தங்கள் நாட்டின் வளங்களையும், வனப்புகளையும் மற்ற உலகுக்கு எடுத்துக் காண்பிப்பதற்காகத்தான். இதை சீன அரசு சிறப்பாக செய்து காட்டியது. சீனாவுக்கு அனைத்து விதத்திலும் போட்டியாளர்கள் என பெருமை பேசும் நாம் இந்தப் போட்டிகள் ஆரம்பிக்கும் முன் மற்ற நாடுகளிடம் தலை குனிய வேண்டியிருந்தது. நம் நாட்டில் நடந்த போட்டிகளால் யாருக்கு இலாபம். அதை நடத்தும் பொறுப்பிலிருந்தவர்களைத் தவிற.

போட்டிகளின் நோக்கமே நிறைவேறாத நிலையில் என்னைப் பொருத்தவரையில் இந்தப் போட்டிகள் மிகப்பெரிய தோல்விதான். அரசியல் கட்சிகளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் போட்டி வெற்றி வெற்றி என முழங்கிக்கொன்டிருந்தாலும் உண்மை உறைக்கத்தான் செய்கிறது.

Advertisements
காமன்வெல்த் போட்டிகள் ‍‍- வெற்றியா? தோல்வியா?

4 thoughts on “காமன்வெல்த் போட்டிகள் ‍‍- வெற்றியா? தோல்வியா?

  1. kanagu சொல்கிறார்:

    நல்ல வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம்-னு தான் சொல்லணும்.. எந்த அசம்பாவிதமும் இல்லாம முடிஞ்சதே பெரிய விஷயம் தான்…

    கல்மாதியும், ஷீலா தீட்சித்தும் இத எதிர்ப்பார்த்திருக்க மாட்டாங்க-னு நினைக்கிறேன் 😛 😛

    1. உண்மைதான் கனகு. நம்மைப் பத்தி நல்ல எண்ணத்தை உருவாக்கற அற்புதமான வாய்ப்பைக் கோட்டை விட்டுட்டோம். இந்தியான்னாலே ஊழல்தாங்கற அவங்க எண்ணத்தை உறுதிப்படுத்தின மாதிரி ஆயிடுச்சு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s