காமன்வெல்த் போட்டிகளும், இந்தியாவின் வறுமையில்லா வேடமும்

காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ளும்  வீரர்களுக்கும்,  போட்டிகளைக்  காண  இந்தியா வரும்  வெளிநாட்டினருக்கும், இடைஞ்சலாகும்  எனக்கருதி பிச்சைக்காரர்களை கைது செய்து அடைத்தும்,  கூலித் தொழிலாளர்களை  டெல்லியை விட்டு விரட்டியும் அடித்திருக்கிறது அரசு.

 டெல்லியின்  ஒவ்வொரு சிக்னலிலும்   நின்று  தங்கள்  அன்றாட  உணவுக்காக  பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரையும் திடீரென்று சில நாட்களாக காணவில்லையாம். இது பற்றி செய்தி நிறுவனங்கள் விசாரித்த போது கிடைத்த தகவல்தான் இது.

 நம்மால் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றால் அதை மூடி மறைப்பதுதான் தீர்வா? 

 நாட்டின் தலை நகரில் பிச்சைக்காரர்களை ஒளித்து வைத்துவிட்டால் இந்தியாவில் இருக்கும் வறியவர்களைப்  பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரியாமல் போகுமா? ஒவ்வொரு வருடமும் ஐ.நா. அறிக்கையில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கையை புள்ளி விவரமாக தந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

 இப்படி நாட்டில் வறுமையில் உள்ளவர்களை ஒளித்து வைத்துவிட்டு, பெரும் பணக்காரர்கள்தான் இந்தியாவின் அடையாளம் என்பதைப் போல வெளிநாட்டவர்க்கு காட்டுவதால் யாருக்கு என்ன பலன். ஏன்  இந்திய அரசுக்கு இந்த போலி கெளரவம் தேவைப்படுகிறது? இந்தியாவைப் பணக்கார நாடாகக் காட்டுவதற்காக, வறுமையில் உள்ளவர்களை  நாடு கடத்திவிடலாமா?

 இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள். 1 சதவீதத்துக்கும் குறைவான   கோடீஸ்வரர்களுக்கா, இல்லை  மற்ற நடுத்தர ஏழைகளுக்கா? நிச்சயமாக  அந்த ஒரு சதவீத மக்களுக்காக, மற்ற அனைவரின் நலனையும் தூக்கி எரியத்  தயங்கிய மாட்டார்கள், ஆட்சியில் இருப்பவர்கள் என இதன் மூலம் தெளிவாக  நிரூபித்திருக்கின்றனர்.

 நியாயமான அரசாக இருந்திருந்தால் இவர்களுக்கு தனியாக ஒரு வாரியம் அமைத்து வருமானம் கிடைக்கும்படி ஒரு தொழிலைக் கத்துக் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் இதையெல்லாம் எப்படி இந்த அரசிடம் எதிர்பார்க்க முடியும். அரசு கிடங்குகளில் வீணாகப் போகும்  உணவு தானியங்களை கூட ஏழைகளுக்கு தரமுடியாது எனக் கூறிய அற்புதத் தலைவரின் கீழ் தானே ஆட்சியே நடைபெறுகிறது.

 இப்படி தங்கள் சொந்த நாட்டிலேயே வேண்டாதவர்களாகப் பார்க்கப் படும் அளவிற்கு இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? பல ஆயிரம் கோடிகளை சுருட்டியவர்கள் எல்லாம்  ஆட்சி கட்டிலில் உட்கார்ந்து அதிகாரம் செய்யும் இந்த நாட்டில், பல நூறு கோடி ருபாய் வரி ஏய்ப்பு செய்தவன் எல்லாம் இந்திய முன்னேற்றத்தின் அடையாளமாகக் காண்பிக்கப்படும் இந்நாட்டில், பிழைக்க வழியில்லாமல் பிச்சை எடுப்பவர்கள்தான் அவமானச் சின்னமாக தெரிகின்றனர் இந்த அரசுக்கு. இவர்கள் பிழைக்க வழிகளை ஏற்ப்படுத்தி தராமல் இவர்களை மற்ற நாட்டினர் வரும் போது ஒளித்து வைப்பது, இவர்களின் முன்னேற்றத்துக்காக  எங்களிடம் எந்த திட்டமும் இல்லை என அரசாங்கம் ஒப்புக் கொள்ளும் விஷயமாகவே தெரிகிறது எனக்கு.

தனது வறட்டு கௌரவத்துக்காக 35000 கோடி ருபாய் செலவு செய்து  போட்டியை  நடத்தும் அரசு, தன் நாட்டு மக்களுக்காக அதில் ஒரு சதவீதத்தை செலவு செய்யவே யோசிக்கும் நிலையில்தான் இந்த அரசு உள்ளது என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Photo from: NDTV.COM

Advertisements
காமன்வெல்த் போட்டிகளும், இந்தியாவின் வறுமையில்லா வேடமும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s