திருந்தாத ஜென்மம்

எங்க ரூம்ல இருந்த ஒருத்தன பத்திய விஷயம் இது.  அவன பெருசா எங்க யாருக்கும் பிடிக்காது. ஆனாலும் சண்டைன்னு எதுவும் கிடையாது. அவனை எங்களுக்கு பிடிக்காததுக்கு காரணமே அவனுடைய நடவடிக்கைகள் தான்.  எப்போ  என்ன  செஞ்சாலும் சுயநலமாவே யோசிப்பான்.  எல்லா விஷயத்தையும் வடிவேலு சொல்லற மாதிரி ‘சின்னபுள்ளத்தனமாகவே’ யோசிக்கிற ஆளு.  

ஒருநாள் ஊருக்கு போயிட்டு வரும்போது திருநெல்வேலி அல்வா ஒரு கிலோ வாங்கிட்டு  வந்தான். வாங்கிட்டு வந்துட்டு ரூமில் இருந்த எல்லோருக்கும்  ஒரு ஸ்பூன் வீதம் கொடுத்தான். மறுபடியும்  கேட்டப்ப,  ‘இதெல்லாம் வச்சி சாப்பிடனும்டா’ ன்னு  சொல்லிட்டு  எடுத்து வச்சிட்டான்.  அடுத்த நாள் நாங்க ரூமுக்கு வந்து ‘சரி, அல்வா சாப்பிடலாம்’ன்னு வச்ச இடத்தில தேடினோம். எதுவும்  இல்ல.  அவன் வந்த பிறகு அவனிடம் அல்வாவை பத்தி கேட்க அவன், ‘பசிச்சிது அதான் சாப்பிட்டுட்டேன்’  அப்படின்னு சொன்னான். ‘என்னதான் பசிச்சாலும் முக்கால் கிலோ அல்வாவையா சாப்பிடுவாங்க?’ எனக் கேட்க நினைத்தாலும் அவனைப் பத்தி தெரியுங்கரதால கேட்காம விட்டுட்டோம். அந்த மாதக் கடைசியில ரூம் செலவுக் கணக்கைப் பார்க்கும்போதுதான் அதிர்ச்சி ஆனது. அல்வா வாங்கின  கணக்குல   200  ரூபாயை ரூம் கணக்குல சேர்த்திட்டான் அவன். ‘ஒரு ஸ்பூன் அல்வாக்கு 50  ரூபாயா?’ ன்னு பொலம்பிட்டு அந்தக் காசக் கொடுத்தோம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

எல்லா வார இறுதியிலும் ரூமில் இருந்தா செலவு ஆகும்னு சொல்லிட்டு , அவங்க அக்கா வீட்டுக்கு போய்டுவான். எங்களுக்கு தெரிஞ்சு அவன் பெங்களூரில் இருந்த மூணு வருஷத்தில் ஒரு வார இறுதிகூட ரூமில் இருந்ததில்லை. ரொம்ப நாளாக இதை கவனித்த எங்கள் நண்பன் ஒருநாள் அவனிடம் ‘ஏண்டா மச்சி, உங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் ரெண்டு நாள் தான லீவு?’ 

‘ஆமாம்’

‘அந்த நாள்லயும் நீ   போய் அங்க உக்காந்துக்கிட்டா,  அவங்க  ப்ரைவசியை  கெடுக்கற மாதிரி  நெனைக்கமாட்டாங்க?’

‘எங்க  மாமா  ரொம்ப  நல்லவர்டா.’

‘நல்லவங்கன்னா ஒன்னும் பண்ண மாட்டாங்களா?’ ன்னு கேட்க போன நண்பனை அமைதிப்படுத்தினோம். இப்படி ஒரு பதிலை, 25 வயசான  ஒருத்தன்  சொன்னால்  அவனிடம்  வேற  என்ன  கேக்கறது? 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இன்னொரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு எழுந்து உக்காந்து ஏதோ ஒரு 40 ௦பக்க  பிரிண்ட்அவுட்    வச்சி படிச்சுட்டு இருந்தான். ‘நான் என்னடா இந்நேரத்துக்கு உக்காந்து ஏதோ படிச்சுட்டு இருக்க? எக்ஸாமா?’ எனக் கேட்டேன். 

அவன் ‘இல்லைடா. இது இந்தியாவோட பட்ஜெட்’ அப்படின்னான். 

‘இத ஏண்டா பிரிண்ட் பண்ணுன? காலைல நியூஸ்பேப்பர்ல வருமே?’ என நான் கேட்க,

‘அதுல முழுசா வராது. இதவச்சுத்தான் என் இந்த வருஷ பட்ஜெட்டை நான் போடணும்’ ன்னு சொன்னான்.

இவன்கிட்ட மைக்ரோ பட்ஜெட், மேக்ரோ பட்ஜெட் வித்தியாசத்தை எல்லாம் இந்நேரத்துக்கு சொல்லிட்டு இருக்க முடியாதுன்னுட்டு, ‘சரி இத படிச்சிட்டின்னா, பேப்பர்லாம் வேஸ்ட் தான?’ எனக் கேட்டேன். 

அவனோ, “இதப் படிச்சு முடிச்சுட்டு என் கேர்ள் பிரெண்ட்-க்கு  கொடுப்பேன்’ன்னு சொன்னான்.

‘கேர்ள் பிரெண்ட்-க்கு  பட்ஜெட் பிரசென்ட் பண்ணரவன்கிட்ட எல்லாம் பேச முடியாதுன்னு’ நினைத்துக்கொண்டு தூங்கிட்டேன்.

நான்கூட இத ஏதோ சும்மாதான் சொன்னான்னு நெனச்சேன். ஆனா ஒருநாள் போன்ல அவன் ஆளுக்கிட்ட, ‘ஒழுங்கா அதப்படிச்சு உங்க அப்பாவுக்கு பட்ஜெட் போடறதில ஹெல்ப் பண்ணு’ன்னு சொன்னப்பதான் இவன் உண்மையிலேயே லூசுன்னு முடிவு பண்ணேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இன்னொரு விஷயம், இவனுக்கு எல்லாமே நேரத்துக்கு நடக்கணும். காலைல 8 மணிக்கு குளிக்கணும், இரவு 10 மணிக்கு தூங்கிடனும். என்ன நடந்துட்டு இருந்தாலும் இத மாத்த மாட்டான்.  ஒரு நாள் நாங்க எல்லாம் IPL மேட்ச் பாத்திட்டு இருந்தோம். மேட்ச் நல்லா விறுவிறுப்பா போயிட்டு இருந்தது.  சரியா பாத்து மணி ஆனவுடனே, ‘நான் தூங்க போரேன்னு’ போய்ட்டான். ‘ஏண்டா இண்டரெஸ்டா மேட்ச் பாத்திட்டு இருந்த?’ அப்படின்னு கேட்டதுக்கு, ‘மேட்ச் என்ன ஆச்சுன்னு காலைல பாத்துக்கலாம்’ எனச் சொல்லிவிட்டு போய் படுத்து தூங்கிட்டான். 

இன்னொரு நாள் காலைல எல்லோரும் பேசிட்டு இருந்தோம். திடீருன்னு 8 மணிக்கு அலாரம் அடிச்சது அவனோட மொபைல்ல. உடனே ‘இட்ஸ் டைம் டு டேக் பாத்’ ன்னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டான். இவனையெல்லாம் யாரும் திருத்த முடியாதுன்னு விட்டுட்டோம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சிலர் எப்பவாவது திருந்துவாங்கன்னு  நம்புவோம். சிலர் எப்போவுமே திருந்த மாட்டாங்கன்னு  தண்ணி  தெளிச்சு  விட்டுருவோம்.  இவன் ரெண்டாவது வகைன்னு முடிவு பண்ணி விட்டுட்டோம். ஒரு மாதம் முன்னாடி ஒரு வழியா எங்க ரூமை காலி பண்ணிட்டு கெளம்பிட்டான்.

Advertisements
திருந்தாத ஜென்மம்

6 thoughts on “திருந்தாத ஜென்மம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s