Inception – கனவுகளின் உலகம்

இங்கே பெங்களூரில் எல்லோரையும் சில வாரங்களாக ஆடி வைத்துக்கொண்டுள்ள படம் inception. சத்தியமாக இப்படியெல்லாம் கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என ஆச்சர்யப்படுத்துகிறார் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan). நம் சினிமாக்காரர்கள் பலர் இன்னும் கனவுகளில் கதாநாயகியை துகிலுரித்துகொண்டிருக்க, இவரோ ‘அடுத்தவரின் கனவுக்குள் புகுந்து பார்த்தால் என்ன?’ என்று யோசிக்கிறார்.

இவ்வளவு சிக்கலான ஒரு கதையை அனைவருக்கும் புரியும்படியாக எடுத்ததே மிக பெரிய விஷயம். அதையும் இவ்வளவு விறுவிறுப்பாக ஒருவரால் சொல்ல முடியும் என்றால் உண்மையிலேயே இவர் பெரிய ஆள் தான். நோலனுடைய முந்தைய படங்களான Dark Knight, Memento படமெல்லாம் பார்த்து இருந்ததால் இவர் மேல் ஏற்க்கனவே ஒரு பெரிய மரியாதை இருந்தது. இந்த படத்தின் மூலம் அதை இன்னும் பல மடங்கு உயர்த்திவிட்டார் மனுஷன்.

கதையை முழுமையாக சொல்லிவிட்டால் படத்தை இனிமேல் பார்ப்பவர்களுக்கு படம் பார்க்கும் போது ஆர்வம் குறைந்து விடும் என்பதால் படத்தின் ஒன் லைனை மட்டும் சொல்லலாம். கதைப்படி அடுத்தவர் கனவுக்குள் போய் நமக்கு தேவையான தகவல்களை அவர்களது ஆழ்மனதிலிருந்து (Subconcious Mind) எடுப்பதும், சில விஷயங்களை ஆழமாக புதைப்பதும் சாத்தியம். அதை செய்யும் ஒருவன் தான் நமது நாயகன். அது போன்ற ஒரு வேலையின் போது அவன் மற்றும் அவன் நண்பர்களின் அனுபவம் தான் கதை.

 கனவு, கனவுக்குள் கனவு என செல்லும் திரைக்கதையில் ஒரு சில வினாடிகள் கவனத்தை சிதறவிட்டால் கூட கதை புரியாது என்பதால் நான் பார்த்த திரையரங்கில் யார் முகத்திலும் ஈயாடவில்லை.

 கதையின் படி கதாநாயகன் டிகாப்ரியோ (Di Caprio), தான் வைத்திருக்கும் பம்பரத்தை சுழல விட்டு அது கீழே விழுந்தால் அது நிஜ உலகம் என்றும், விழாமல் சுத்திக்கொண்டே இருந்தால் அது கனவுலகம் என்றும் கண்டறிவான். படத்தின் இறுதி காட்சியில், அனைத்து நிலை கனவுகளில் இருந்தும் வெளி வந்த பிறகு, அவன் சுற்றும் பம்பரம் கீழே விழுந்ததா இல்லையா என்பதை காண்பிக்காமலே படத்தை முடித்து விட்டார்கள்.

எனவே, அந்த பம்பரம் கீழே விழுந்துவிட்டால் பிரச்சினையில்லை. அது விழாது என்று யோசித்தால், ‘இது எந்த நிலை கனவு? எப்படி இங்கே வந்தான்?’ என பல கேள்விகள் மனதில் எழும்.

‘ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வந்து எவ்வளவு நேரம் அந்த படத்தை பத்தி விவாதிக்கிறோமோ, எவ்வளவு நாள் அதன் பாதிப்பு நமக்கு இருக்கிறதோ அவ்வளவு சிறப்பான படம் அது’ என்பது என்னுடைய கருத்து. அதன்படி பார்த்தால் இன்னும் படத்தின் பாதிப்பு எங்களில் யாருக்கும் போகவில்லை. இன்னமும் கதையை பத்தி விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

எனவே என்னை பொறுத்தவரை நான் பார்த்த திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பான படைப்புகளில் ஒன்றாக இது அமையும்.

இன்னொரு முக்கியமான விஷயம். படத்தை திரையரங்கில் பார்க்கவும். வீட்டில் பார்த்தால் நிச்சயம் சில தடங்கல்கள் ஏற்படலாம். நான் ஏற்க்கனவே சொன்னது போல, சில இடங்களில், ஒரு சில வினாடிகள் கவனம் சிதறினால் கூட படம் புரிவது கடினம். அது மட்டுமல்லாமல் இவ்வளவு சிறப்பான ஒரு கற்பனையை திருட்டு VCD இல் பார்ப்பது எனக்கு சரியாக தோன்றவில்லை.

Advertisements
Inception – கனவுகளின் உலகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s