பொய் சொல்ல போறோம்

எனக்கு எப்பவுமே பொய் சொல்ல தெரிந்ததில்லை (உண்மையாதாங்க!!). எப்போ பொய் சொன்னாலும் கொஞ்ச நேரத்தில்  மாட்டிக்கிட்டு  மன்னிப்பு  கேக்கறதுதான்  நம்ம வழக்கம். உடனேயே மாட்டறோமா, இல்ல கொஞ்ச நேரம்/நாள் கழிச்சு மாட்டறோமாங்கறதுதான் வித்தியாசம். இதனாலேயே சில ரகசியங்களை என்னிடம் என் நண்பர்கள் சொல்றதே இல்ல.

இப்படித்தான் நான் ஒன்பதாவது படிச்சுட்டு இருக்கும்போது வீட்டில ரொம்ப கேட்டு ஒரு சைக்கிள் வாங்கினேன். சைக்கிள்ல பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி(rear view mirror) எல்லாம் வைத்து பாக்க ரொம்ப நல்லா இருந்தது.  அந்த சைக்கிள்ல ஒரு நாள் முதல் முறையாக என் தங்கையை பின்னால் உக்காரவைத்து கோவிலுக்கு கூட்டிபோனேன்.

திடீருன்னு சைக்கிள ஒரு குழிக்குள்ள விட்டு கீழே விழ, நாங்க ரெண்டு பெரும் எப்படியோ அடி இல்லாம தப்பித்தோம். ஆனா சைக்கிள் கீழே விழுந்து கண்ணாடி உடைந்து போனது. எனக்கோ ரொம்ப பயம். சைக்கிள் வாங்கி மூணாவது நாளே கண்ணாடியை உடைத்துக்  கொண்டுபோனால், நிச்சயம் திட்டு/அடி விழும். அதை விட மிக முக்கியமாக பள்ளிக்கு சைக்கிள் கொண்டு போக விட மாட்டார்கள். சைக்கிள் வாங்கியதன் முழு பலனே அதை மற்ற மாணவர்களிடம் பெருமைய காமிக்கறதிலதான இருக்கு.

ஆனா எப்பவும் என்னை மாட்டிவிடறதிலயே குறியாக இருக்கும் என் தங்கை, அதிசயமா இந்த தடவை உதவி பண்ணறேன்னு சொன்னாள். அவள் என்னை மாதிரி எல்லாம் கிடையாது. அவள் பொய் சொன்னான்னா, பின்னாடி நமக்கு உண்மை தெரிஞ்சாலும், உண்மையான விஷயத்தை தான் சந்தேகப்படுவோம். அவ்வளவு திறமை அவளுக்கு பொய் சொல்லறதுல. :-).

அதுக்கப்புறம் அவள் என்னிடம் ‘எப்படியும் உனக்கு பொய் சொல்ல வராது. நானே சொல்லிக்கிறேன். நீ ஆமாம் ஆமாம்ன்னு தலைய மட்டும் ஆட்டு’ ன்னு சொன்னாள். சொன்னதை போலவே வீட்டில் வந்து ‘கோவில்ல சைக்கிள்ல நிறுத்திட்டு சாமி கும்பிட்டுட்டு இருக்கும்போது அங்க விளையாண்டுட்டு இருந்த பசங்க தள்ளிவிட்டுட்டாங்க’ ன்னு அருமையா ஒரு பொய்யை தயாரிச்சு சொல்ல, எங்க அம்மா அப்பாவும் நம்பிட்டாங்க.

சரி, திட்டுல இருந்து தப்பிச்சமேன்னு நான் பாட்டுக்கு அமைதியா இருந்திருக்கலாம். அம்மா வெளிய இருக்காங்கன்னு நெனச்சு உள்ள போய் என் தங்கைக்கிட்ட நன்றி எல்லாம் சொல்லிட்டு இருக்கும்போது எங்க அம்மா உள்ள வந்து அரை கொறையா கேட்டுட்டாங்க. அவங்களுக்கு என் தங்கைக்கிட்ட இருந்து உண்மையை வரவைக்க முடியாதுன்னு தெரியும்.  அதனால என்ன கூப்பிட்டு விசாரிக்க, என் தங்கை எவ்வளவோ முயற்சி பண்ணியும், நான் உண்மையை உளறிட்டேன்.

‘உண்மையை சொல்லற பையனையும் கெடுக்கிறயா’ன்னு அவளுக்கு செம அடி. அதில இருந்து எனக்கு உதவி பண்ணற வேலைய அவள் எப்பவும் செய்ததில்லை. எப்பவும் போல சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு பண்ணி வீட்டுல திட்டு வாங்கி வைக்கிற வேலைய தொடர ஆரம்பிச்சுட்டா. என்ன, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு, நல்லா சைக்கிள் ஓட்ட கற்கும்வரை நீ நடந்தே போன்னு தண்டனை குடுத்துட்டாங்க.  அவங்கள நம்ப வச்சு சைக்கிள பள்ளிக்கு எடுத்துட்டு போறதுக்கு ஒரு ஆறு மாதம் ஆச்சு.

Advertisements
பொய் சொல்ல போறோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s