கம்யூனிசம் – ஒரு இந்தியனின் பார்வையில்

கம்யூனிசம் என்ற ஒரு உன்னதமான கோட்பாடு இந்தியாவில் வெறும் கட்சிகளாகவும், சங்கங்களாகவும் மாறி பல காலம் ஆகிவிட்டது.  ‘உழைப்பின் பலன்களை உழைப்பவரே அனுபவிக்க வேண்டும், வகுப்பு   பேதமற்ற,  பொருளாதார ஏற்ற தாழ்வுகள் அல்லாத சமுதாயம் அமைய வேண்டும்’  போன்ற உன்னதமான கோட்பாடுகளுடன், கார்ல் மார்க்ஸ், சே குவாரா போன்றவர்களின் கனவாக இருந்த அடிப்படைக்   கம்யூனிசக்   கொள்கைகளைப்  பல  கம்யூனிச அரசுகளே கைவிட்டுவிட்ட பிறகு, இந்தியாவில்  இப்போதுள்ள நிலை  பெரிய  ஆச்சர்யமில்லைதான்.

எனக்கு கவலை  அளிப்பதெல்லாம்  கம்யூனிசத்தைப்   பற்றி,  வெகு ஜனங்களிடையே  இது போன்ற சங்கங்களாலும்  கட்சிகளாலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தவறான எண்ணங்கள் தான். என் கணினி திரையில் வைத்திருந்த சேவின் படத்தைப்  பார்த்த ஒருவர், ‘உன்னிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்’ என்றார். ‘கம்யூனிஸ்ட்கள் என்றாலே எதற்கெடுத்தாலும்  போராட்டம் செய்பவர்கள்தானே’ என்றார் அவர்.

கார்ல் மார்க்சின்  கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு,  சம்பள உயர்வுக்காகவும்,  போனசுக்காகவும் போராடும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளை, தொழிலாளர்களின்  ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன, இவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் மற்ற கட்சிகள்.

இந்த மாதிரியான போராட்டங்கள், ‘தொழிலாளர்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்காக  நடத்தப்படுபவை’  எனச்சொல்லப்படும் பல வாதங்களை கேட்டிருக்கிறேன். ஆனால் பல சமயங்களில் தொழிற்சங்கங்களைக்காட்டி தங்கள் மேல் அதிகாரிகளை மிரட்டும் சிலரை பார்க்கும்போதும் அவர்களுக்காக தொழிற்சங்க நிர்வாகிகள் வக்காலத்து வாங்கும்போதும் அந்த தொழிற்சங்கங்களின் மேலேயே  பலருக்கு வெறுப்பு வருவதுதான் உண்மை.

கம்யூனிஸ்ட் கட்சிகளை பொருத்தவரை அமெரிக்காவை எதிர்ப்பதும் அவர்களின் இந்திய முதலீடுகளை எதிர்ப்பதுமே தங்கள் கொள்கைகள்  என்றாகிவிட்டன.  நமது நாட்டில் நடக்கும் பல நிலச்சுரண்டல்கள்  எந்தவித எதிர்ப்புமின்றி  (அல்லது  எதிர்ப்புகள்  பலரிடம்  கொண்டுபோகப்படாமல்)   நடந்து கொண்டுதான்  இருக்கின்றன.  சமீபத்தில் நடந்த Dongria நில ஆக்கிரமிப்பு போராட்டத்தில், சுற்றுசூழல் ஆர்வலர்கள், Survival  போன்ற சர்வதேச அமைப்புகள் எடுத்த முயற்சியில் சிறிதும் நம்நாட்டு கட்சிகளால் எடுக்கப்படவில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை.  இதன் காரணம் என யோசித்தால் அவர்கள் வெறும் 8000 பேர், அவர்கள் ஓட்டுகளை விட வேதாந்தாவின்  பணத்திற்கு மதிப்பு அதிகம்.

மேலும் தங்களை கம்யூனிஸ்ட்டுகள்  என்று சொல்லிக்கொள்ளும் பலர், அதன் மூலம் தாங்கள் எப்படி பணம், பதவி சம்பாதிப்பது என்று சுயநலமாகத்தான் யோசிக்கின்றனர்.

எனக்கு தெரிந்தவரை கம்யூனிசக் கொள்கைகளை மூலமாகக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட இதழ்கள் தமிழில் மட்டுமே வருகின்றன. ஆனால் ‘இவை  அனைத்தும் கம்யூனிசத்தைப்பற்றி  தெரியாதவர்களுக்கு  அந்த கொள்கையின் மேல் ஒரு தவறான எண்ணத்தையே உருவாக்குகின்றன’  என்பது  இவற்றில் சிலவற்றை படித்ததில் எனக்கு தோன்றிய ஒரு கருத்து.  கம்யூனிசத்தைப் பற்றியும் அதன் சிறப்பான கருத்துகளைப் பற்றியும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு சொல்லக் கூடிய வகையில் எனக்கு தெரிந்து எந்த இதழும் தமிழில் இல்லை.

ஏதோ ஒருவகையில் மோட்டார்சைக்கிள் டைரீஸ் (Motorcycle Dairies)  புத்தகம் மூலம் எனக்கு அறிமுகமான சே-வைப் பற்றி வலையுலகில் ஆராய்ந்த போது, கம்யூனிசத்தைப் பற்றியும், சோஷலிசத்தைப் பற்றியும் நான் கொண்டிருந்த கருத்துகள் முற்றிலும் மாறின. இதற்கு முன் நானும் ‘முதலாளித்துவம் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சொல்லமுடியும்’ என தீவிரமாக நம்பியவன் தான். இதனாலேயே இந்தியாவில் கம்யூனிசத்தின்  உண்மையான கொள்கைகளை விளக்கும் வகையில் சில இதழ்களும், திரைப்படங்களும் வர வேண்டும் என விரும்புகிறேன்.  எனக்கு தெரிந்தவரை சமீப காலங்களில் அன்பே சிவம், பேராண்மை படங்களில் மட்டுமே கம்யூனிசக் கருத்துகளை லேசாக தொட்டிருந்தார்கள்.

இவை நடக்கவில்லை என்றால் கம்யூனிசம் என்பது  இரு கட்சிகளின் கொள்கையாக மட்டுமே எதிர்கால இந்தியாவில் பார்க்கப்படும். அந்தக் கொள்கைகளும் எந்த அளவுக்கு கம்யூனிசத்தின் மேல் தவறான எண்ணத்தை விதைக்கும் என்பதை மாயாவதி போன்றவர்களுடன் இவர்கள் அமைக்கும் கூட்டணியைப் பார்க்கும் போது தெரிகிறது.

சாதி, மத, பொருளாதார பேதங்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதைக் கொள்கையாக கொண்டதாக கூறும் இந்தக் கட்சியினர், சாதியை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கும் பலருடன் கூட்டணி வைக்கும் போது அவர்களின் அடிப்படைக் கொள்கைகளையே இவர்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டதாகவே தெரிகிறது.

இனியாவது இந்த கட்சியின் தலைவர்கள், கம்யூனிசத்தை இளைஞர்களிடையே கொண்டு செல்வதைப்பற்றி யோசிப்பார்களா? ஏனென்றால்,  அனைத்து கட்சி மற்றும் கொள்கைகளும் அடுத்த தலைமுறையினரிடையே  எவ்வளவு  சிறப்பாக  சேர்க்கப்படுகிறதோ  அவ்வளவு  சிறப்பாக வளரும்.  இவை சரியாக செய்யப்படவில்லை என்றால், எவ்வளவு சிறப்பான  கொள்கையாயினும்  அது  அப்படியே அழிந்துபோகும்.  மாவோயிஸ்ட் தீவிரவாதிகளாலும், சில அரசியல்வாதிகளாலும் கம்யூனிசம் என்ற ஒரு சிறப்பான சித்தாந்தத்துக்கு ஏற்பட்டுள்ள களங்கங்கள் விரைவில் அகற்றப்படும் என நம்புகிறேன்.

Advertisements
கம்யூனிசம் – ஒரு இந்தியனின் பார்வையில்

17 thoughts on “கம்யூனிசம் – ஒரு இந்தியனின் பார்வையில்

 1. வலது சந்தர்ப்பவாதத்தையும் (சி.பி.ஐ. , சி.பி.எம்) இடது தீவிரவாதத்தையும்(மாவோயிஸ்ட்) சவுக்கால் அடித்திருக்கிரீர்கள். இதற்கு மத்தியிலான சரியான கம்யுனிஸ்ட் அமைப்புக்கள் தமிழகத்திலும் உண்டு. உங்கள் எதிர்பார்ப்பை செயல்படித்திக் கொண்டிருக்கும் அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ம.க.இ.கவின் அரசியல் கொள்கைகளைப் பற்றித் சாரமாக நடைமுறைப் போக்கில் தெரிந்து கொள்ள
  http://www.vinavu.com
  http://vrinternationalists.wordpress.com
  http://poar-parai.blogspot.com
  http://supperlinks.blogspot.com

  இது குறித்து விவாதிக்க வேண்டுமானாலும் தோழர்கள் தயார்.

  1. நன்றி மருது. இந்த இணையதளங்களை எனக்கு யாரும் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. வினவை மட்டும் மேலே Stalin சொல்லி இருக்கிறார். இவற்றில் சில தினங்கள் உலவிவிட்டு இதன் பயன்களை எழுதுகிறேன்.

 2. mani சொல்கிறார்:

  மாவோயிஸ்டு களால் (தீவிரவாதிகளால்!?) கம்யூனிசத்திற்கு களங்கம் என்றால் கொள்கையிலே தப்பியிருக்க வேண்டும் அவர்கள். அது என்ன அய்யா

  1. நான் அவர்கள் கொள்கையில் தப்பிவிட்டனர் என்று கூறவில்லை. எங்களைப் போன்ற இளைஞர்களிடத்தே, கம்யூனிசத்தைப் பற்றி தவறான கருத்துகளை பரப்ப அவர்கள் நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

    1. அவர்கள் தங்கள் கொள்கைகளில் உள்ள நல்ல விஷயங்களை வெகுஜனங்களுக்குப் புரியும்படி சொல்லத் தவறிவிட்டனர். அதுமட்டும் இல்லாமல், பிணைக்கைதியாக அப்பாவி பொதுமக்களையும், சில காவல் துறை ஆட்களையும் பிடித்துவைத்து கொலை செய்யும் போது, பலரிடம் இவர்கள் சம்பாதித்தது வெறுப்பைத்தான்.
     நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், புலிகளைப்போல, கியூபா போராட்டம் போல, தங்கள் கருத்துகளை மக்களிடம் விதைக்க இவர்கள் தவறிவிட்டார்கள். தாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என மக்களிடம் சொல்லி அவர்கள் ஆதரவுடன் இவர்கள் போராடி இருந்தார்கள் என்றால் நிச்சயம் இவர்களைப் பற்றிய நல்ல எண்ணங்கள் மக்களிடையே ஏற்பட்டிருக்கும்.

     ‘இவர்களோ, இதுதான் நாங்கள் நம்பும் பாதை. நீங்களும் இவற்றை பின்தொடர வேண்டும்’ என முதலிலேயே ஆயுதத்தை எடுத்ததுதான் தவறாகப்படுகிறது எனக்கு.

      1. அவர்கள் நிச்சயம் மக்கள் ஆதரவுடன்தான் போராடினார்கள் என்பதில் உங்களுக்கு சந்தகம் இல்லை என்று நம்புகிறேன். எந்த ஒரு போராட்டமும் வெகுஜன ஆதரவு இன்றி வெற்றியடைய முடியாது என்பது என் கருத்து.
       மாவோயிஸ்டுகள் யாருக்காக போராடுகிறார்கள்? இந்திய மக்களுக்காகவா? அப்படி என்றால் ஏன் பெரும்பான்மையானவர்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை? அவர்கள் யாருக்காகப் போராடுகிறார்கள் எனச் சொல்லிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கே இவர்களின் போராட்டத்தின் அர்த்தம் விளங்கவில்லை எனில், இந்த போராட்டத்தால் யாருக்கு பலன்?

 3. தூத்துக்குடியில் (55 ஆண்டுகளுக்கு முன்பு )ஒரு பொதுக்கூட்டம் முடித்து விட்டு திருச்சிக்கு அடுத்த நாள் காலையில் ரயிலில் வந்திறங்கிய கம்.தலைவர் பொருளாளரிடம் உண்டியல் பணமூட்டையை கொடுத்துவிட்டு, யாராவது நாலு இட்லி வாங்கி வாருங்கள். இரவு சாப்பிடவில்லை” என்றார். “ஏன் தலைவரே இவ்வளவு பணம் இருக்கே,வழியில் எதாவது சாப்பிட்டிருக்கலாமே” என்றான் அப்பாவி தொண்டன். பட்டென்று ஒரு அடி கொடுத்துவிட்டு சொன்னார் தலைவர்”டே இது கட்சி பணம்டா””நீ அன்போடு உன் காசில் எனக்கு வாங்கிவருவதுதான் எனக்கு பிடிக்கும் “.இன்றைக்கு அந்த மாதிரி கம்யு.தலைவர்கள் யாராவது உண்டா? அந்த தலைவரின் பெயர் “ஜீவானந்தம்”. ஹூம்.அது ஒரு காலம்!! பிரிட்டிஷ் காரனிடமும்,பிறகு காங்கிரசாரிடமும் உதய் வாங்கி தொழிலாளர்களுக்காக போராடியது……..

  1. mani சொல்கிறார்:

   கட்சி பணம் னு சொன்னாரா அத விட முக்கியம் அது மக்கள் பணம். இப்போ கட்சின்னா என்ன அத்தா பெரிசான்னு தொண்டனோ தலிவரோ நெனச்சுட்டா போச்சே… அப்பிடி நெனச்சாலும் அத தெளிவாக்றதுக்கு அரசியல கத்து தரணும். ஜீவா கட்சியோ ராம்மூர்த்தி கட்சியோ இதெல்லாம் செஞ்சிருந்தா நல்லாருந்து இருக்கும். காங்கிரசில சோசலிசத்த தேடுறது. கொஞ்சம் பெரியார் திடல் பக்கம் தேடுறது மயிலாப்பூர்ல தேடுறதுனு மக்களோட எதிர்கால்ம் வீணாயிருக்காது

   1. இப்போ கட்சியவிட தலைவர்தான பெரியவர். எனக்கு தெரிஞ்சு எந்த கட்சியிலும் பெரும்பாலான தொண்டர்கள், கட்சியோட கொள்கைக்காக இல்லை. அப்படி இருந்தால் எந்த தலைவனும் கட்சி மாறும்போது அவர் பின்னால் ஆயிரக்கணக்கானோர் வர மாட்டார்கள். எனவே இப்போ கட்சி பணம், தலைவர் பணம் வித்தியாசம் எல்லாம் கெடையாது.

 4. ramji_yahoo சொல்கிறார்:

  இன்றைக்கு உள்ள கம்ம்யுநிசம்- அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக, பன்னாட்டு கம்பெனிகளின் சுரண்டலை ஒழிப்போம் என்று கோஷம் போட்டு விட்டு தன வீட்டிற்க்கு ஜி எம் சி (GMC=ஜெனரல் மோட்டார்ஸ்) குளிரூட்டப்பட்ட ஜீப்பில் தா பாண்டியன் பவனி வருவது .

  குடிசைகள் இல்லாது செய்வோம், வர்க்க பேதங்களை களைவோம் என்று கூறும் நல்லகண்ணு, பாலபாரதி, மகேந்திரன் போன்றோர் சில சட்டமன்ற தொகுதிகளுக்காக கொடநாட்டு தலைவி, சசிகலா அம்மா போன்றோரிடம் கைகட்டி நிற்பது.

  1. நீங்கள் சொல்வதை முழுதும் ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் இந்தியாவின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களைப் பற்றி பேசுகிறீர்கள்.
   ஆனால் கம்யூனிசம் எனும் கொள்கை இவர்களிடம் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. நான் பயந்ததும் இதற்காகத்தான். சில இணையதளங்களை படிக்கும்வரை, இது போன்றவர்களால், இக்கொள்கையைப் பற்றி தவறான எண்ணங்களே இருந்தன எனக்கும்.

   ‘கம்யூனிசத்தின் உண்மையான நோக்கங்களையும் கனவுகளையும் வெளிக்கொணரும், தலைவர்களோ, கட்சிகளோ இந்தியாவில் இல்லை’ என்பதைத்தான் நானும் இங்கு சொல்லி இருக்கிறேன். .

  1. கம்யூனிசத்தின் உண்மையான நோக்கங்களை தெரிந்து கொள்ள நீங்கள் கார்ல் மார்க்ஸ்-ஐயும், சே-வையும் படிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள சில கட்சிகள் மற்றும் சில இதழ்களைப் பற்றி மட்டும் தெரிந்துகொண்டு இதுதான் கம்யூனிசம் என்று நினைப்பதின் விளைவே உங்கள் கருத்து என நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s