எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!!

சிலரது கற்பனைகளை கேட்கும் போது, ‘இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா?’ என்ற ஆச்சர்யம் தோன்றும். இந்த கற்பனைகள், கதைகளிலும் திரைகளிலும் பார்க்கும் போது வேண்டுமானால் பாராட்ட தோன்றும். ஆனால் நம்மை பற்றியும், நம் எண்ணங்களை பற்றியும் ஒருவர் அதீதமாக கற்பனை செய்யும் போது தோன்றுவது நிச்சயம் ஆனந்தம் இல்லை, ஆத்திரம் தான். அப்படி என் பள்ளி பருவத்தில் நடந்த ஒரு  சம்பவத்தின் நினைவு இந்த பதிவு. 

நான் +1 படித்துக்கொண்டிருந்த காலம். நான் தேர்ந்தெடுத்த கணிதம்-கணினி பிரிவின் எண்ணிக்கையே 25 தான்.  அதில் நான்கு பேர் மட்டும் பெண்கள். அப்போ கணினி வகுப்பில், எங்களுக்கு ஸ்டார் ஆபீஸ் ஒரு பாடம். spread sheet -ல மதிப்பெண் பட்டியல் போல எழுதி அதற்கு Graph போட சொல்லி ஆசிரியர் சொன்னார்.

நான் 7 -ஆம் வகுப்பிலிருந்து அந்த பள்ளியிலேயே படித்ததால், எங்க பசங்களின் மன நிலையை பற்றி நன்றாக தெரியும். எங்க பசங்களை பொறுத்தவரைக்கும்  ஒரு பொண்ணுக்கிட்ட 30  நிமிஷம் பேசினாலே போதும், அவங்க ரெண்டு பேருக்குள்ள மூணு ஜென்ம நட்புன்னு புரளிய  கிளப்பரவனுங்க.  இதுல இந்த மார்க் லிஸ்ட்ல எந்த பொண்ணு பேரையாவது போடப்போக, அது எங்கயாவது  வினையில  வந்து முடிஞ்சுட போகுதுன்னு யோசிச்சு, எங்க பள்ளியிலேயே யாருக்கும் இல்லாத பேரா யோசிச்சு ‘ஹரிணி’ ன்னு ஒரு பொண்ணு பேரை அந்த லிஸ்ட்ல போட்டேன். (அப்படி எதுக்கு பொண்ணு  பேரை சேர்க்கணும்னு நீங்க கேக்கறது புரியுது.  ஒரு  மார்க் லிஸ்ட்-ன்னு  இருந்தா பொண்ணுங்க பேரு இருக்க வேணாமா? 🙂 ).

சிலர் வேற பொண்ணுங்க பேரை போட்ட மத்த பசங்களை எல்லோரோடையும் சேர்த்து நானும் ஓட்டிட்டு, எண்ண ரொம்ப புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டேன், என்னைவிடவும்   புத்திசாலித்தனமா(?),  சிலர் யோசிப்பாங்கன்னு தெரியாமலே. இதெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாளைல இருந்து, எங்க வகுப்பில இருந்த  ஒரு பொண்ணு எங்கிட்ட பேசரதயே நிறுத்திடுச்சு. 

நானும் ‘என்ன காரணமா இருக்கும்’ -ன்னு யோசிச்சு யோசிச்சு ஒண்ணும் பிடிபடாம, ‘ஏதோ, அந்த பொண்ணுக்கு நம்ம கிட்ட பேச பிடிக்கல’ ன்னு விட்டுட்டேன். அந்த பொண்ணும் பள்ளி முடியும் வரை, எங்கிட்ட பேசவே இல்லை, ஏதாவது தவிர்க்க முடியாத சமயத்தை தவிர. நான் +2 படிக்கறப்ப  அந்த பொண்ணு குடும்பம் எங்க தெருவுக்கு குடிவந்துட்டாங்க. ஆனாலும் அந்த பொண்ணு என்னிடம் பேசவெல்லாம் இல்லை. நானும் கல்லூரிக்கு போன பிறகு,  இந்த விஷயத்தை பத்தி பெருசா ஒண்ணும் கண்டுக்கவே இல்ல.

ஆனால் இந்த ரெண்டு வருஷத்தில், என் பெரியப்பா பையன், என் தங்கை எல்லாம் அந்த பொண்ணுகூட நல்ல நண்பர்கள் ஆகிட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் ஏன் அந்த பொண்ணு எங்கிட்ட பேசரதில்லன்னு விசாரணையில் இறங்கி கண்டுபிடிச்ச ( பெரிய தங்கமலை ரகசியம் 🙂 ) விஷயம்தான் என் முதல் பத்திக்கான காரணம்.

அது ஒண்ணும் பெரிய விஷயமெல்லாம் இல்லைங்க. நான் அந்த மார்க் லிஸ்ட்-ல ‘ஹரிணி’-ன்னு ஒரு பொண்ணு பேரு போட்டு இருந்தேன் இல்ல, ( ‘அது என்ன இந்த பொண்ணோட இன்னொரு பெயரா?’ ன்னு   நீங்க அறிவுப்பூர்வமா யோசிக்கிறது புரியுது.  :-). அப்படி ஏதாவது இருந்தா கூட நான் பெருசா கடுப்பாகி இருக்க மாட்டேன்.) அந்த லிஸ்ட்-ஐ எங்க வகுப்பு பொண்ணுங்க பார்த்து இருக்காங்க. அதை வச்சு என்ன மாதிரி யோசிச்சு இருக்காங்கன்னு  அடுத்த பத்தியில்  பாருங்க.

” ஹரிணிங்கறது ஒரு பின்னணி பாடகியோட பேரு. நம்ம கிளாஸ்ல நல்லா பாடற பொண்ணு யாரு? இதோ இவதான். ஹே, அப்போ அவன் இவள நெனச்சுதான் அப்படி ஒரு பேரை போட்டு இருக்கான். உனக்கு அவன் ‘ஹரிணி’ ன்னு பேரு வச்சு இருக்காண்டி”.

இதுதாங்க காரணம். நீங்களே சொல்லுங்க, ‘இதை கேள்விப்பட்ட உடன்  உங்களுக்கு கோபம் வருமா? வராதா?’.  இதை தெரிஞ்சுக்கிட்ட பிறகு தெரியாமலேயே  இருந்திருக்கலாம்ன்னு தோணுது.  

Advertisements
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!!

4 thoughts on “எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!!

  1. //” ஹரிணிங்கறது ஒரு பின்னணி பாடகியோட பேரு. நம்ம கிளாஸ்ல நல்லா பாடற பொண்ணு யாரு? இதோ இவதான். ஹே, அப்போ அவன் இவள நெனச்சுதான் அப்படி ஒரு பேரை போட்டு இருக்கான். உனக்கு அவன் ‘ஹரிணி’ ன்னு பேரு வச்சு இருக்காண்டி”.//

    பொண்ணுங்க வில்லங்கமாகத்தான் யோசிப்பாங்கப் போல
    🙂

    நினைவு துணுக்கு நன்றாக இருந்தது

  2. […] எவ்வளவுக் கொடூரமா யோசிப்பாங்கன்னு ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அதனால என்னதான் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s