இந்த கேள்விக்கு என்ன‌ ப‌தில் சொல்ல‌?

சில‌ நாட்க‌ளுக்கு முன்பு ஸ்கூலில் டீச்ச‌ர் திட்டிட்டாங்க‌ன்னு சொல்லிட்டு ஒரு பைய‌ன்   கொல்க‌த்தாவில்  த‌ற்கொலை செய்துகொண்ட‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது  ந‌ண்ப‌ர்க‌ளில் ஒருவ‌ன் தற்கொலையில் ஒண்ணும் த‌வ‌றில்லைங்க‌ற‌ மாதிரி பேச‌ ஆர‌ம்பித்தான். அவ‌ன்  ஏற்க‌ன‌வே  எல்லா  விஷ‌ய‌த்துக்கும் புல‌ம்ப‌ற‌வங்க‌ற‌தால‌, சீரிய‌ஸா பேச‌றானா காமெடிக்கு பேசினானான்னு  எங்க‌ளுக்கு புரிய‌ல‌.

எங்கள் விவாதத்தின் சில பகுதிகள் கீழே.

“இப்போ ஏதோ கஷ்டம்ன்னு தற்கொலை பண்ணிக்கிட்டா எதிர்காலத்தில வர்ற மகிழ்ச்சியான தருணங்களை இழந்திடுவ”

“எப்பொவோ வருமோ வராதோன்னு  தெரியாத நல்ல விஷயங்களை இழக்கக் கூடாதுங்கறதுக்காக எதுக்காக இப்போ கஷ்டத்தை அனுபவிக்கணும்?”

“கஷ்டப்படறவன் எல்லாம் செத்து போயிடணும்னு நெனைச்சா உலகத்தில யாருமே உயிரோட இருக்க மாட்டாங்க. கஷ்டத்தில‌ ஜெயிச்சு வாழற‌துதான் உண்மையான வாழ்க்கை”

“ஜெயிச்சு வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம்? எப்படியும் ஒருநாள் சாகத்தான போறோம்? எப்படியும் 20 வருஷமோ, 30 வருஷமோ ஏதாவது ஒருநாள் சாகத்தான போறோம். கஷ்டத்தை எல்லாம் ஜெயிச்சு வந்தால் சாவே வராதுன்னு சொல்லு கஷ்டத்தை ஜெயிச்சு வாழறது சரியான விஷயம்ன்னு ஒத்துக்கிறேன்”

 இதுதான் அவன் கேட்ட கேள்வி.  எங்களுக்கு என்ன பதில் சொல்லறதுன்னே புரியல. இந்த கேள்வியை யாராவது உங்களைக் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பீர்கள்? இந்த விஷயத்தில அவன் நினைக்கிறது தவறுன்னு நிரூபிக்க நினைக்கிறோம்.

Advertisements
இந்த கேள்விக்கு என்ன‌ ப‌தில் சொல்ல‌?

5 thoughts on “இந்த கேள்விக்கு என்ன‌ ப‌தில் சொல்ல‌?

 1. kathir சொல்கிறார்:

  கேள்விக்கு பதில்
  அந்த நண்பனை
  உடனடியாக சாக சொல்லவும்
  அந்த நண்பர் சாக மாட்டார்
  சும்மா வார்த்தைகளுக்காக வாதங்களுக்காக பேசுபவர்கள் தான்
  இவரை போன்றவர்கள்
  இல்லேன்னா லவ் பண்ண சொல்லுங்க
  வாழ ஆசைபடுவார்
  அப்புறம் இந்த கேள்வியே என் கேட்டை என்று கேளுங்கள்

 2. என்னைக்கோ ஒரு நாள் உன் அப்பனும் அம்மாவும் செத்த பிறகு நீ தான கொள்ளிவைக்க போற,
  வா இன்னைக்கே அவங்க உயிரோட இருக்குறப்பவே வச்சிரு. நீ என்ன அவங்கள மகாராஜா, மகாராணி மாதிரியா கவனிச்சிக்குற. இலல, அவங்க செத்த பொறகு வச்சா மட்டும் உசுரோட வரவா போறாங்க, எதுக்கு அதுவரைக்கும் காத்திருக்கணும்னு கூப்பிட்டு பாருங்க…….

 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர், சௌந்தர்.

  //ரெம்ப ஈசியா கேள்வி கேட்கலாம்//

  உண்மைதாங்க அக்கா.. கேள்வி கேக்கறது ரொம்ப ஈசியான விஷயம்.. அந்தக் கேள்விக்கு அவன் பதில் தேடி அலைஞ்சானாலே ஞானி ஆயிடுவான்.. 🙂

  //அது ஏன் எப்போ பார்த்தாலும் இந்த மாதிரி ஆளுககிட்டாயே நீ பேசுற ??//

  இவன் என்னக் கேள்வி கேட்பான்னு தெரிஞ்சிக்கிட்டா பேச முடியும்.. 🙂
  கேக்கறவன் எல்லாம் குதர்க்கமா கேட்டால் அதுக்கு நான் என்ன பண்ண‌ 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s