பொன்னியின் செல்வன்

எனக்கு பிடித்த தமிழ் புதினங்களில் முதன்மையானது. சில ஆங்கில  வரலாற்று  புதினங்களை  படித்துவிட்டு,  ஏன் தமிழில் இது போன்ற புதினங்கள்  வருவதில்லை  என்ற  கேள்விக்கு என்  நண்பனின் பதில் இந்த புதினம்.  இதை  படித்த பிறகு கல்கியின் எழுத்து மீது மட்டுமல்ல தமிழ் வரலாற்று மீதும் தனி காதல் பிறந்தது.
 
வரலாற்று நிகழ்வுகளை தமிழிலும் இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியும் என நிரூபித்தவர் கல்கி. புதினத்தை படித்து முடித்த பிறகு, இது பற்றி வலையுலகில் தேடியபோது, பல நிகழ்வுகள்  கதையின் சுவாரசியத்திற்காக கல்கியால் சேர்க்கப்பட்டவை என தெரிந்த பின்பு அவரது ஆற்றலின் மேல் மேலும் மரியாதை உண்டானது.
 
ஆனால் அவராலும் ஒன்றை செய்ய முடியவில்லை. அது, ராஜராஜ சோழனின் கதாபாத்திரம். கதையின் தலைப்பில் இருந்தே, கல்கியின் நாயகன் ராஜராஜன் தான் என்பது தெரியும். ஆனால் அவரால் ரசிகர்களின் மனதில் ராஜராஜனை நாயகனாக அமர வைக்க முடியவில்லை.
 
ராஜராஜனின் அறிமுகத்திற்க்கே பல பக்கங்களை செலவிட்டு இருந்தார் கல்கி. ஆனால் வந்தியத்தேவன் அளவுக்கு ராஜராஜன் என்னை கவரவில்லை. (பலரும் இதையே சொல்லி இருப்பதை  பின்னால்  வலையுலகில்  உலவும்  போது  தெரிந்து கொண்டேன்).
 
என்னை பொறுத்தவரை பொன்னியின் செல்வன் என்றவுடன் நினைவுக்கு வருபவன் பொன்னியின் செல்வன் இல்லை. :-). வந்தியத்தேவன் தான். ராஜராஜன் ஒட்டாமல் போனதுக்கான முக்கிய காரணம், அவனின் பாத்திர படைப்பு. எந்த தவறும் செய்யாத Mr.Perfect அவன். அதனால் என்னால் அவனோடு  ஒப்பிட  முடியவில்லை.
 
வந்தியத்தேவனோ, சாதாரண மனிதன். நாம் செய்யும் அனைத்து தவறுகளையும் தானும் செய்து, நம்மில் ஒருவனாக நிலைத்து விட்டான். ராஜராஜனின் பெருமையை பற்றி மற்றவர் கூறும் பொது, வந்தியத்தேவனுடன் சேர்ந்து நானும் வியந்தேனே தவிர, நான் ராஜராஜனாக இருக்க விரும்பவில்லை.
 
வந்தியதேவனுக்கு அடுத்து என்னை கவர்ந்த கதாபாத்திரம், ஆதித்த கரிகாலன்.  இளம் வயதினருக்கே உரிய கோபம், ஆத்திரம், வீரத்துடன் இறந்து போகும் ஆதித்தனும் ராஜராஜனை விட என்னை அதிகம் கவர்ந்தான்.
 
பிறகு குந்தவை. வந்தியத்தேவனுடன் காதல் பேசும்போது நம்மையும் காதல் கொள்ளவைக்கிறாள். குந்தவை மற்றும் வந்தியதேவனின் காதல் பகுதிகள் நிச்சயமாக நம் மனதை அள்ளும் புத்துணர்ச்சியான  பகுதிகள்.
 
கல்கி எதிர்பார்த்ததை போலவே, நந்தினியின் மேல் காதல் வரவில்லை என்றாலும் அவள் என்னை கவர்ந்ததென்னவோ உண்மை. மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்  குந்தவை,  நந்தினி  இருவரையுமே  அழகானவர்களாக மட்டுமில்லாமல் அறிவானவர்களாகவும் காண்பித்து இருப்பார், கல்கி. (எப்போ பாத்தாலும் ஹீரோயின லூசாவே காமிக்கற இந்த காலத்து  இயக்குனர்களெல்லாம்  கொஞ்சம்  இந்த  புதினத்தை படிங்கப்பா).  
 
எனக்கு புரியாத இன்னொரு விஷயம், எப்படி நம்ம கோலிவுட்காரங்க இன்னும் இந்த கதையை படமா எடுக்கலைங்கறதுதான். சில வருடம் முன் கமல் இதை திரை வடிவில் கொணர முயற்சி எடுத்தாருன்னு  படித்தேன். அப்போ தமிழ் படங்களின் வியாபாரம் இதை எடுக்கும் அளவுக்கு இல்லைன்னு  நெனைக்கிறேன்.
 
ஆனா இப்போ எந்திரனுக்கு பிறகாவது யாராவது இதை முயற்சி பண்ணலாம். என்னை பொறுத்த வரைக்கும் கமலை தவிர வேற யாரும் தகுதியானவங்க இல்லைன்னு நெனைக்கிறேன். ஆனாலும் இப்போ கமல் வயசுக்கு, வந்தியத்தேவனா நடிச்சா நல்லா இருக்குமான்னு தெரியல. வேணும்னா ஆதித்தனா நடிக்கலாம்.
 
புதினத்தை ஆன்லைனில் படிக்க இங்கே செல்லவும்.
 
Advertisements
பொன்னியின் செல்வன்

2 thoughts on “பொன்னியின் செல்வன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s