எனக்கு ஏன்தான் இந்த பெயர் வச்சாங்களோ?

எனக்கு எதுக்கு அன்பழகன்-ன்னு பேர் வச்சீங்கன்னு எனது பெயரை தெரிவு செய்த மாமாவிடம் கேட்டால், ‘அழகான தமிழ் பெயர்’ என்பார். ஆனா இந்த பேருனால நான் படர அவஸ்தை இருக்கே, யப்பா.. பேரை இனிமேல் மாத்தவும் முடியாது.. காலம் முழுக்க அனுபவிக்க வேண்டியதுதான். அப்படி வருத்தப் படர அளவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லத்தான் இந்தப் பதிவு.

ஸ்கூல்-ல படிக்கும் போது பசங்கள்ல சில பேர் ‘அழகா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அதுவும் 10 பேர் முன்னாடி ‘அழகா’ன்னு கூப்பிட்டா ஒரு மாதிரி இருக்கும். அடப்பாவிகளா ‘அன்பழகன்’ அப்படின்னா அன்பு மிகுந்தவன்னு அர்த்தம். ரெண்டாவது பாதிய மட்டும் சொல்லாதீங்கடான்னு சொல்லி சலிச்சாச்சு. அதுவும் சில பொண்ணுங்க பக்கத்தில நடந்து போயிட்டு இருக்கறப்போ ‘அழகா’ன்னு கூப்பிட்டா, அவளுங்க வேற கேவலமா நம்மைப் பாத்து சிரிச்சிட்டு போவாங்க, ‘இவனா அழகன்னு’. இவனுங்க மட்டும் கடைசிவரைக்கும் அதை நிறுத்தவே இல்லை.

இன்னொன்னு என் பேரோட முதல் எழுத்து. தமிழ்-லயும் சரி, இங்கிலீஷ்-லயும் சரி அதான் முதல் எழுத்து. அதனால ஸ்கூல்-லயும், காலேஜ்-லயும் நான்தான் ரோல் நம்பர் ஒண்ணு. எதுவா இருந்தாலும் நாந்தான் மாட்டுவேன். கொஞ்சம்  லேட்டா போனாலும் ஆப்சென்ட் போட்டு இருப்பாங்க. அட்டெண்டன்ஸ் எடுக்க ஆரம்பிச்சவுடனே முதல் பேரே நம்மளது தான.

அப்புறம் இந்த செமினார்-ன்னு ஒரு விஷயம். காலேஜ் போன முதல் வருஷத்தில இருந்து விடவே இல்லை. எப்போ பார்த்தாலும் முதல் ஆளுல இருந்துதான் ஆரம்பிப்பாங்க. எல்லா செமஸ்டர்-லயும் செமினார் எடுத்த ஒரே ஆள் நானாத்தான் இருப்பேன். என் நண்பர்கள் சிலரது பேர் எல்லாம் S, T -ன்னு ஆரம்பிக்கும். இவனுங்கெல்லாம் எப்பவும் செமினார் எடுத்ததுமில்ல, மோசமா எடுத்ததுக்காக திட்டு வாங்கினதும் இல்ல.

சரி, இதெல்லாம் ஸ்கூல் காலேஜ் உடன் முடிஞ்சுது. வேலைக்கு வந்த பிறகாவது சந்தோசமா இருக்கலாம்ன்னா, இன்டெர்வியூ-லயே பிரச்சினை ஆரம்பிச்சுது. என் பெயரை இங்கிலிஷ்ல ‘Anbazhagan’ அப்படின்னுதான் எழுதுவேன். இன்டெர்வியூ-ல தேர்வானவாங்க பெயரை படிச்ச பொண்ணு, என் பேரை ‘அன்பாஸ் ஹேகன்’ ன்னு படிச்சுது. இன்டெர்வியூ அவுட்டுன்னு நெனச்சு வெளிய போக இருந்தவன நல்லவேளையா நண்பன் ஒருத்தன்தான் நிறுத்தி என் பேரைத்தான் அப்படி அந்த பொண்ணு படிச்சதுன்னு சொன்னான்.

இங்க பெங்களூரில், தமிழ் ஆளுங்களை தவிர வேற யாரும் என் பேரை ஒழுங்கா சொன்னதில்ல. பேரைப் படிக்க முயற்சி பண்ணிட்டு, அதை எப்படி சொல்லறதுன்னு என்னையே கேட்டுடுவாங்க. கேட்டுட்டு சும்மா இருந்தாப் பரவாயில்லை. Zh எப்படி ழ ஆகுதுன்னு கேட்டு கேட்டு, ஒருவழியா நான் அந்த ழ வின் சிறப்புகள் எல்லாம் சொன்னதுக்கு அப்புறம்தான் விடுவாங்க.

இதனாலயே இப்போவெல்லாம் யாராவது என் பேரைக் கேட்டால் அன்பு-ன்னு மட்டுமே சொல்லறது. அதுலயும் சில பேர் ‘அந்து’வான்னு கேக்கறப்போ வர கடுப்பு இருக்கு பாருங்க.

வேலை நிமித்தமாக என்னுடன் உரையாடும் அமெரிக்காகாரங்க அதுக்கு மேல. ‘anbaazkaan’  (அன்பாஸ்கான்)  இதுதான் அவனுங்க கூப்பிடுற பெயர். நிறைய தடவை பேசறவங்க சுருக்கமா ‘anbaaz’ (அன்பாஸ்) ன்னு தான் கூப்பிடுறாங்க.

இதனாலயே எதிர்காலத்தில என் குழந்தைக்கு A -ல தொடங்கற மாதிரியோ ‘ழ’ வர மாதிரியோ வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன். ‘Z ‘ ல வைக்கலாம்ன்னு தான் முடிவு பண்ணி இருந்தேன்.  ஆனால் ஜீப்ரா (Zeebra) அப்படீங்கற பேரைத் தவிர வேற எதுவும் தெரிய மாட்டேங்குது.  :-).  அதனால T, U, Y இதுல எதாவதுதான் தேடணும். ஒண்ணும் பிரச்சினையில்ல, கல்யாணத்துக்கே  எப்படியும்  நாலஞ்சு  வருஷம் ஆகும். அதுக்குள்ள இதில ஒரு பேரை பிடிச்சிட மாட்டனா  என்ன. 🙂

Advertisements
எனக்கு ஏன்தான் இந்த பெயர் வச்சாங்களோ?

19 thoughts on “எனக்கு ஏன்தான் இந்த பெயர் வச்சாங்களோ?

 1. // அப்புறம் இந்த செமினார்-ன்னு ஒரு விஷயம். காலேஜ் போன முதல் வருஷத்தில இருந்து விடவே இல்லை. எப்போ பார்த்தாலும் முதல் ஆளுல இருந்துதான் ஆரம்பிப்பாங்க. எல்லா செமஸ்டர்-லயும் செமினார் எடுத்த ஒரே ஆள் நானாத்தான் இருப்பேன்

  //

  அப்துல்லாவுக்கும் அதே பிரச்சனைதான் :))

 2. அன்பு உங்களுக்காவது பரவாயில்லை,

  என் மகன் பெயர் “அறிவுமுகிலன்”, இரண்டாவது
  படிக்கிறான்.பள்ளி பதிவேட்டில் முதல் பெயர்…
  கெஞ்சுகிறான் “முகிலன்”என மாற்றக்கோரி…

  ஏன்?…ஆசிரியை “அறிவு கெட்ட முகிலன்” எனத்
  திட்டுகிறாராம்!பசங்க கூட வேடிக்கையாக பேசுகிறார்களாம்…

  நான் தமிழின் சிறப்பையும்,தமிழனின் தனித்துவத்தையும்
  கூறி தற்போது சமாளித்துள்ளேன்.

  1. :-).
   உண்மையிலயே பாவங்க உங்க பையன். என்ன பண்ணறது அறிவு/அழகு இப்படியெல்லாம் பேரு வச்சா கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் சமாளிக்கணும். 🙂

   வருகைக்கும், உங்கள் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி.

 3. இந்த விஷயத்துல நான் மாட்டிக்கல, ஆனா உங்களோட சோகத்தை புரிஞ்சுக்க முடியுது. நீங்க சந்தோசம இருக்க ஒன்று சொல்லட்டுமா.

  என் தோழயின் பெயர் அழகுசுந்தரி. சுந்தரி என்றாலும் அழகு, அழகு என்றாலும் அழகு.

 4. ILA சொல்கிறார்:

  உங்களுக்கு முதல் பேர் பிரச்சினைன்னா எனக்கு கடைசி பேரு பிரச்சினை. என் முழு பேரை அமெரிக்கா License முழுசா எழுத முடியலைன்னா பார்த்துக்குங்களேன்.

 5. இவ்வளவு அழகான பெயருக்க பின்னாடி இப்படி ஒரு சோகமா? .. விடுங்க பாஸ்.. கல்யாணம் முடிஞ்ச பின்னாடி உங்கவீட்டம்மா…’அன்பே என் அன்பேன்னு’ கூப்பிடும் போது இதெல்லாம் மறந்திடுவீங்க.

   1. அன்பு, குந்தவை பேச்செல்லாம் அப்படியே நம்பிடாதீங்க….. 😮

    அவங்க ஹஸ்பெண்ட்ட பாத்து என்ன பாட்டு பாடுறாங்கன்னு கேளுங்க….. 🙂

    அவங்க இப்படித்தான் நல்லா சாம்பிராணி போடுவாங்க….

    (பதிவுலகத்துல சண்டையெல்லாம் முடிஞ்சி போச்சாமே, நம்மால எதுனா முடியாதுன்னு பாப்போம்)‌

    1. சௌந்தர்.. நீங்க சண்டையை ஆரம்பிக்கற‌துக்கு என் ப்ளாக்தான் கிடைச்சுதா.. :-)..
     இந்த ப்ளாக்லதான் இது ஆரம்பிச்சுதுன்னு எல்லாரும் என்னைத் திட்டறதுக்கா?.. 🙂

     (நம்ம சேஃப்டிக்காக ஒரு விஷயம். :-). இது முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வுடன் அளிக்கப்பட்ட பதில் என நம்புகிறேன். ஏதாவது உள்குத்து இருந்தால் சொல்லிடுங்க‌.)

 6. //குந்தவை பேச்செல்லாம் அப்படியே நம்பிடாதீங்க…..
  அப்ப என்னுடைய பேச்சை நம்பிட்டு இருக்கீங்களா? நல்ல தம்பி நீங்க( சாம்பிராணி போடலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?)…

  //அவங்க ஹஸ்பெண்ட்ட பாத்து என்ன பாட்டு பாடுறாங்கன்னு கேளுங்க…..
  அதெல்லாம் குடும்ப ரகசியம் தம்பி.

  //இந்த ப்ளாக்லதான் இது ஆரம்பிச்சுதுன்னு எல்லாரும் என்னைத் திட்டறதுக்கா?..
  திட்டுக்கெல்லாம் பயப்படுவீங்களா?… அப்ப நீங்க கல்யாணம் பண்ணுனமாதிரி தான்.

  1. // திட்டுக்கெல்லாம் பயப்படுவீங்களா?… அப்ப நீங்க கல்யாணம் பண்ணுனமாதிரி தான்.//

   கல்யாணத்துக்கு அப்புறம் வாங்குற திட்டெல்லாம் இந்த மாதிரி பொது இடத்தில நடக்காதில்ல.. :-)… நீங்களே சொல்லிட்டீங்களே அதெல்லாம் குடும்ப ரகசியம்ன்னு.. 🙂
   அந்த மாதிரி ரகசியமா வாங்குற திட்டுக்கெல்லாம் நாங்க பயப்படமாட்டோம்.. 🙂

 7. adhiyamaan1000 சொல்கிறார்:

  மூன்றாவது பத்தியில் லேட்டாக்கு ,லெட்டான்னு ,எழுதி வச்சிருக்க மாமா .அது சரி எங்க அப்பாவ பத்தி எதுக்கு நீ எழுதின எனுக்கும் தான் அதியமானுன்னு பேர் வச்சிருக்காங்க .நானும் தான் எல்லாத் திளையும் மொதல்ல .எங்களுக்கு இல்லாததா உங்களுக்கு பேசறாங்க பேச்சு .எங்கள மாதிரி வருத்தம் இல்லாத வாலிபர் சங்கத்தில சேந்தா எல்லாம் முடிஞ்சது .என்ன சேந்துகிரையா

  1. Anbu சொல்கிறார்:

   // மூன்றாவது பத்தியில் லேட்டாக்கு ,லெட்டான்னு ,எழுதி வச்சிருக்க //

   டேய் நீ என்ன நக்கீரர் பரம்பரையா.. எழுத்துப்பிழையெல்லாம் கண்டுபிடிச்சு சொல்லிட்டு இருக்க.. சரி பண்ணிட்டம்ப்பா.. கம்முன்னு என் ப்ளாக்‍க்கு ப்ரூஃப் ரீடர் ஆயிடு.. 🙂

   உங்க அப்பாவைத் திட்டியெல்லாம் நான் ஒண்ணும் எழுதலடா.. இந்த பேரு வச்சதானால வர்ற அவஸ்தையை எழுதியிருக்கேன் அவ்வளவுதான்.. :).. இப்பதான ஸ்கூல் படிச்சிட்டு இருக்க.. கொஞ்ச நாள் போகப்போக கஷ்டம் தெரியும்.. 🙂

 8. adhiyamaan1000 சொல்கிறார்:

  z இல்ல வர மாதிரின்னா ஜாகிர் உசேன் என்று உங்க குழந்தைக்குப் பேர் வைக்கலாமே .என்னடா முஸ்லிம் பேராக இருக்கிறது என்று பார்க்காதிர்கள் .உங்களுக்குத்தான் ,தமிழ்பற்றே இல்லையே மதம் எதுவாக இருந்தால் என்ன .ஒன்று கவனித்தீர்களா நீங்கள் எழுதிய குழந்தை என்ற வார்தைக்கும் ” ழ ” வருகிறது .இது என் அப்பாவின் கருத்து .என் பாட்டி தருமபுரி லட்சுமி கருத்துக்கூட இதுதான் .

  1. Anbu சொல்கிறார்:

   தமிழ் பற்று இல்லைன்னா நான் தமிழில் பதிவு எழுதவேண்டிய அவசியமே இருந்திருக்காது. எனக்கு தமிழ் பெயர் வச்சதை நான் குறை சொல்லவே இல்லை. அந்தப் பெயரைப் படிக்க முடியாம கொலை பண்ணறவங்கனால ஏற்படர கடுப்பத்தான் எழுதியிருக்கேன். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s